தி(டுக்) மசோதாக்கள்.
மு(டுக்) என எழுந்த எதிர்ப்புக்கள்
க(டெக்) என அடித்த பல்ட்டிகள்
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் தேவையற்ற பேச்சால் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன் தூங்கி எழும் போதெல்லாம் இன்று என்ன புது பிரச்சனை என்ற பயத்தோடு தான் முழிக்கிறேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்ற வாரம் மூன்று விஷயங்கள் முதல்வரை தூக்கம் இல்லாமல் செய்து விட்டது. முதல் பிரச்சனை தொழிற்சாலையில் 12 மணி நேர வேலை மசோதா. இந்த மசோதாவுக்கு காரணம் கார்ப்பரேட் கம்பெனிகள் தான் அவர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கையே 12 மணி நேர வேலை என்பதுதான் இதற்கு ஒப்புதல் தந்தால் தான் முதலீடு பற்றி பேசுவோம் என்கிறார்கள். ஆகையால்,தான் இந்த மசோதாவை திமுக அரசு கொண்டுவர முடிவு செய்தது. பல கார்ப்பரேட் கம்பெனிகள் பிற மாநிலங்களில் ஓசைப்படாமல் 12 மணி நேரம் வேலை திட்டத்தைத் அமுல்படுத்திக்விட்டார்கள். தமிழ்நாட்டில் வில்லங்கமான தொழிற்சங்க தலைவர்கள் இருப்பதால் அதை சட்டபூர்வமாக நீங்கள் எங்களுக்கு செய்து தந்தால் தான் நாங்கள் தொழில் தொடங்க முடியும் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் வலியுறுத்தியதால் திமுக அரசு இந்த மசோதாவை கொண்டு வர முடிவு செய்தது. ஆனால், இந்த மசோதாவை அவர்கள் கொண்டு வர காட்டிய அவசரம் தான் அவர்களுக்கு எதிராக திரும்பியது. இந்த மசோதா கொண்டு வரப்பட்ட தினம் அன்றோடு சட்டசபை முடிகிறது அவசர அவசரமாக இந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவை கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலை சிறுத்தை கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன வெளிநடப்பும் செய்தது. அதன் பிறகும் சட்டசபைக்கு வெளியேயும் இந்த மசோதாவை இந்த அரசு வாபஸ் பெறாவிட்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தோழமைக் கட்சிகள் எச்சரித்தன.தொழிற்சங்கங்களும் இந்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் போராட்டம் எல்லாம் நடத்த இருப்பதாக அறிவித்தது. அதன் பிறகு தொழிற்சங்கத்தை அமைச்சர்கள் இந்த மசோதா பற்றி பேச பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். அந்த பேச்சுவார்த்தையின் போது கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க தலைவர் ஒருவர் நீங்கள் பாரதிய ஜனதாவை கார்ப்பரேட் அரசு என்று விமர்சிக்கிறீர்கள் இப்போது நீங்களும் கார்ப்பரேட் கம்பெனிகள் சொல்லி இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்களும் கார்ப்பரேட் அரசு தானே என்று சரமாரியாக கேள்வி கேட்டிருக்கிறார் அமைச்சர்களால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் வெளியே வந்த தொழிற்சங்க தலைவர்கள் மே 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்கள். இந்தப் போராட்ட அறிக்கையில் திமுக தொழிற்சங்க தலைவர்கள் கையெழுத்து போட மறுத்து விட்டார்கள். அன்று மாலை கூட்டணி கட்சித் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நூறாவது ஆண்டு கொண்டாடும் மே தினத்தின் போது இப்படி தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு மசோதாவை கொண்டுவர உங்களுக்கு எப்படி மனது வந்தது தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க இந்த மசோதாவை நிறுத்தி வையுங்கள் என்று கோரிக்கை வைக்க அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் அந்த ஒரு நாளில் திமுக அரசு தொழிலாளர் விரோத அரசு என்ற ஒரு புது பிம்பம் உருவானதால் பயந்து போன திராவிட முன்னேற்ற கழகம் மறுதினம் முரசொலியில் தலையங்கத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தொழிலாளர்களுக்கு என்னென்ன சலுகைகளை வழங்கியிருக்கிறது என்று பட்டியலிட்டு அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். எது எப்படியோ கூட்டணிக் கட்சிகள் மசோதாவை எதிர்ப்பதன் மூலம் ஜால்ரா சத்தம் தொடர்ந்து கேட்காது என்பதை திமுகவுக்கு புரிய வைத்து விட்டார்கள்.
