தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240507234457412.jpg

Heading : கப் நிறைய கண்ணீர்- ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் ஆரம்பிச்சதில் இருந்து ஒவ்வொரு ஊரா போய், சிங்கம் போல் கர்ஜித்து, தனது டீமான சன்ரைசர் ஐதராபாத்தை ஊக்குவித்தார் காவ்யா மாறன். ஃபைனல் மேட்ச்ல தனது அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும்னு சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்துல தனது அணியினர் கோப்பையை கைப்பற்றுவோம் என்ற பேராசையின் இருந்த காவ்யா, கையில் இருந்த லாலிபாப்பை பறிச்சதும் குழந்தை எப்படி தேம்பி அழுமோ... அந்நிலையில் காவ்யா இருந்திருப்பார். அவர் திரும்பி நின்று அழுவதை படம்பிடித்து கவர் ஸ்டோரி ஆக்கிட்டீரே

ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன் , சிங்கப்பூர்

Heading : இந்தியாவின் கௌரவ தொகுதி நீலகிரி . - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : ஆ.ராசாவின் மனசுல நீர் இடம் பிடிச்சுட்டீர்! அப்படியே நீலகிரி தொகுதியில் காடுகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல், வனவிலங்குகளுக்கு உயிர் பாதுகாப்பு உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண சொல்லுங்கள்!

ஏக்நாத், திரிபுரசுந்தரி, லாரன்ஸ் , மேட்டுப்பாளையம்

Heading : மூன்றாவது முறையாக மோடி - காயத்ரி ஸ்ரீநிவாஸ்

Comment : மேடம்... பிரதமர் மோடி குறித்து உங்க கான்பிடன்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு! ஒருவேளை, நீங்களும் முன்னாள் கவர்னரைப் போல் நீங்களும் மத்திய கேபினட் அமைச்சராக ஆசைப்படறீங்களா?!

சவுந்தர்யா, நல்லம்மை, தேவநாதன் , சிவகங்கை

Heading : மோடியின் தியானம் - விகடகவியார்

Comment : என்ன சாரே... கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 3 நாள் தியானம் செய்யப் போனார். அவ்வளவே! அதுக்கு எவ்ளோ பாதுகாப்பு கெடுபிடிகள், பில்டப் சமாசாரங்கள்? இதுல அவர் அடக்கி வாசிச்சு, கடிதம் எழுதுறாரு... இப்ப என்னாச்சு... இப்ப எல்லாம் உல்டாவா மாறி, கூட்டணி அமைச்சரவை அமைக்கப் போறாங்களா? இனி எல்லாமே உள்ளுக்குள் குடுமி பிடி சண்டைதான். அதை தீர்க்கவே, பிரதமர் மோடிக்கு நேரம் சரியா இருக்கும். பிறகு எப்படி வெளிநாடு சுற்றுப்பயணம் போறது?!

சிவராமன், சசிகலா, கிறிஸ்டோபர் , திருச்சூர், கேரளா

Heading : மீண்டும் திகார் போனார் - விகடகவியார்

Comment : ரொம்ப குறும்புக்கார ஆளுய்யா நீர்... வடிவேலு காமெடி போல், 'ஏய்... நான் ஜெயிலுக்கு போறேன் 'னு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொல்லிக்கிட்டா போனார்? இதெல்லாம் டூ மச்சுபா!

சுகன்யா, ஸ்டெல்லா, ராகவேந்திரா , விசாகப்பட்டினம்

Heading : தீர்க்கதரிசி ராகுல் ஸ்டாலின் - விகடகவியார்

Comment : விளையாட்டு பிள்ளையா சுற்றி திரிந்த ராகுல்காந்தி, தற்போது தேர்ந்த அரசியல்வாதியா மாறிட்டார் போலிருக்கே... எல்லாம் தமிழக சகோதரரின் கைவண்ணமாக இருக்குமோ?! மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி மாறிட்டா, காட்சிகள் மாறுமா? ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைச்சரவை அமைச்சிருந்தா, அக்கட்சி பழம்பெருச்சாளிகளே அமைச்சர் பதவிக்கு வாரிசு போரை ஆரம்பிச்சிருக்கும்!

ராதா வெங்கட், மாயா குப்புசாமி , பழவேற்காடு

Heading : 2572 கோடீஸ்வரர்கள் .... பாராளுமன்ற தேர்தல் - விகடகவியார்

Comment : என்னப்பா சொல்றே... 2,572 கோடீஸ்வரர்கள் எம்.பி ஆகியிருக்காங்களா... தலைக்கு மேல் பிசினஸ் இருக்கும்போது, அதை காப்பாத்திக்க வேணாமா?! முன்னாடி நம்ம ஊரு கல்வி தந்தை ஒருத்தர் எம்.பி-யாகி, நாடாளுமன்றத்துக்கு பிக்னிக் போயிட்டு வருவாராம். கேட்டா, அந்த பதவி அவர் பிசினஸுக்கு சேஃப்கார்டாம்! ஒருவேளை, தற்போது தேர்வான எம்.பி-க்கள் அம்பானி, அதானி நிறுவ பினாமியா இருக்குமோ?

சிவரஞ்சனி, திலோத்தமை, அபராஜிதா, சிவகாசி

Heading : "ஆடிப் போன மோடி " விகடகவியார்

Comment : என்னப்பா இது... 'பட்டனைத் தட்டிவிட்டா, தட்டுல ரெண்டு இட்லியும் கூடவே காபியும் வந்துடணும்'னு பாடற மாதிரி, எலெக்ஷன் ரிசல்ட் வந்த மறுநாள் அதிகாலை சுடச்சுட தேர்தல் அனலைஸ் ரிப்போர்ட் தந்துட்டீங்க! உங்க பாஸ்ட்டுக்கு எதுவும் ஈடாகாது. பாஜக மட்டுமே 241... காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சேர்ந்து 232! ஏன்னா, பலம் வாய்ந்த ஆளுங்கட்சியாச்சே...

லோகேஸ்வரி, கனகதாரா , ஒட்டன்சத்திரம்

Heading : சந்திப்போம் பிரிவோம் 11 - பொன் ஐஸ்வர்யா

Comment : அமெரிக்க வாழ் இந்தியர்களின் சமூக வாழ்க்கை அழகாக காட்சி படுத்தப் பட்டு இருக்கிறது. கோவில், பண்டிகை கொண்டாட்டம், potluck party, குழந்தைகளுக்கு ஆன தமிழ் வகுப்புகள், பழத்தோட்டம், விவசாயம் பராமரிப்பு என அதே pattern ல் அமைந்துள்ளது. CCTV காமிராக்கள் பராமரிப்பில் உள்ள sincerity நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நன்றி. சுகமாக பயணித்து கொண்டு இருக்கிறோம்

Heading : ஜூன் 4 நள்ளிரவு விகடகவி சிறப்பிதழ் !!!

Comment : Thanks to Team Vikatan for the initiative. Appreciate your dedication to the nation and readers..CA SURESH PONDICHERRY

Heading : தேவதைகளுக்குப் பெயர் உண்டு! (1)-என் குமார்

Comment : அன்பை கண்டால் பயம் போய்விடும் - அருமை.

ஆரா , Chennai

Heading : மனம் மாறிய மாரி- மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

Comment : Dr. Bhadri's Stories always inspired me. Hats off to him

MRS.P.VINITHA, Kalpakkam