1."மனிதனும் மர்மங்களும்" எழுத உங்களுக்கு ஏன் தோன்றியது?
பேய்கள் பற்றி சில புத்தகங்கள் படித்தேன். பிறகு மர்மங்கள் பற்றி நிறைய புத்தகங்கள் படித்தேன் (என்னென்ன புத்தகங்கள் என்கிற லிஸ்ட்டை கடைசி பக்கத்தில் கொடுத்து இருப்பேனே??) இப்படி நிறைய விஷயங்கள் மூளைக்குள் புகுந்து விட்ட பிறகு ,அது என் விரல்கள் வழியாக வெளியே வந்தது!
2.குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி உடன் பழகி இருக்கிறீர்களா?
அவரை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது அந்த குறை எனக்கு உண்டு!
3.பொன்னியின் செல்வன் பார்ட் 2 படம் பார்த்து விகடனைப்போல விகடகவியிலும் சினிமா விமர்சனம் செய்வீர்களா?
என்னுடைய சினிமா விமர்சன சகாப்தம் முடிந்து விட்டதாக நான் நினைக்கிறேன்..யார் கண்டார்கள்?!
4.காதல் என்றதும் தங்கள் நினைவில் நிற்பது எது?
காதல் தான்...!!
5.நண்பனுக்கு பண உதவி செய்து திரும்பி உங்களுக்கு பணம் வந்திருக்கிறதா?
என் நண்பர்கள் யாருமே பண உதவி கேட்கிறவர்கள் அல்ல.!!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com
Leave a comment
Upload