தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் பெற்றோர் இணைந்த வாட்ஸ் அப் குழு தொடங்கி அதில் மாணவர்கள் பற்றிய தகவல்கள் பெற்றோருக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்காக பெற்றோர்களின் செல்பேசி எண்கள் சேகரிக்கும் வேலையில் தற்சமயம் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது பற்றிய பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் குரூப் மூலம் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரையும் பள்ளிக் கல்வித் துறையும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கண்காணிக்க முடியும். பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் அந்தத் தகவல் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் இடையில் வகுப்பை கட்டடித்துவிட்டு வெளியே செல்லும், அந்த விவரங்களும் பெற்றோருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதே போல் மாணவர்கள் முறைகேடாக நடந்து கொண்டாலும் போதைப்பொருள் பயன்படுத்தினாலும் அது குறித்த தகவல்களும் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.
இந்தக் குழுவில் இணையும் பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகள் ஒவ்வொரு தேர்விலும் பெறும் மதிப்பெண்கள், பாடங்களை கற்கும் விதம் போன்ற விவரங்களும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதேபோல் எந்தப் பாடங்களில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனர் அதற்காக பெற்றோர் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தகவல் தெரிவிக்கப்படும். இதனால் பெற்றோர் என்ன வேலையில் இருந்தாலும் தங்களது பிள்ளைகளை நேரடியாக கண்காணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும் வெளியே செல்ல முடியாது பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளவும் முடியாது. மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்த நல்ல வாய்ப்பாக இது இருக்கும் என்கிறார் கல்வித்துறை அதிகாரி ஒருவர்.
Leave a comment
Upload