Heading : அமெரிக்காவில் அதிசயமான பனிக்காலம் - சரளா ஜெயபிரகாஷ்
Comment : அருமையான கட்டுரை. Well written with the right pictures
Heading : சேலத்தில் சலசலப்பு "அஞ்சல் ஆபீஸ் திடீர் மூடல்" - பால்கி
Comment: In India Public sector banks and public orientation Post office isn't important to central and state governments. It's relevant to business and profit-oriented sectors. It affects all kinds of people. It should be changed and get awareness.
Ganesan, Stella, Vinoth , Muscat
Heading : திருநாங்கூர் கருடசேவை திருக்காட்சி நேரடி அனுபவம் - சாயிராம்
Comment : அருமையான பதிவு. திருநாங்கூரில் 11 பெருமாள்களின் வீதியுலா, அதன் வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை தொகுத்து, அவற்றை காணொலி காட்சிகளாக வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி.
மாயா குப்புசாமி, ராதா வெங்கட் , சென்னை
Heading : பம்பரம்.-ஆனந்த ஶ்ரீனிவாசன்.
Comment : ஆனந்த சீனிவாசனின் பம்பரம் சிறுகதை, எங்களின் மனதில் உறங்கிக் கிடந்த சிறுவயது மலரும் நினைவுகளை வெளிக்கொணர்ந்தது. சபாஷ்!
கதிர்வேல், பூர்ணிமா, திலகவதி , திருவையாறு
Heading : வேர்கள் - நாபா மீரா
Comment : நாம் பல்வேறு பணி காரணமாக வெவ்வேறு மொழிகளில் சரளமாகப் பேசினாலும், நம் வீட்டுக்குள், குடும்பத்தினரிடையே தாய்மொழியில் பேசுவதை கேரள மக்கள் தீவிரமாக கடைப்பிடிக்கின்றனர். ஆனால், தமிழக மக்கள் தாய்மொழியில் பேசுவதை கவுரவ குறைச்சலாக கருதுகின்றனர். அத்தகைய மனநிலை கொண்டோருக்கு 'வேர்கள்' சிறுகதை சரியான சவுக்கடி!
நஸ்ரியா, ஞானபிரபு, சிவப்பிரகாசம் , திருச்சூர், கேரளா
Heading : ஓடறிதல் - ராகவன் ஸாம்யெல்
Comment : ஓடறிதல் கவிதை வரிகள் ஏதோவொரு வலியை சொல்ல வருவதைப் போல் உணர முடிகிறது. ஆனால், அது என்னவென்று தான் எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை!
சிவகுமார், பத்மினி, பஞ்சவர்ணம் , கடலூர்
Heading : தஞ்சாவூர்தலையாட்டி பொம்மை - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.
Comment : தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் பற்றி அழகாக முன்னுரை கொடுத்துவிட்டு, அப்பொம்மைகள் செய்யப்படும் களிமண், அவற்றின் உருவங்கள், அதன் பல்வேறு பரிணாம வளர்ச்சி, தற்போது பிளாஸ்டிக் வரவால் அத்தொழிலின் நலிவு நிலையை மிக அழகாக விளக்குகிறார் ஆனந்த் சீனிவாசன். இனியாவது அத்தொழிலாளர்கள் தலையாட்டி பொம்மை போல் செங்குத்தாக நிமிர்ந்து நிற்பார்களா?!
செண்பகமூர்த்தி, பாப்பம்மா, சேகர், தஞ்சாவூர்
Heading : சினிமா சினிமா சினிமா- லைட் பாய்
Comment : என்னய்யா நீர்.. அவங்க என்னென்ன படம் நடிச்சாங்க, எத்தனை பிளாப், இப்ப என்ன பண்றாங்கன்னு சொன்னது போய், இப்ப அவங்க பயோடேட்டாவை கொடுக்கிறீர்... நாங்க என்ன கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க சொன்ன மாதிரி? இதுல ஒருசிலர் குடும்பத் தலைவினு மறந்துட்டீரே!
செல்வரத்தினம், கோடாங்கி, சுபாகர், நெல்லை
Heading : தெப்பக்காடு யானைகள் முகாமில் விகடகவி - ப ஒப்பிலி
Comment : யானைகள் பற்றிய கட்டுரை துவக்கமே ரொம்ப அசத்தலா இருக்கே... போக போக இன்னும் த்ரில்லான சம்பவங்களை எழுதுவாரா? எழுதினால், இன்னும் நல்லாயிருக்குமே! நாங்கெல்லாம் ரொம்ப ஆவலா இருக்கோம்.
ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன் , ஊத்துக்கோட்டை
Heading : '...என்றான் அவன்!' (7) -என் குமார்
Comment : அருமை, ஒவ்வொரு வார்த்தையும் அனுபவத்தை உணர்த்துவதாகவே மிளிர்கிறது.
இந்துஜா, கீர்த்தி, பானுரேகா , பெங்களூர்
Heading : இதெல்லாம் எங்கே?
Comment : பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் விவசாயிகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் என நினைத்தால், நமது முட்டாள்தனம். அது, ஆளுங்கட்சி நலன் சார்ந்த திட்டங்கள் என்பதை மக்கள் எப்போதோ உணர்ந்து விட்டனர். ஒவ்வொரு தேர்தலுக்கும் அந்தந்த கட்சி வாக்குறுதி அளிக்கிற ஒருசில இலவசங்கள் மட்டும்தான் நமக்கு கிடைக்கும். அதையும் ஒருத்தர் ஜெயிச்சு வந்ததுக்கு அப்புறம் 'ஓசி'னு சொல்லுவாரு. இதெல்லாம் மக்களின் வரிப்பணம்னு தெரியாத முட்டாளா தமிழக மக்கள்?!
அரவிந்தன், பாலகிருஷ்ணன், செங்கோடன் , பொன்விளைந்த களத்தூர், செங்கல்பட்டு
Leave a comment
Upload