தொடர்கள்
விளையாட்டு
ஆஸ்திரேலியா இறுதிச்சுற்றுக்கு வந்த கதை

20231018100506129.jpg

இதுவரை 9 போட்டிகளில் மோதி ஏழு முறை வெற்றி பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பையை பல முறை வெற்றி பெற்ற நாடுதான். தென்னாப்பிரிக்காவும் ஒன்பதுபோட்டிகளில் ஏழு வெற்றி பெற்று அதுவும் தனது பலத்தை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டுதான் இருந்தது. இந்தியாவுடன் மோத போவது யார் தென்னாப்பிரிக்காவா ஆஸ்திரேலியா வா என்பதுதான் போட்டி.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் ஆரம்பமே சொதப்பல் முதல் ஓவர்லேயே விக்கெட் இழப்பு அதன் பிறகு எட்டாவது ரன்னில் இன்னொரு விக்கெட் சரிவு 22 மற்றும் 24 ரன்னில் விக்கெட் சரிவு என்று 28 ஓவரில் நூறு ரன்னை கடக்க படாத பாடு பட வேண்டியிருந்தது. அதே சமயம் தென்னாப்பிரிக்க வீரர் டேட் மில்லர் பொறுப்பாக ஆடி 116 பந்துகளில் 5 சிக்ஸர் 8 பவுண்டரி என்று 101 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா 200ரன்னை கடக்க முக்கிய காரணம் டேட் மில்லர் அடித்த சதம் தான். தென் ஆப்பிரிக்கா எடுத்த மொத்த ரன்கள் 212. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது ஆஸ்திரேலியா.

20231018074033288.jpg

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆறு ஓவரில் 60 ரன்கள்எடுத்திருந்தார்கள். அவர்கள் அடித்து ஆடிய வேகத்தை பார்த்தால் இன்னும் பத்து ஓவரில் ஆட்டம் முடிந்து விடும் என்று வர்ணனையாளர்கள் கருத்து சொன்னார்கள். சிக்ஸர்கள் பௌண்டரிகள் என்று அவர்கள் பந்தை பறக்க விட்டார்கள். 14.1 ஓவரில் ஆஸ்திரேலியா 106 ரன்கள்எடுத்திருந்தது. இதன் பின் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 16 ரன்கள் தேவை என்ற போது தென்னாப்பிரிக்கா தங்கள் பந்துவீச்சின் மூலம் அவர்கள் வெற்றியை தாமதப்படுத்தினார்கள். அவர்களால் முடிந்தது அவ்வளவுதான் .இறுதியில் ஆஸ்திரேலியா ஒரு மாதிரி சமாளித்து ஏழு விக்கெட் இழப்புக்கு 215ரன் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தென்னாப்பிரிக்கா வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கு காரணம் சுலபமான catch-களை பிடிக்காமல் கோட்டை விட்டது தான் காரணம். ஒன்பது முறை உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெற்ற தென்னாப்பிரிக்கா ஏழு முறை நாக்அவுட் சுற்று உடன் வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலியா இதுவரை எட்டு முறை இறுதி சுற்றுக்கு வந்து இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை செமி ஃபைனல் சோக்கிங்க் என்று சொல்வார்கள். ராஜ நடை போட்டு விட்டு வந்து செமி ஃபைனலில் சரேலன சறுக்கி விழுவது அவர்கள் ஸ்டைல். எப்போதும் சிங்கம் போல நடந்து வந்து விட்டு, தெருமுனை டாமி போல வாலைக் குழைத்துக் கொண்டு வெளியேறுவது தென்னாப்பிரிக்காவின் நடைமுறையாகவே ஆகி விட்டது பாவம்.