குறள் - 490
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்ற அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து.
அடங்கி இருக்கும் காலத்தில் கொக்கு போல் இருக்க வேண்டும், தக்க வாய்ப்பு நேரும்போது கொக்கு மீனை குத்துவது போலத் தவறாமல் செய்து முடித்தல் வேண்டும். என்று வள்ளுவ பெருந்தகை கூறுவது போல் ஒரு இலக்கை நோக்கி நாம் கவனம் சிதறாமல் எப்படி தெளிவுடனும் பொறுமையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை.
இலட்சிய பிடிப்பு என்றால் என்ன?
எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த டென்சிங் அவரது சிறு வயதில் இருந்தபோது “ ஒரு நாள் நான் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தே தீருவேன்” என்று தினமும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாராம். இத்தகைய இலட்சிய பிடிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணம் என்று அவரது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு சாதனையாளரையும் அனைத்து பாதைகளும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றாலும் அவரது இலட்சிய பிடிப்பின் அழுத்தத்தை பொறுத்து அவர் அடையும் வெற்றியின் காலம் நிர்ணயிக்க படுகிறது.
மிகக் கொடூரமான வறுமையும் சாதிக்க வேண்டும் என்னும் ஆசையும் சமத்துவ சிந்தனை மலர வேண்டும் என்னும் இலட்சியத் தாக்கமும் ஒன்று சேர கார்ல் மார்க்ஸ் சோவியத் தந்தையாக உருமாறினார். எனவே நமது வாழ்வு அர்த்தம் பெற இலட்சிய பிடிப்பு அவசியம் என்பதை குழந்தைகளுக்கு இப்படி சாதனையாளர்களின் சுய சரித கதைகளின் மூலம் சொல்லுவது அவசியம்.
இலட்சிய வேட்கை அடைய இலக்குத் தெளிவு தேவை. இலட்சிய பிடிப்பு தெளிவாக இருக்கும்போது அதனை நேரம் மற்றும் இடத்திற்குள் சுருக்கி செயலாக்கிட இலக்குத் தெளிவு அவசியமாகிறது. முதலில் உங்கள் குழந்தைகளிடம் “நீ என்னவாக ஆக வேண்டி விரும்புகிறாய்?” என்று கேட்பது தவறு.
குழந்தைகளிடம் உனக்கு பிடித்தவை பற்றி கூறு, பின் அவற்றை பட்டியல் இட்டு எழுது என்று சொல்ல வேண்டும்.
“ பிடித்தவை என்றால் எத்தனையோ உள்ளது அதில் எதை கேட்கிறீர்கள் எதை எழுத சொல்கிறீர்கள்” என்று உங்கள் பிள்ளைகள் உங்களிடம் கேட்டால், அவர்கள் தெளிவு நோக்கி அடி எடுத்து வைக்கிறார்கள் என்று பொருள்.
பிறகு அவர்களை ஒரு நோட் புக்கில் மூன்று பெரிய வட்டங்கள் போட்டு அதில் முதல் வட்டத்தின் மீது உங்களுக்கு பிடித்த உடை, இரண்டாவது வட்டத்தில் பிடித்த உணவு, மூன்றாவது வட்டத்தில் பிடித்த ஊர்தி
(வாகனம் எவை) என்றும் அவற்றை ஏன் பிடிக்கும்? அவற்றின் சிறப்பு என்ன என்ற விவரத்தை தெளிவாக எழுத சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு தனக்கு பிடித்த விஷயங்களை பற்றிய தெளிவு முதலில் அவசியம், ஒரு ஆடை வகை தனக்கு பிடிக்கிறது என்றால் அது ஏன் அவர்களுக்கு பிடிக்கிறது?, யாரைப் பார்த்து அவர்கள் inspire ஆகிறார்கள்?. எந்த வகையான வாழ்க்கை முறை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?, அது அவர்களுக்கு பிடிக்கிறதா? அல்லது அவர்களுக்கு பார்த்து பழகிய விஷயத்தால் ஈர்ப்பு ஏற்பட்டு அதன் விளைவாக பிடிக்கிறது,என்று நினைத்து கொள்கிறார்களா? என்று தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வழி…
இலக்குத் தெளிவு பற்றி தொடர்ந்து பேசுவோம்…….
Leave a comment
Upload