தொடர்கள்
மக்கள் கருத்து
நாய் நல்லவரா கெட்டவரா? மக்கள் கருத்து - பால்கி

என்னோட விவேகானந்தா காலேஜ்ல பீ காம் படிச்ச மஹேஷ்குமாரை, “மச்சீ! நாய் நல்லவரா கெட்டவரா? என்றேன். கோட்டூர்புரத்தில் தண்டாயுதபாணி நகர் 2வது தெருவில் வசிக்கிறான்.

நீ அதற்கு மரியாதை கொடுத்ததற்கு தேங்க்ஸ் சொல்லரேன் என்று தொடர்ந்தான்.

நாய் என்பதை விட, Pet (ஆசை விலங்கு, செல்லப் பிள்ளை) என்று சொல்ல வேண்டும்.

எங்களோட ஜூனோ (இதைப்பற்றி நமது 22 மார்ச் 2024 விகடகவியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம்) மனிதனை விட ஒரு படி மேலே மனிதரல்லாத உயிரினம். அவைகள் கடவுளுக்கு சமானம்.

அவர்கள் எல்லா வடிவங்களிலும் அன்பைக் காட்டுகிறார்கள். எளிமையாகச் சொன்னால், "அனைவருக்கும் அன்பு செலுத்துங்கள் அனைவருக்கும் சேவை செய்யுங்கள்" என்பதற்காகத்தான் அவர்கள் பிறந்தது.

எங்கள் வாழ்வில் அப்படி ஒரு செல்லப் பிராணியைப் பெற்றிருந்தது எங்கள் அதிர்ஷ்டம் தான். அவள் 5 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாள், நம் சாஸ்திரங்களில் எழுதப்பட்ட அனைத்து குணங்களையும் வெளிப்படுத்தினாள். ஒரு மரியாதையாக, நாங்கள் எங்கள் கலாச்சாரத்தின் படி அவரது இறுதியை நடத்தினோம்.

20240410210932633.jpg

ரோசி என்ற தெரு நாயும், இதோ மேலே அதன் போட்டோ , அப்படித்தான். அவள் எங்களைப் பார்க்கும்போது எங்கள் குடும்பத்தாரிடம் காட்டும் அன்பையும் மகிழ்ச்சியையும் கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

20240418111205239.jpeg

இதே கேள்வியை மும்பையில் எனது குடியிருப்பில் இருக்கும் தெரசா சௌத்ரியிடம் கேட்கலாம் என்று எனது மூன்றாவது மாடி ஃபிளாட்டிலிருந்து கீழே இறங்கி கேட்டுக்கருகில் சென்றடைகையில், அங்கு அந்த பெண்மணியைச் சுற்றி அந்த தெருவில் வசிக்கும் தெரு நாய்கள் வாலை ஆட்டிக் கொண்டு தாயைக் கண்ட குட்டி நாய்கள் போலே சுற்றி சுற்றி வந்தன. அவளது கையிலிருக்கும் பெரிய துணிப்பை மீது அந்த நாய்களின் அபரிதமான பாசம் பொத்துக்கொண்டு வர, அவளும் அதிலிருந்து சின்ன சின்ன கறித் துண்டுகளை சிதறினாள். மறுமுனையில் பிஸ்கட்டுகளை ஒழுங்கு முறையில் சிதறி விட்டாள். வாலைக் குழைத்துக்கொண்டு தத்தம் பசியடங்க பதம் பார்த்துக்கொண்டிருந்தன. இடையிடையே அவளையும் நன்றி கலந்த நக்கலையும் செய்துவிட்டுச் சென்றன.

நாய் நல்லவரா? கெட்டவரா? என்ற என் குரல் எழும்ப, அவளோ அவளது முகத்தை நாய்களின் மீது பதித்துவிட்டு, புன்முறுவலிட்டாள்.

புரிந்துகொண்டுவிட்டேன்.

பசித்துப் புசித்துக்கொண்டிருந்த நாய்கள் என்னை பார்த்து, எங்களையும் கேட்கிறாயா என்பது போல இருந்தது.

அவளது புகைப்படம் எடுக்க அனுமதி கிட்ட வில்லை. சொஸைட்டி கமிட்டி மெம்பர் என்மீது என்ன கோபமோ

அருகே ஒரு மின்சார கருவிகள் விற்கும் கடை நடத்தும் அனில் தக்ளியும் போட்டோக்கு போஸ் கொடுக்காமலேயே, நான் வீட்டுல வளக்கமாட்டேன், ஆனால் அது மேலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஒண்ணும் இல்லை என்று பட்டும் படாமல் லொள்ளிட்டார், சாரி, சொல்லிட்டார். மனுஷன் கொஞ்சம் கரடு முரடு அதான். இத்தனைக்கும் அவரது கடைக்கு முன்னால் ஒரு தெரு நாய் அமைதியாக எங்களின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தது.

ஹாங்காங் பேராசிரியர் ராஜன் தன்னுடைய சிறுவயது நினைவுகளில் நாய்களை பயத்துடன் நினைவுகூர்கிறார். ஒரு முறை கிராமத்து ஊர் திருவிழாவில் பக்கெட் முழுவதும் சாராயம் நிறைந்திருக்க அதை குடித்தோ என்னவோ சில பல நாய்கள் அவரை துரத்தி கடித்து பாவம் காயங்கள் ஆற சில வாரங்கள் பிடித்ததாம்.

"அதை விடுய்யா சமீபத்தில கொல்கத்தாவுக்கு வேலை விஷயமா போனேன் காலங்காத்தால ஜாக்கிங் போலாம்னு பாத்தா பல தெருக்கள்ள நாய் விடாம துரத்துது என்கிறார்.... "

நாய் நல்லவரா இருக்கட்டும். நாய்க்கு நம்ம நல்லவரா கெட்டவரானு எப்படி புரிய வைப்பது என்கிறார் பேராசிரியர்.