ஹாங்காங்கில் வருடந்தோறும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் நடத்தும் 100 கிலோ மீட்டர் மலையேற்ற நிகழ்வு இந்த வருடம் கோவிட் வருடங்களுக்குப் பின் மீண்டும் துவங்கியது.
இந்த வருடத்தில் சுமார் நான்காயிரம் பேர்கள் கலந்து கொண்டார்கள்.
ஹாங்காங் பற்றி மீண்டும் சொல்கையில் நகரில் மொத்தம் 60 சதவிகிதம் இயற்கை தான். எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல இது ஒரு கான்கிரீட் காடு அல்ல.மலைகளும், மலைப் பாதைகளும் சூழ்ந்த ஒரு இயற்கை நகரம் ஹாங்காங்.
இங்கு நான்கு முக்கிய மலைப் பாதைகள் இருக்கின்றன.
மேக்லீஹோஸ் மலைப் பாதை - 100 கி.மீ.
லாண்டாவ் மலைப் பாதை 70 கி.மீ
ஹாங்காங் மலைப் பாதை 50 கி.மீ
வில்சன் மலைப் பாதை 78 கி.மீ
இது போக ஆர்கைல் ராஸ் மலைப் பாதை (இதில் தீவுகளுக்கிடையே நீந்த வேண்டியும் வரும்)
இப்படி ஐந்து மலைப் பாதைகள் இருக்கின்றன்.
ஆக்ஸ்ஃபாம் மலைப் பாதை பயணம் என்பது மேக்லீஹோஸ் 100 கி.மீ மலைப் பாதையில் வெள்ளி காலை துவங்கி ஞாயிறு காலை அதாவது 48 மணி நேரத்திற்குள் நடந்து கடப்பது.
இது ஒரே மலையல்ல. ஒன்று முதல் பத்து செக்ஷன்கள் வரை பல்வேறு தரப்பட்ட மலைகளில் ஏறி இறங்கி ஏறி...இறங்கி...ஏறி.... இப்படியே 100 கி.மீ எழுதிக் கொள்ளவும்.
இதில் நம் தமிழர்கள் தொடர்ந்து பங்கேற்றுக் கொண்டு வருகிறார்கள். துங் சுங் பகுதியில் இருக்கும் ரவி, கே.ஜி.எஸ் பூவராகன், போன்ற பலரும் இதை முன்னர் செய்திருந்தாலும், இந்த வருடம் லோகாஸ் பார்க் பகுதியில் வசிக்கும் சுரேஷ் 100 கி.மீட்டர் தூரத்தை தன் குழுவினருடன் 29 மணி நேரம் 17 நிமிடங்களில் கடந்திருக்கிறார்.
ஒரு நாள் முழுவதும் தூங்காமல் நடந்து கடந்து செல்வது சுலபமல்ல. சுமார் 800க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பாதியில் முடியவில்லை என்று விலகிக் கொண்டார்கள்.
முதலில் வந்த குழு 12 மணி நேரத்தில் கடந்து முடித்திருக்கிறது. சூப்பர் மேன் பயலுகளாக இருப்பார்கள் போல. சாதாரண ஆட்களுக்கு 32 முதல் 38 மணி நேரம் வரை ஆகும்.
ஆனால் ஃப்ரெண்டா பயற்சி கொடுத்த சுரேஷ் அணி 29 மணி நேரக் கெடு வைத்து பயிற்சி எடுத்துக் கொண்டு 29 மணி 17 நிமிடங்களில் முடித்தது ஆச்சரியம். இந்த போட்டியில் ஒரே நிபந்தனை நான்கு பேர் கொண்ட குழு ஒரே நேரத்தில் துவங்கி ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் முடிக்கக் கூடாது. இது தான் மலையேற்றத்தின் அடிப்படை. நட்பும் குழு உணர்வும்.
இந்த மலையேற்றம் குறித்து சுரேஷிடன் ஒரு குட்டி நேர்முகம். அவருடைய பதில்கள் ஒலிப்பதிவாக.
