தொடர்கள்
பொது
நீட் !! தமிழகம் சாதனை ! மாலா ஶ்ரீ

20240508074229644.jpeg

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் தற்போது சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு மனைவி சண்முகவள்ளி மற்றும் மகன் ஸ்ரீராம் உள்ளனர். இதற்கிடையே தாயும் மகனும் பொன்னேரி அருகே ஒரு தனி வீட்டில் தங்கி, பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் ஸ்ரீராம் பிளஸ் 2 படித்து, நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் டாக்டராக வேண்டும் என்ற விருப்பத்துக்கு ஏற்ப, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு நீட் தேர்வு எழுதினார்.

20240508074744366.jpeg

கடந்த 4-ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர் ஸ்ரீராம், முதல் முயற்சியிலேயே 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று, இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இதேபோல், திருவண்ணாமலையை சேர்ந்த பூர்வஜா என்ற பிளஸ் 2 மாணவியும் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். இவர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் எனக் குறிப்பிடத்தக்கது.

20240508074806863.jpeg

இதேபோல், இம்முறை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த ஏராளமான மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.