கடந்த மாதம் தெலுங்கானா ஐதராபாத்தில் நடந்த சீனியர் சிடிசனுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவையை சேர்ந்த 80 வயது ஆல்பர்ட் ஆனந்தராஜ் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .
UTT 30th National Masters Table Tennis championship ஐதராபாத்தில் உள்ள சரூன் நகர் இன் டோர் ஸ்டேடியத்தில் ஐந்து நாள் நடந்தது .
இந்தியாவில் இருந்து 1080 பேர் 40 வயது முதல் 80 வயது முடிய அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர் .
இதில் மூத்தோர் பிரிவில் ஆல்பர்ட் ஆனந்தராஜ் மூன்றாம் இடத்தை வென்று வந்துள்ளார் .
ஆல்பர்ட் ஆனந்தராஜை கோவை கௌண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம் .
ஒரு இளம் விளையாட்டு வீரரை போல டி ஷர்ட் அணிந்து ஸ்மார்ட்டாக நம்மை வரவேற்ற ஆல்பர்ட் ஆனந்தராஜ் தன் டேபிள் டென்னிஸ் விளையாட்டை பற்றி கூறினார் .
" நான் நீலகிரி வாசி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன் .என் பாக்டரியில் பணிபுரியும் போது 1974 ஆம் வருடம் முதல் எங்க கிளப்பில் டி டி விளையாட துவங்கி இன்று வரை நிறுத்தவில்லை .என் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு ஐம்பது வயது எனக்கு எண்பது வயது என்று கூறி சிரிக்கிறார் .
இந்தியாவில் உள்ள அனைத்து ஆர்டியின்ஸ் பாக்டரிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளேன் .
பல தேசிய போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று வென்றுள்ளேன் என்று கூறும் ஆல்பர்ட் ஏகப்பட்ட வெற்றிகளை குவித்துள்ளார் .
என் இளமைக்கு காரணமே என் டேபிள் டென்னிஸ் விளையாட்டு தான் என் உடல் ட்ரிம்மாக இருப்பதே டி டி தான் என்று கூறி பூரித்து கொள்கிறார் .
இந்த முறை ஐதராபாத் சென்றது 80 பிளஸ் விளையாட்டு வீரர்கள் இந்தியா முழுவதும் இருந்து 21 பேர் வந்து விளையாடினார்கள் .
கோவையில் இருந்து நடராஜன், ஸ்ரீ ராம் , நடராஜன் மற்றும் நான் சென்றோம் மூவரும் வெற்றியுடன் திரும்பி வந்தோம் .
இங்கிருந்து தெலுங்கானா சென்றவுடன் உணவில் இருந்த காரம் தண்ணீர் எனக்கு வயிற்று போக்கு வயிறு வலி காய்ச்சல் வந்து விட்டது .
நான்கு நாளும் எலெக்ட்ரோ குடித்து சமாளித்தேன் மிகவும் சோர்வானேன் அதிலே ஒரு வித தெம்புடன் விளையாடி வெண்கலம் வென்று வந்தேன் .
உடல் பிரச்சனை ஏற்படாமல் இருந்திருந்தால் தங்கத்துடன் தான் வந்திருப்பேன் என்று தன் ஏமாற்றத்தை கூறுகிறார் ஆல்பர்ட் .
இவ்வளவு பெரிய சாதனை படைத்த இவர்களை தேசிய டேபிள் டென்னிஸ் சங்கமோ கோவை டேபிள் டென்னிஸ் மாவட்ட சங்கம் கண்டுகொள்ளவில்லை என்பது இவருக்கு ஏகப்பட்ட வருத்தம் .
தன் மனைவி இந்திராணி இவருக்கு மிக பெரிய பலம் அவரின் ஊக்கம் தான் இவர் இந்த வயதில் மிக பெரிய சாதனை புரிய வைத்துள்ளது .
" என் மனைவி எல்லா வகையிலும் ஏகப்பட்ட ஹெல்ப் நான் எங்கு செல்வதென்றாலும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து வழியனுப்புவார் .
அவர் தினமும் காலை திருப்பலிக்கு சென்று பிராத்தித்து வருவதும் என் வெற்றிக்கு காரணம் " என்கிறார் .
இவரின் மகன் பிரகாஷ் குடும்பத்தார் மற்றும் மகள் வித்தியா குடும்பத்தார் என் விளையாட்டு ரசிகர்கள் .
" என் வெற்றியை ரசித்த அமெரிக்காவில் உள்ள ஒரு உறவினர் எனக்கே தெரியாமல் ஹோட்டலில் கேண்டில் லைட் டின்னர் ரெடி செய்து என்னையும் என் மனைவியும் அழைத்து அசத்திவிட்டார்கள் "
கடந்த வாரம் என் சித்தி மாமா மற்றும் அண்ணன் மகன்கள் ஒரு பெரிய பாராட்டு நிகழ்வு மற்றும் டின்னர் கொடுத்து மெய்மறக்க செய்து விட்டனர் .
எப்படியாவது தன் வாழ்நாளில் ஒரு தங்க மெடல் வென்று விட வேண்டும் என்பது இவரின் ஆசை .
கோவையில் இவரை ஊக்குவித்த நண்பர்கள் கலீல் மற்றும் கோவிந்தராஜை மறக்க முடியாது என்கிறார் .
ஐம்பது வருடமாக வைத்திருக்கும் டி டி பேட்டை அரவணைத்து தன் கன்னத்தில் வைத்து ஐ லவ் மை டேபிள் டென்னிஸ் என்று கூறும் ஆல்பர்ட் ஆனந்தராஜ் பள்ளிகளில் டேபிள் டென்னிஸ் இருபால் மாணவ செல்வங்களுக்கு கற்று கொடுக்கவேண்டும் என்கிறார் இந்த எண்பது வயது விளையாட்டு இளைஞர் .
Leave a comment
Upload