(சுரேஷ் அணி 29 மணி நேரம் 17 நிமிடங்களில் நிறைவு செய்தார்கள்)
கேள்வி : சுரேஷ் நீங்கள் ஒரு மராத்தான் ஓட்டப் பந்தய வீரர் என்று தெரியும். பல வருடங்களாக பல ஊர்களில் மராத்தான் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் 100 கி.மீ மலையேற்றம் இது தான் முதல் முறை. ஓட்டப் பந்தயத்திற்கும் மலையேற்றத்திற்குமான வித்தியாசங்கள் சவால்கள் எப்படி வித்தியாசப்பட்டது ???
முதல் கேள்விக்கான பதில்.
(பயிற்சியின் போது முக்கியமான விஷயங்களை விளக்குகிறார் கோச்)
கேள்வி : மலையேற்றத்திற்கான பயிற்சிகள் பற்றி சொல்லுங்களேன்.... எப்படி இருந்தது இந்த பயிற்சி...
பதில் :
கேள்வி : கடுமையான பயிற்சிகளின் போது, போதும்டா சாமி விலகிக் கொள்ளலாம் என்று தோன்றியதா ??
பதில் :
கேள்வி : என்ன மாதிரி உணவு உட்கொண்டீர்கள். ?? மலையேற்றதிற்கான ஸ்பெஷல் உணவு ஏதேனும் இருக்கிறதா ??
பதில் :
கேள்வி : ஒரு நாள் தூக்கத்தை தொலைத்து மலையேறும் போது எப்படி இருந்தது ?? சொக்கி விழ வைக்கவில்லையா ??? மயக்கமாக இல்லையா ??
பதில் :
(இன்னொரு துங் சுங் குழுவில் பகிர்ந்தது. இரண்டாவது இரவும் தூங்கவில்லை எனில் மலையேறும் போது இப்படித்தான் மஜா பண்ண வேண்டுமாம்)
கேள்வி : நம்மூரில் மலையேற்றங்களுக்கு முடிவில் ஒரு சுவாமி தரிசனம், அல்லது ஒரு கோவில் ஒரு நேர்த்திக் கடன் இருக்கும். ஹாங்காங்கில் இது போன்ற நம்பிக்கைகள் சாராத மலையேற்றம் ஒரு வேண்டுதல் இல்லாமல் எப்படி இருந்தது ???
பதில் :
கேள்வி : இவ்வளவு நீண்ட நாள் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கு குடும்பத்தின் ஆதரவு எப்படி இருந்தது ?? இருக்க வேண்டும் ?? நண்பர்களின் உதவி தேவைப்பட்டதா ?? அந்த நூறாவது கிலோமீட்டரை தாண்டும் போது எப்படி இருந்தது ?? அந்த பரவச நிலையை கொஞ்சம் விளக்குங்களேன்.
பதில் :
சுரேஷின் பதில்களை எழுத்தில் கொண்டு வந்தால் கூட அவர் சொல்வது போலவே இருக்கும் அனுபவம் குறையக் கூடும் என்பதால் ஒலிப்பதிவாகவே இங்கு வலையேற்றப்படுகிறது.
சுரேஷ் லோகாஸ் பார்க் ஹாங்காங் பகுதியில் தான் மட்டும் மராத்தான் ஓடாமல், மற்றவர்களையும் ஓட உற்சாகப்படுத்தி ஓட வைப்பவர்.
அடுத்ததாக 100 கி.மீ மலையேற்ற குறிக்கோளை பல ஆசாமிகளுக்கு விதைத்து விட்டு அவர்கள் ஓடி முடிக்கும் வரை அவர்களுக்கு உற்சாகம் கொடுத்து பயிற்சி கொடுத்து ஒடவும் வைத்து விடுவார்.
சுரேஷ் ஒரு ஒட்டப்பந்தய வீரர் மட்டுமல்ல அவரைச் சேர்ந்த அனைவரையும் எப்பாடு பட்டாவது ஓட வைத்து விடும் மிகச் சிறந்த பயிற்சியாளர். (அவர் மனைவியையும் விட்டு வைக்கவில்லை. ஜெயஶ்ரீ கிச்சன் என்ற யூடியூப் வலைதளத்தை நடத்தி வரும் அவர் மனைவி ஜெயஶ்ரீயையும் மூன்று நான்கு மராத்தான் ஓட வைத்து விட்டார்.)
Leave a comment
Upload