தொடர்கள்
கவர் ஸ்டோரி
இந்த வருட பட்ஜெட் !!-விகடகவியார்

20240626181703153.jpeg

நன்றி: தினமணி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் 2024 -25ம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்டது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இயற்கை விவசாயத்தில் ஒரு கோடி விவசாயிகள்.

முதல் முறை வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு மாத சம்பளம் ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி .மாணவரின் உயர்கல்விக்கு 10 லட்சம் வங்கி கடன். நகரங்களில் ஏழைகளுக்கு ஒரு கோடி வீடு சலுகை ,இப்படி பல அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் இது ஒரு ஜனரஞ்சகமான பட்ஜெட் என்று குறிப்பிட்டார்.

ஆந்திர மாநிலம் மறுசீரமைப்பு சட்டத்தின்படி ஆந்திராவுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை பூர்த்தி செய்ய பல்வேறு வளர்ச்சித் துறைகள் மூலம் இந்த நிதி ஆண்டில் 15000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.

ஆந்திராவைப் பொருத்தவரை ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டு மாநிலங்களாக பிரிந்த பிறகு தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் போய்விட்டது.

ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான கட்டமைப்புக்கு தான் இந்த 15 ஆயிரம் கோடி.

ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சிகள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தந்து தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

பீகாரைப் பொறுத்தவரை கூட்டணி கட்சித்தலைவர் நிதீஷ்குமார் அவரும் ஆதரவு தெரிவிக்கும் போது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பீகாரில் சாலை மேம்பாலங்கள் அமைக்க 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. பீகாரின் கயா பகுதியில் தொழில்துறை முனையம். பீகாருக்கு வெள்ளம் மற்றும் பேரிடர் நிவாரண நிதியாக 11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. பீகாரில் விமான நிலையங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

20240626181937205.jpg

இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு கோரிக்கை எதையுமே நிறைவேற்றவில்லை என்று தனது கடும் கண்டனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு செய்திருக்கிறார்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டம் பற்றி பேச்சே இல்லை.

தமிழ்நாடு தொடர்ந்து இரண்டு பேரிடர் இழப்புகளை எதிர்கொண்டது. இதை சீர் செய்யப் போறிய நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியும் தமிழகம் பற்றி எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கை இல்லை.

தமிழகம் ,தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இந்த பட்ஜெட்டில் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது திருக்குறள் எல்லாம் சொல்வார் அது கூட சொல்லவில்லை என ஆதங்கப்பட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த புறக்கணிப்பை கண்டித்து 27-ஆம் தேதி நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

காங்கிரஸ் கட்சியும் தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக இப்படி ஒரு பட்ஜெட் என்று விமர்சனம் செய்திருக்கிறது.

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை மத்திய அரசு இளைஞர்கள் விவசாயிகள் பெண்கள் ஏழைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள நல திட்டங்கள் எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து தானே அதில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலம் திமுக ஆளும் மாநிலம் என்று எப்படி பாரபட்சம் பார்க்க முடியும் என்று கேட்டிருக்கிறது.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம் என்ற ஜல் சக்தி திட்டத்தை இந்தியாவில் முழுமையாக நிறைவேற்றிய மாநிலம் என்று மத்திய அரசு சென்ற ஆண்டு தமிழக அரசிற்கு விருது கொடுத்து கௌரவித்தது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கான பயனாளிகள் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

மத்திய அரசின் நிதி ஆயோக் 2023- 24 அறிக்கையில் வறுமை ஒழிப்பு ,சுற்றுச்சூழல், பராமரிப்பு குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி , பசிப்பிணி அகற்றல், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்பு தரமான கல்வி மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு தொழில் வளர்ச்சி ,புத்தாக்க தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் சமத்துவமின்மையை குறைத்தல் உற்பத்தி மற்றும் நுகர்வு அமைதியை காத்தல் நிதி நிர்வாகம் வலுவான நிறுவனங்கள் பாலின சமத்துவம் இவற்றில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகவும் நிதி ஆயோக் தன்னுடைய அறிக்கையை தெரிவித்திருக்கிறது. இது தமிழக அரசு நாளிதழ்களில் பெரிய அளவு விளம்பரம் செய்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது .

தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்ற முதல்வரின் கூற்று உண்மைதான். ரயில்வே மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டில் பாரபட்சம் காட்டுகிறது. காங்கிரஸ் அரசும் இதேதான் செய்தது.

பேரறிஞர் அண்ணா இதைக் குறிப்பிட்டு வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று விமர்சனம் செய்தார் இப்போதும் அதே நிலை தான். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நீங்கள் எங்கள் அணிக்கு 25 பாராளுமன்ற உறுப்பினர்களை தந்திருந்தால் தமிழ்நாட்டுக்கும் நிறைய சலுகைகள் கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டு பாரதிய ஜனதாவின் உள் மனசை அவரே வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டார்.

பல திட்டங்களில் ஊழல் முறைகேடு கமிஷன் காரணமாக அந்த நல திட்டங்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் தான் இப்போதும் உள்ளது. அங்கு அடிக்கடி இடிந்து விழும் மேம்பாலங்களே சாட்சி.

பட்ஜெட் என்பது திட்டம் தான் நிதி ஒதுக்கீடு அந்த திட்டம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை கவனித்து தான் அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாடு இருக்கும்.

எந்த அரசியல் கட்சித் தலைவரும் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு இன்றைய நிலைப்பற்றி கேட்பதும் இல்லை அது பற்றி ஆளும் தரப்பு விளக்குவதும் இல்லை என்பதும் உண்மை.

பாராளுமன்றத்தில் இதுவரை நிதிநிலை அறிக்கையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்கவில்லை.

அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதும் ஆளுங்கட்சி அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றிக் கொள்வதில் தான் கவனம் செலுத்துகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலோ பேசும்போது சில திட்டங்களை நான் வரவேற்கிறேன்.

அதே சமயம் இறக்குமதி பொருட்களின் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் பிரதமர் அடிக்கடி மேக் இன் இந்தியா என்று பொறுமையாக பேசுகிறார் அதை செயல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டவர் மகாராஷ்டிராவுக்கும் நீங்கள் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மகாராஷ்டிராவில் உங்கள் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது என்று பேசினார்.

ஒடிசாவை சேர்ந்த பாஜக உறுப்பினர் ஒடிசாவுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற தனது கருத்தை பதிவு செய்தார்.

ஒடிசா மாநிலத்தில் தற்சமயம் பாஜக ஆட்சி நடக்கிறது. எனவே விமர்சனங்கள் எப்போதும் தொடர்ந்து இருந்து கொண்டே இதுதான் இருக்கும் என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள்.

இவை எல்லாவற்றையும் விட மிகவும் கவலை அளிக்கக் கூடியது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் அதற்கு முன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார அறிக்கை. அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பல தகவல்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது.

பொருளாதார ஆய்வு இருக்கையில் நம் நாட்டில் வேலைவாய்ப்பில் 45 சதவீதம் விவசாயம் சார்ந்ததாக இருக்கிறது. வேலைவாய்ப்பில் சரி பாதி வழங்கக்கூடிய விவசாயத்தில் 85 சதவீதம் பேர் சிறு விவசாயிகள். அவர்கள் விவசாயத்துக்கு தேவையான ஆட்கள் கிடைக்காத நிலையில் இயந்திரங்களை பயன்படுத்தும் போது அந்த விவசாயம் அவர்களுக்கு லாபகரமாக இல்லை என்று அந்த அறிக்கை சுட்டி காட்டுகிறது.

நாட்டின் சுயசார்பை நிறுவக்கூடிய முக்கியத்துறை விவசாயம் ஒவ்வொரு சிறு விவசாயியும் தன்னிடம் இருக்கும் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு தனது குடும்பத்தை அந்த விவசாய நிலம் சார்ந்த சுய சார்பு குடும்பமாக நடத்தி வருகிறார்.

தனிநபர் நில உடமை என்பது குறைந்து விவசாயமும் இன்னொரு கார்ப்பரேட் துறையாக மாறத் தொடங்கியிருக்கிறது என்பதை அந்த அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.

விவசாயம் என்பது மாநிலம் சார்ந்த பிரச்சனை மாநில அரசுகளின் பங்கு மிக முக்கியம். இந்த பொருளாதார அறிக்கையை எல்லா மாநில அரசுகளும் படித்து சீரமைக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்..