ஜோஷ்வா இமைப்போல் காக்க
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நாயகனாக நடிக்கும் படம் ஜோஷ்வா இமைப்போல் காக்க ராக்கே கதாநாயகி. இதில் யோகி பாபு, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படம் மார்ச் 3-ஆம் தேதி ரிலீஸ்.
பூஜா கனவு
சமீபத்தில் தேசிய விருது வாங்குவது போல் பூஜா ஹெக்டே கனவு கண்டாராம்.சில சமயம் இவரது கனவு பலித்து இருக்கிறதாம் .இந்தக் கனவு பலிக்கும் என்று நம்புகிறார் பூஜா
ஜெயம் ரவி
சைரன் படத்தில் மிடில் ஏஜ் கெட்டப்புக்காக தனது எடையை கூட்டி இருந்தார் ஜெயம் ரவி .இப்போது தனது பழைய எடைக்கு குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
நயன்தாரா
ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது 81 வது படத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா. ஒரு பெண்ணுக்கும் யானைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு பற்றிய கதையாம்.இதற்காக யானையுடன் பழகி பயிற்சி எடுக்க இருக்கிறார் நயன்தாரா
கர்ணா
பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹாரா இயக்கத்தில் சூர்யா நேரடி இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு பெயர் கர்ணா. இவருக்கு ஜோடி ஜான்வி கபூர்.
மலையாள பட உலகம்
தமிழ் சினிமாவில் ஏராளமான மலையாள இயக்குனர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், தமிழ் இயக்குநர்கள் மலையாள பட உலகில் நுழைய முடியாமல் மலையாளிகள் தடுத்து நிறுத்துகிறார்கள் என்கிறார் ஆர். வி. உதயகுமார்.
இவானா
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் லவ் டுடே இவானாவை விஜய்க்கு தங்கையாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தங்கை வேடம் என்றால் அதன் பிறகு கதாநாயகி வேடம் கிடைக்காது என்று பயந்து போய் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இப்போது அந்த வேடத்தில் விளம்பர பட நடிகை அபியுக்தா நடிக்க இருக்கிறார்.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி முக்கிய பாத்திரத்தில் நடித்த லால் சலாம் படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் ரஜினி என்பவரை நம்பி எண்பது கோடி ரூபாய் செலவு செய்தது. ஆனால், திரும்ப வந்தது எட்டு கோடிக்கும் குறைவு. இதுக்கு லைக்கா நிறுவனம் சரியாக விளம்பரப் படுத்தவில்லை என்று ஐஸ்வர்யா குற்றம் சாட்ட லைக்கா நிறுவனம் விளம்பர பிரிவினர் இது ஒரு முழுமையான திரைப்படமே இல்லை, திரைக்கதையும் சரி இல்லை இதையெல்லாம் மறைத்து எங்கள் மீது பழி போடுகிறார் மேடம் என்கிறார்கள்.
துல்கர் சல்மா
ஜேசன் சஞ்சய் நடிகர் விஜய் மகன் லைக்கா நிறுவனம் இவர் இயக்கத்தில் படம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு பேச்சே காணோம். இப்போது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு கதாநாயகன் துல்கர் சல்மான். படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.
இவர்கள் உண்மையான பெயர் இதுதான்
பிரபல நடிகைகளின் உண்மையான பெயர் இதுதான். நடிகை பூமிகாவின் இயற்பெயர் ரச்னா சாவல், சினேகாவின் இயற்பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு, ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி ஈ டி.
மீரா ஜாஸ்மின் இயற்பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப், நடிகை ரோஜா இயற்பெயர் ஸ்ரீ லதா ரெட்டி, நயன்தாரா இயற்பெயர் டயானா மரியம் குரியன், கீர்த்தி ஷெட்டி இயற்பெயர் அத்வைதா, தபு இயற்பெயர் தபாசும் ஃ பாத்திமா ஹாஸ்மி, தேவயானியின் இயற்பெயர் சுஷ்மாஜெயதேவ்.
Leave a comment
Upload