தொடர்கள்
ஆன்மீகம்
ஶ்ரீ ராமர் தபால் தலை - மாலா ஶ்ரீ

20240019115418753.jpeg

புதுடெல்லியில் அயோத்தி ராமர் கோயில் நினைவு தபால்தலைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ராமர் பற்றிய தபால்தலை அடங்கிய ஆல்பத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘தபால்தலைகள் என்பது காவியங்கள், சிறந்த கருத்துகளை வெளிப்படுத்தும் வடிவமாகும். ராமர், சீதை மற்றும் ராமாயணம் ஆகியவை சமூகம், ஜாதி, மதம், பிராந்தியங்களை கடந்து, ஒவ்வொரு மக்களையும் இணைக்கும் சக்தியாக உள்ளது. இது, கடினமான சமயங்களில் அன்பு, அர்ப்பணிப்பு, ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. மேலும், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, அனைவரும் மதிக்கும் காவியமாகத் திகழ்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பீடத்தில் நிறுவப்பட்ட பாலராமர் சிலை!

அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, கடந்த 17-ம் தேதி ஆகம முறைப்படி பாலராமர் சிலை லாரியில் கொண்டு வரப்பட்டது. கறுப்புநிற கல்லினால் பாலராமர் சிலையை, கர்நாடக மாநிலத்தின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார். இந்த பாலராமர் சிலை கடந்த 18-ம் தேதி மதியம் ஆகம முறைப்படி வேத விற்பன்னர்கள் சம்பிதாய சடங்குகள் மேற்கொண்டு பீடத்தில் நிறுவப்பட்டது.

20240019115443402.jpeg

ராமர் கோயிலில் திருப்பதி லட்டுகள்!

அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டையின்போது பக்தர்களுக்கு வழங்க, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்ற. பின்னர் இந்த லட்டுகள் ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் மூலம் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷங்களுடன் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பேக்கிங் செய்யப்பட்ட ஒரு லட்சம் லட்டுகள், விமானம் மூலமாக நாளை அல்லது நாளை மறுநாள் அயோத்தியில் ராமஜென்ம அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை!

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக தினமான வரும் 22-ம் தேதி நாடெங்கிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அன்று மதியம் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

20240020095217470.png