தொடர்கள்
பொது
ஆஷாட சுக்ல ஏகாதசி கொண்டாட்டங்கள் – பண்டரிபுரத்திலிருந்து நேரடியாக ரிப்போர்ட் 1 - பால்கி

ஸ்தல மகிமை

20240709215730127.jpg

[பாண்டுரங்கன் சன்னிதி. மூலஸ்தானம். இந்த திருமூர்த்தியைத் தொட்டு வணங்கலம் என்பதுதான் சிறப்பு]

இங்கு பண்டர்பூர் என அழைக்கப்படும் பண்டரிபுரத்திற்கு வார்கரி செல்லும் வாரி என்பது ஆஷாட சுக்ல ஏகாதசிக்கு (ஆடி மாத வளர்பிறையின் பதினோறாம் நாள்) சுமார் 250 கிமீ தூரத்தை 17 நாட்களில் பாதசாரியாய் கடப்பதைக் குறிக்கிறது.

20240709215839757.jpg

அந்த வாரியில் பங்கு கொள்ளும் பக்தர்களை வார்க்கரி என்றழைப்பர். இந்த யாத்திரை ஒரு நடைப்பயணம் அல்ல, மாறாய், நம்பிக்கை, கலாச்சாரம், பாரம்பர்யத்தின் கொண்டாட்டங்கள்தான் என்று சொல்ல வேண்டும். ஏகாதசிக்கு முதல் நாள் பண்டரிபுரம் வந்தடைவார்கள்.

நாங்கள் மும்பையிலிருந்து 15ஆம் தேதி காலை பண்டர்பூர் ரயில் நிலையத்தை அடைந்தோம். ஏகாதசியோ 17ஆம் தேதிதான். இருந்தாலும், ரயிலடியிலிருந்து சுமார் ஆறு கிமீ தூரத்திலிருக்கும் ஊரின் எல்லையை அடையும் வரை குவிந்து கொண்டிருக்கும் பக்த கோடிகளின் கூட்டம் சிறு துளி பெரு வெள்ளம் போல் என வெள்ளக்காடாகிக் கொண்டிருந்தது.

அந்த வெள்ளத்தில் அந்த ஊரே மூழ்கிக்கொண்டிருந்தது. ஒரு NDRFம் வரவில்லை. ஆயிரமாயிரமாய் நாட்கள் கடக்கக் கடக்கக மூழ்கியவரின் எண்ணிக்கை லட்சத்தை எட்டி லட்சங்களைத் தாண்டிட, வந்தவரனைவருமே மூழ்கிட விளக்கினைக்கண்ட விட்டில் பூச்சி போலே வண்டி வண்டியாய், லாரி லாரியாய், ரயில் ரயிலாய், நடை நடையாய் மூழ்கிடவே வந்தவண்ணமிருந்தனர்.

அன்றிலிருந்தே ஊருக்குள் பேருந்துக்கள் பெரிய லாரிகள் ரயிலடி அருகிலேயே நிறுத்தப்பட ஆரம்பித்தன. ஆட்டோக்கள் ஒன்று தான் ஊரின் எல்லை வரை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தன. நான்கு மடங்கு சார்ஜில் ஊர் எல்லையில் இருந்த எங்களது ஹோட்டலை அடைந்தோம்.

20240709220012672.jpg

20240709220041410.jpg

20240709220149233.jpg

20240709220448646.jpg

ஊரின் வாயிலில் வார்கரி பக்தர்களின் பிரதிபலிப்பு சிலைகள் வரவேற்றன.

20240709220954944.jpg

அருகிலேயே சீரும் குதிரையில் கம்பீரமாய் சத்ரபதி வீர சிவாஜி அமர்திருக்கும் உருவ சிலையை பாராது போவது சாத்தியமில்லை.

20240709221029909.jpg

அருகிலேயே சிடி செண்டர் மால் வணிக வளாகத்தின் நான்காம் மாடி தள உயரத்தில் பெரிய சிசி டீவீ வைத்து விட்டலனது கோயில் கர்ப கிரஹத்திலிருந்து விட்டலனையும் ருக்மிணியையும் பக்தர்கள் மனதார பாதம் பற்றித் தொழும் நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது.

பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் வரிசையில் நின்று நேரடி தரிசனம் என்ற நிலை ஆஷாட சுக்ல ஏகாதசி தினம் நெருங்க நெருங்க 24 மணி முதல் 36 மணி நேர காத்திருபபு என்பது நடைமுறையானது.

