தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20240424122544928.jpeg

ராகுலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ரேபரேலியில் சோனியா உணர்ச்சி பூர்வமான பேச்சு.

அம்மா அப்படியே அவரையும் கொஞ்சம் தொகுதியை பார்க்க சொல்லுங்க.

மம்தா மீது அவதூறு, பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் ஒரு நாள் தடை.

ரொம்பதான் தைரியம்.

மேகதாது சிலந்தி ஆற்றில் தடுப்பணை காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு.

இனிமேல் தொகுதி உடன்பாடு பண்ணும் போது கூட்டணி கட்சிகளுடன் இந்த தடுப்பணைகள் பற்றியும் ஒரு உடன்பாடு செய்து கொள்வது திமுகவுக்கு நல்லது.

வேங்கைவாசல் விவகாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபிசிஐடி மனு.

சிபிசிஐடிக்கு இன்னொரு பெயர் இருக்கு அதுதான் வாய்தா.

பூரி ஜெகநாதர் குறித்து அவமதிப்பு, மூன்று நாள் விரதம் இருக்கும் பாஜக வேட்பாளர்.

ராத்திரி தூக்கத்தில் ஜெகநாதர் டெபாசிட் கூட கிடைக்காதுன்னு பயமுறுத்தி இருப்பாரோ ?

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எட்டு முறை வாக்களித்தவர் கைது.

ஏன் 16 முறை வாக்களிக்க சொல்லி இருந்தீங்களா !!

நாட்டை பாதுகாக்க மோடியை அகற்ற வேண்டும் கெஜ்ரிவால்.

உங்களையே ஜூன் இரண்டாம் தேதிக்கு பிறகு அகற்றி தீகார் ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்க நீங்க பேசுறீங்க !!

காரில் வைத்து விற்பனை செய்த 400 கிலோ குட்கா பறிமுதல் வாலிபர் கைது.

நடமாடும் குட்கா விற்பனை நிலையம் வைத்திருக்கிறார் போல இருக்கு !!

நான் பார்த்து நெகிழிந்த ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி செல்லூர் ராஜு திடீர் பாராட்டு.

இது மோடியை வெறுப்பேத்தவா ? இல்ல எடப்பாடி வெறுப்பேத்தவா ?

நான் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பிரிவு உபசார விழாவில் பேச்சு.

ஆளுநர் பதவிக்கு இப்பொழுதே துண்டு போட்டு வைக்கிறார் போல இருக்கு !!

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை எடப்பாடி கடும் கண்டனம்.

தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா !!

எடப்பாடியாரை மீண்டும் தமிழக முதல்வராக்க தமிழக மக்கள் உறுதி செய்துவிட்டனர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.

நேத்து கனவில் வந்து சொல்லி இருப்பாங்களோ !!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் நான் பேசியது இல்லை பிரதமர் பேட்டி.

அப்படியா !!

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி.

இதை நீங்க திரும்பத் திரும்ப சொல்வதால்தான் டவுட்டு !!

நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுகிறது ராகுல்காந்தி கருத்து.

இந்த விஷயம் மம்தா பானர்ஜிக்கு தெரியுமா ?

சென்னை ஐஐடி இளையராஜா ஒப்பந்தம்.

ராயல்டி பிரச்சனை வராம பாத்துக்கோங்க !!