சிறு வயதில் ராம ஜெயம் புத்தகம் எழுதிய நினைவிருக்கிறது.
ஏனோ அந்தப் பழக்கம் பல வருடங்களாக தொடரவில்லை.
ஆனால் இன்றும் ராம ஜெயம் தொடர்ந்து எழுதுபவர்கள் பலர்.
அப்படி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெற இருப்பதால் ராம ஜெயம் எழுதும் புத்தகங்கள் மீண்டும் ஏராளமாக அதிகரித்துள்ளது.
மும்பையில் 91 வயது ரமாமணி என்ற மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற போது அவரது மகளிடம் தான் இந்த புத்தகத்தை கொடுத்தேன்.
உடனே அது என்ன என்று ஆவலுடன் அந்த குண்டு புத்தகத்தை வாங்கி கை நடுக்கத்துடன் இருந்தாலும் என் மகள் என்ன நானே எழுதுகிறேன் என்று ஆசையோடு வாங்கிக் கொண்டார்.
இவர் ஒரு பக்கம் எழுதினால் பெரிய விஷயம் தான் என்று அனைவரும் நினைத்திருக்க, அவனின்றி ஓரணுவும் அசைவதில்லை எனும் போது அவன் நினைத்தால் இதென்ன பிரமாதம் என்ற வகையில் ரமாமணி மாமி, இல்லை பாட்டி, ஐந்தே நாட்களில் மொத்த புத்தகத்தையும் எழுதி முடித்து விட்டார்.
மீண்டும் ரமாமணி பாட்டியை விசிட் செய்த போது அவர் கேட்ட கேள்வி தான் ரொம்ப கியூட்.
இதை யாரிடம் கொடுக்க வேண்டும் ??
சாட்சாத் விகடகவி மூலமாக ஶ்ரீ ராமனிடம் தான். வேறு யாரிடம் !!!
Leave a comment
Upload