தொடர்கள்
உணவு
சேஷா கேட்டரர்ஸின் மக்களின் ஆவலை தூண்டும்  பலகாரங்கள்! -மாலா ஶ்ரீ

20231101235044756.jpg

சென்னை பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் பம்மல் பிரதான சாலையை ஒட்டிய மார்க்கெட் பகுதியான அண்ணாசாலையில் நாம் நுழைந்தபோது, தரமான நெய், பால், எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்களால் சுடச்சுட தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளின் நறுமணம், நம்மை போஜனம் சைவ உணவகத்தை நோக்கி சுண்டியிழுத்தது. நாம் உள்ளே நுழைந்தபோது, அங்கு பண்டிகைக்கு பல்வேறு சூடான சுவைமிக்க இனிப்பு மற்றும் கார வகைகள் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.

அவர்களில் சிலரிடம் நாம் பேச்சு கொடுத்தபோது, அனகாபுத்தூர் மற்றும் குன்றத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட பலர், "எங்கள் குடும்பத்தினரின் திருமணம் உள்பட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சுந்தர் தலைமையிலான சேஷா கேட்டரர்ஸ் சிறப்பான விருந்தளித்து, எங்களின் உறவினர்களிடையே பெருமதிப்பை ஏற்படுத்தி கொடுத்தனர். எங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப, அவர்கள் சுபநிகழ்ச்சிகளில் சிறப்பான விருந்தளிப்பதில், சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சேஷா கேட்டரர்ஸ் புகழ்பெற்று விளங்கி வருகின்றனர்.

பின்னர் பம்மல் மார்க்கெட் பகுதியில் போஜன் சைவ உணவகத்தை சுந்தர் ஆரம்பித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் வழங்கப்படும் மதிய சாப்பாடு மற்றும் பல்வேறு டிபன் வகைகள் நிறம், திடம், சுவை குன்றாமல் சுடச்சுட வழங்கி வருவதால், அப்பகுதியில் வேலைபார்க்கும் கடை ஊழியர்கள் உள்பட பல்வேறு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.

சென்ற தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளின் விற்பனை கண்காட்சியை சுந்தர் துவக்கியுள்ளார். நாங்களும் நியாயமான விலையில் வழங்கப்படும் தரமான நெய், பால் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகளை அதிகளவில் வாங்கிச் செல்கிறோம்!" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதுகுறித்து சேஷா கேட்டரர்ஸ் மற்றும் போஜன் சைவ உணவகத்தின் உரிமையாளர் சுந்தரியும் நாம் பேச்சு கொடுத்தோம். அவர் விற்பனைக் கவனித்தபடியே நம்மிடம் கூறுகையில், "நான் கல்லூரி படிப்பு முடிந்ததும் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். எனினும், என் உள்மனதில் 'தனியாக ஒரு சுயதொழில் ஆரம்பித்து, எனது குடும்பத்தினரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும்' என்கிற உந்துதல் இருந்து கொண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகளின் அருளாசியுடன் 'சேஷா கேட்டரர்ஸ்' எனும் சமையல் காண்ட்ராக்ட் நிறுவனம் துவங்கப்பட்டு, ஏராளமான மக்களின் நல்லாசியுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் திருமண நிகழ்ச்சிகளில், மண்டபத்தில் முதல் நாள் கோலம் போடுவது முதல் திருமணம் முடிந்து மறுநாள் கட்டுச்சாத கூடை வரை சிறப்பான உணவு உள்பட திருமணம் தொடர்பான பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்து வருகிறோம். இதன்மூலம் ஏராளமான மக்களின் அபிமானத்தை பெற்று வருகிறோம்.

20231101235338611.jpg

இதன் அடுத்த கட்டமாக பம்மல் மார்க்கெட் பகுதியில் போஜன் சைவ உணவகத்தை துவங்கி சிறப்பாக நடத்தி வருகிறோம். இம்முறை 'போஜன் உணவகத்தில் தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரித்து, மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்தால் என்ன?' என்ற எண்ணத்தில் விற்பனையைத் துவக்கினோம்.

இங்கு இனிப்பு மற்றும் கார வகைகளை சிறிதளவு ருசித்தபோது, தொண்டைக்குள் வெண்ணெய் உருண்டை போல் இதமாக இறங்கியது மகிழ்ச்சி அளித்தது.

இந்த கட்டுரை விளம்பரமல்ல. ஒரு சாதாரண தினத்தில் போஜன் சைவ உணவகத்திற்கு சென்ற போது அந்த ருசியில் மயங்கிய ஒரு தருணத்தில் எழுதிய கட்டுரை. அவ்வளவு தான்.