இந்த நிலையில் நேரடி தரிசனத்திற்கு செல்ல இயலாதவர்க்கு இந்த ராட்சத அளவிலான டீவீ ஒளிபரப்பு ஒரு வரப்பிரசாதம்.

நிஜமாகத்தான்.

சாதாரண நாளில் சுமார் ஒரு லட்சம் ஜனத்தொகை கொண்ட இந்த பண்டர்பூர் க்ஷேத்திரம் பத்து முதல் நாற்பதாயிரம் அளவிலான யாத்ரிகர்கள் புழங்குமிடம்.

ஜூன் ஜூலையில் ஆடி மாதம் வருமே வளர்பிறை ஏகாதசி, அதாவது, வட இந்தியாவில் அந்த நாளை ஆஷாட சுக்ல ஏகாதசி என்பார்கள், அந்த நாள் எப்போ வரும்? எப்போ வரும்? என்று அந்த திருநாள் வைபவத்திற்கு என விட்டலனது பக்தர்களின் எண்ணிக்கை பல நூறு கி.மீ தூரத்தை பாத யாத்திரையாகவும் மற்றவர் கிடைக்கும் ரயில், சாலை, ஊர்திகளிலும் என சுமார் இருபத்தைந்து லட்சங்களைத் தாண்டிவிடுகிறது.

இதில் திளைத்து கரைந்து போக, இந்த வருடம் நான்காம் முறையாக அந்த திருவிழாக் கொண்டாட்டங்களில் அர்பணித்துக்கொண்டு பேறு பெற்றவன் என்ற முறையில் கூறுகிறேன்.

சொல்லப்போனால், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மூத்தோரும் சான்றோரும் உரைத்த படியே எனது ஆனந்த உணர்வினைப் பகிர எண்ணுகையிலேயே உருவானதுதான் இது, உணர்ந்ததை உணர்ந்தபடியே எழுதுகிறேன். அடுத்த வருடம் நீங்களும் சென்று உணர வேண்டும்.

20240709221157835.jpg

20240709221619390.jpg

கடைகள் ஓய்வின்றி நல்ல வியாபாரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

20240709221702356.jpg

2024070922192566.jpg

ஊருக்குள் வந்தடங்கிக் கொண்டிருந்த பக்தர்களும் அந்த ஊரில் இருக்கும் விட்டலன் லீலைகள் நடந்த இடங்கள் மற்றும் அவனது தலையாய பக்த சந்த்துக்களின் சமாதிகளைத் தரிசிப்பதும், சந்திரபாகா புண்ணிய நதியில் நீராடுவதுமாய் தங்களின் நேரத்தைக் குதூகுலமாக கழித்த வண்ணமிருந்தனர்.

20240709222124643.jpg

பணிக்கப்பட்டிருந்த காவலாளர்களும் பொறுமையோடு மாவூலி மாவூலி என்றே நன்முகமன் கூறி நகர்ந்தவாரு இருங்கள், ஜாக்கிரதையாக நகருங்கள் உங்களுக்கு முன்னால் சந்த நாம் தேவின் பால்கி செல்ல அனுமதியுங்கள் என்றே ஓங்கி கூறும் அதிகார குரலுக்கு சொந்தக்காரர்களாக இருந்தும் அன்போடே மைக்கில் ஒலித்துக்கொண்டிருந்தனர். செம ஜாலி மூடில் இருந்தனர்.

20240709222213495.jpg

ஐந்து நாட்களாக அங்கு அந்த லட்சங்களில் கரைந்து போனோம். பக்தி வெள்ளத்தில் திளைத்துப்போனோம். தனித்துவ அடையாளங்கள் ஆதார் அட்டையில் பதிந்திருந்தாலும் அது அந்த த்ருட பக்தி வெள்ளத்தில் கரைந்தே போனது. இப்படியே இருந்துவிடாதா என்நாளும், இனி வரும் நாளும் என்றே ஏங்கியது மனம். எண்ண எண்ணக் குறைவில்லாத ஏதோ ஒரு தனி பரமானந்தம் சூழ்ந்தது.

அவனை அடைய அவனையே சரணாகதி செய்வது. இவ்வனைத்தும் உபன்யாசங்களில் கேட்டுள்ளோம்.

அதையும் காண்பிக்கிறேன் அடுத்த வாரம்…..

சென்ற வருடம் இந்த திருவிழா பற்றி நமது விகடகவியில் வந்த எனது கட்டுரயின் லிங்க் இதோ.

https://www.vikatakavi.in/magazines/276/10091/aashada-sukla-ekadasi-celebra

ராம்க்ருஷ்ண ஹரி. வாசுதேவ ஹரி.

கோஷம் அடினாதமாக எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன.