தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20231029193040164.jpeg

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்.

தலைவரே கூட்டணி கட்சிகள் நம்ப அரசாங்க நடத்தும்னு சொல்றாங்க.

நான் துணை முதல்வர் ஆவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் உதயநிதி ஸ்டாலின்.

ஆனா இப்பவே நீங்க முதல்வர் அளவுக்கு அதிகார மையமாக தான் இருக்கீங்க அமைச்சரே !

பூந்தமல்லியில் போதை பவுடர் விற்பனை.

புலம் பெயரும் போது போதை பவுடருடன் புலம்பெயர் வாங்க போல தெரியுது

திமுகவில் கனிமொழிக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை அவர்களது குடும்பத்திலும் பெண்களுக்கு சமூக நீதி சமத்துவம் இல்லை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணா அம்மா இருக்கும் போது ஆண்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் அடங்கிப் போய் இருந்தோமே அத மறந்துட்டீங்களே.

ஆளுநர் தலையிடும் அளவுக்கு சட்டங்கள் இயற்றக்கூடாது. ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கருத்து.

அப்போ ஆளுநர் தலையிடக்கூடாதுன்னு ஒரு சட்டம் இயற்ற வேண்டியதுதான்

நல்ல பெயர் எடுப்பவருக்கு தேர்தலில் வாய்ப்பு முதல்வர் ஸ்டாலின்.

உதயநிதியிடமா, இன்ப நிதியிடமா தெளிவா சொல்லலாம்ல

பாஜக வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்படுகிறார்கள். பா சிதம்பரம்

அந்த கடவுள் பெயர் அமித்ஷா மோடி கரெக்டா.

நாடு பயனடைய உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்.

ஜி எஸ் டிக்கு பிரச்சாரம் பண்றாராம்.

பால் தின வாழ்த்துக்கள் வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.

திராவிட மாடல் ஆட்சியில் வாழ்த்துக்கு கொஞ்சம் போராட தான் வேண்டும்.

தற்போது யாருடனும் கூட்டணி இல்லை ஜி. கே. வாசன்.

நம்மை யாரும் இப்போது கூப்பிடுவதில்லை தலைவரே.

பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆமா பெட்ரோல் குண்டு எல்லாம் ரோட்ல மட்டும் தான் போடுவாங்க உள்ள போட மாட்டாங்க.

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சியாக இருக்கிறது காங்கிரஸ் நடிகை குஷ்பு கருத்து.

ஓ அதனால்தான் அந்த கட்சியை விட்டு நீங்க வந்தீங்களா.

மாவட்ட ஆட்சியருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை உயர் நீதிமன்றம்.

ஆமா வேணா கைது வேணா பண்ணிக்கோங்க.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் குரல் தருகிறார் அகிலேஷ் யாதவ் பாராட்டு.

ஒடுக்கப்பட்ட கட்சிகளுக்கும் அவர்தான்

மாநில அரசுகள் ஈகோ பார்க்க கூடாது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

மொத்தத்துல அவங்க ஆளுநரை எதிர்த்து கோர்ட்டுக்கு போகக்கூடாது அதான மேடம்.

ஆதித்யா விண்கலம் மூலம் சூரியனை 24 மணி நேரமும் நாம் கண்காணிக்கலாம் இஸ்ரோ தகவல்.

இங்க உதய சூரியனை அமலாக்கத்துறை அதுதான் செய்யுது.