தொடர்கள்
பொது
புத்தாண்டு பொறந்தாச்சா? – மோகன் ஜி, சித்திரம் :தேவா

20250001134958842.jpg

புத்தாண்டு பொறந்தாச்சா?

வாட்ஸப்பிலே வாழ்த்துகளா அனுப்பி, வந்ததற்கெல்லாம் விரல் தேய

விஷ் யூ தி சேம் போட்டு முடிச்சிருப்பீங்க…

இனிமேல் நம்ம வேலையைப் பார்க்கலாமா?

நாளும் நாலு பக்கமாவது உருப்படியான எழுத்தா தேடிப் படிக்கலாம்.

ஒரு பக்கமாவது வர்றாப்பல ஒரு பதிவு எழுதலாம்.

எழுத ஏதும் தோணலைன்னா ‘ஶ்ரீராமஜெயம்’ ஒரு பக்கத்துக்கு லிகித ஜபமா எழுதலாம்.

கொஞ்சம் இணைய மேய்ச்சலைக் குறைத்துக் கொண்டு வாக்கிங் போய் ஆரோக்கியம் பேணலாம்.

எதிர்ப்படுறவங்களைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தபடி நடக்கலாம்.

மனைவிக்குக் கணவன் கொஞ்சம் ஒத்தாசை பண்ணலாம். இல்லைன்னாலும், ‘நை.. நை’ன்னு உபத்திரவம் பண்ணாம இருக்கலாம்.

மனைவீஸ்லாம் உப்புமா பண்றதைக் குறைச்சுகிட்டு வேற டிபன் பண்ணலாம்.

நமக்கு மிச்சமிருக்கும் வாழ்நாளுக்கு இதுவே முதல்நாள்ங்கிற நினைப்பு எப்போதும் செயலூக்கம் தரும்.

சாதனைன்னா எவரெஸ்ட் உச்சியைத் தொடறது; டி20ல சென்ச்சுரி அடிக்கிறதுல்லாம் மட்டுமில்லே….

நாலுபேருக்கு ஏதோ வகையிலே சந்தோஷம் கொடுக்கறதும்,

நம்மை நாமே ஜெயிக்க முயற்சி பண்ணுறதும் தான்.

இந்த வாழ்க்கையிலே பெரிய பெரிய விஷயங்களால ரொம்பறது அதிகமில்லே…

சின்னச் சின்ன சந்தோஷப் பொட்டலங்களால் அர்த்தம் கொள்ளும் பயணம் அது.

உற்சாகமா இருங்க…

கவலைகளை இடது கையால ஒதுக்கிட்டு போய்க்கிட்டே இருங்க…

இலேசான மனசு, மிதமான உறவு, மேலான நட்பு, அறாத நம்பிக்கை..

அவ்வளவு தாங்க நிறைவான வாழ்க்கையின் சூத்திரம்.

மீண்டும் சந்திப்போம்.

பி.கு : என்னதிது நம்ம பல்ப் சீரீஸ் தொடர் எழுத்தாளர் மோகன் ஜி மனோவியல் பற்றி பேசிகிறார். ம்ம்..ஏதோ இருக்கும். அவருக்கும் ரிடர்ன் வாழ்த்துக்களை விஷ் யூ தி சேம்னு சொல்லிட்டேன்,