அடுத்து இரண்டாவது பிரச்சினை இது தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்ட தான் காரணம்.அந்த அரசாணையில் திருமண மண்டபம் விளையாட்டு மைதானம் மற்றும் வணிகம் சாரா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில் மதுவுக்கு அனுமதி தந்துசிறப்பு ஆணை வெளியிட்டு இருந்தார். இவ்வாறு மது பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் போன்றவை அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 18-ஆம் தேதி என்று குறிப்பிட்டுள்ள அந்த அரசாணை சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பிறகு தான் வெளியாகி இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆணை வெளிவந்த சில மணி நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இந்த அரசாணைக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வைகோ தனது அறிக்கையில் மதுக்கடைகளை குறைப்பதாக அறிவித்துவிட்டு மது குடிப்பதற்கு புதியதாக ஒரு அரசு ஆணையை வெளியிட்டது என்ன நியாயம் என்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
சமூக வலைத்தளங்களில் திராவிட முன்னேற்ற கழக அரசை ஏகத்துக்கு கலாய்த்து மீம்ஸ் வர தொடங்க வேறு வழியின்றி இந்த அரசு ஆணையும் நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியானது. அதேசமயம் உயர்நீதிமன்றமும் இந்த அரசு ஆணைக்கு தடைவிதித்து இருக்கிறது.
மூன்றாவது பிரச்சனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ. அந்த ஆடியோவில் ஒரே ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் சபரீசன் முப்பதாயிரம் கோடி சம்பாதித்து இருப்பதாக பழனிவேல் தியாகராஜன் பேசியிருப்பதாக அந்த ஆடியோவில் பதிவாகி இருக்கிறது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை நான் ஏற்கனவே வெளியிட்ட திமுக பைல்ஸ் ஆதாரம் ஒப்புதல் வாக்குமூலம் இந்த ஆடியோ தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த ஆடியோவை பதிவு செய்திருந்தார் அதன் பிறகு சமூக வலைதளத்தில் அந்த ஆடியோ சுற்றி சுற்றி வந்தது.மூன்று நாட்களுக்குப் பிறகு பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் நான் அவன் இல்லை அந்த ஆடியோ போலியானது என்று குறிப்பிட்டார். பழனிவேல் தியாகராஜன் மறுப்பறிக்கை வெளியிட்ட மறுநாள் அண்ணாமலை இன்னொரு ஆடியோவை வெளியிட்டார் அதில் சபரீசன் உதயநிதி இவர்கள் இருவர் தான் கட்சியா என்று கேட்டிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன். இப்போது நிருபர்களை சந்தித்து விளக்கம் எல்லாம் தராமல் வீடியோ அறிக்கையாக பழனிவேல் தியாகராஜன் அண்ணாமலை வேண்டுமென்றே கீழ்த்தரமாக இப்படி போலி ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று கடுமையாக அண்ணாமலையை சாடி இருக்கிறார் பழனிவேல்தியாகராஜன்.ஆனால்,அண்ணாமலை தரப்பு அவசரப்படாதீர்கள் இன்னும் ஆடியோ 3 , 4 என்று தொடர்ந்து வெளியாகும் அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்று நக்கல் அடிக்கிறார்கள். பழனிவேல் தியாகராஜன் எதிர்கோஷ்டி இந்த விஷயத்தை அறிவாலயத்தில் பெரிதாக ஊதி விடுகிறது இதனால் நமது கட்சிக்கும் ஆட்சிக்கும் சங்கடம் என்றெல்லாம் திமுக தலைவர்கள் பேசத் தொடங்கி விட்டார்கள்.முதல்வர் ஸ்டாலினும் பேசாமல் தங்கம் தென்னரசை நிதியமைச்சர் ஆக்கிவிட்டால் என்ன என்று யோசிக்கிறார்.
அதே சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தலைவர் என்ற முறையில் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க ரொம்பவும் யோசிக்கிறார் இதுவரை மாநகராட்சி மேயர்கள் ஆறு பேர் மீது திமுக கவுன்சிலர்களே புகார் சொல்லி இருக்கிறார்கள் திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றெல்லாம் கூட மிரட்டி இருக்கிறார்கள். ஆனாலும், திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க யோசிக்கிறார். இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை பற்றி முதல்வர் சைபர் கிரைம் பிரிவில் தந்து விசாரிக்கச் சொன்னபோது அந்த ஆடியோவில் உள்ள விஷயம் பழனிவேல் தியாகராஜன் பேசியதுதான் இது சைபர் கிரைம் முதல்வருக்கு தகவல் சொல்லி இருக்கிறது. அதன் பிறகும் முதல்வர் நடவடிக்கை எடுக்க யோசிக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி பொறுத்த வரை கட்சி தனது கண்டிப்பான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவார் முடிவெடுப்பது நான்தான் என்பதை நிரூபிப்பது போல் அவரது தடாலடி நடவடிக்கை இருக்கும்.ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்தக் கண்டிப்போ ஆளுமையோ இருப்பதாக தெரியவில்லை.
Leave a comment
Upload