அண்ணன் முருகனுக்கு ஆறு படை வீடு என
திருத்தணி
சுவாமிமலை
திருப்பரங்குன்றம்
பழமுதிர் சோலை
பழனி
திருச்செந்தூர்
உண்டென்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அதே போல முருகனின் தம்பி அய்யப்பனுக்கும் ஆறு படை வீடு உண்டு. மேலும் அவை மனித உடம்பில் உள்ள ஆறு முக்கிய சக்ரங்களை பிரதிபலிக்கிறது.
அவை முறையே
தமிழகத்தில் உள்ள பொன்சொறிமுத்தைய்யனார் கோயில். மூலாதார சக்ர ஸ்தலம்.
கேரளத்தில் உள்ள குளத்துப்புழை. அனாஹதா சக்ர ஸ்தலம். இங்கு பாலகனாக அருள் பாலிக்கிறார்.
தமிழகத்தில் உள்ள ஆரியன்காவில் அய்யன். மணிபூரக சக்ர ஸ்தலம். அய்யனாக, குமரனாக காட்சி தரு ஸ்தலம் இது.
கேரளத்தில் உள்ள அச்சன் கோயில். ஸ்வாதிஷ்டான சக்ர ஸ்தலம். இங்கு சாஸ்தா அரசனாக வீற்றிருக்கிறார்.
கேரளத்தில் உள்ள எரிமேலி. விஷுத்தி சக்ர ஸ்தலம். இங்கு கிராத சாஸ்தாவாக அருள் பாலிக்கிறார்.
கேரளத்தில் உள்ள சபரிமலை. ஆக்ஞ்ய சக்ர ஸ்தலம். இங்கு நைஷ்டிக பிரம்மச்சாரியாக யோகீஸ்வரனாக அமர்ந்து இக்கலியுகத்தில் மனித குலம் உய்ய தவக்கோல்ததில் காட்சியளித்தபடியே அருள் பாலிக்கிறார்.
சுவாமியே சரணம் அய்யப்பா.
Leave a comment
Upload