தொடர்கள்
அரசியல்
தமிழகத்தில் மீண்டும் புலிகள் நடமாட்டம் ! -ப. ஒப்பிலி

20230328185029550.jpg

வேட்டை தடுப்பு காவலர் முத்து கணேஷ் மற்றும் அவரது குழுவினை சேர்ந்தவர்கள் திருநெல்வேலியின் கள்ளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென அனுமன் குரங்குகளின் எச்சரிக்கை குரல்கள் எதிரொலித்தன. இம்மாதிரியான குரல்கள் அனைத்து தாவர உண்ணிகளுக்கு புலி சிறுத்தையின் வரவை பறைசாற்றும் ஒரு எச்சரிக்கை.

எதிர்பாராத இந்த குரலால் வன பணியாளர்கள் தங்கள் பயணத்தை நிறுத்தி கூர்ந்துகவனிக்க ஆரம்பித்தனர். திடீரென ஓர் ஆண் வங்க புலி, வனத்தின் ஒரு பகுதியில்இருந்து மற்றொரு பகுதிக்கு நடந்து சென்றது. இது மாதிரியான பதிவுகள் புலிகள் காப்பகத்தின் வெளி பகுதிகளில் வனத் துறையால் கண்டறியப்பட்டுள்ளது. முதுமலை,ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை ஆகிய ஐந்து புலிகள் சரணாலயத்தின் வெளியே உள்ள பகுதிகளில் புலிகள் நடமாட்டம் பதிவு செய்ய பட்டுள்ளது.

20230328155247902.jpeg

ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ச ராமசுப்பிரமணியன் கூறுகையில்புலிகள் சரணாலயத்தில் முக்கிய பகுதிகளில் கேமரா டிரப்களை (Camera traps) நிறுவி, புலிகளின் நடமாட்டம் கண்காணித்து வருகிறோம். ஆனால், இந்தபாதுகாக்க பட்ட சரணாலயத்தின் வெளி பகுதிகளில், புலிகளின் நடமாட்டம் இருந்தபோதும் அது புலிகள் கணக்கெடுப்பு எண்ணிக்கை உடன் சேர்க்கப்படுவதில்லை.எனவே, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் கேமரா ட்ராப் பொருத்தி புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளதாக கூறுகிறார் .

ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் வெளி பகுதிகளில் வன காவலர்கள் மற்றும்வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது முள்ளி என்றஇடத்தில் ஒரு பெண் புலி தன் இரண்டு குட்டிகளுடன் சென்றதை வனத்துறையினர்பதிவு செய்துள்ளனர். அதே போல காரமடை, சிறுவாணி வன பகுதிகளில் புலிகள்நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் சரணாலயத்திற்கு வெளியில்உள்ளது என்கிறார் ராமசுப்பிரமணியன்.

2023032815532010.jpeg

கடந்த சில வருடங்களாகவே பாதுகாக்க பட்ட பகுதிகளுக்கு வெளியே புலிகள்நடமாட்டம் உள்ளதாக புலிகள் ஆராய்ச்சியாளர் உல்லாஸ் கரந்தும் கூறுகிறார். மேற்குதொடர்ச்சி மலையின் மத்திய பகுதியில் தமிழ் நாடு, கர்நாடக மற்றும் கேரளா வனங்களில் வெளி பகுதியில் புலிகள் நடமாட்டம் இருக்கிறதாம். ஆனால்,இந்த புலிகள் தேசிய புலிகள் கணக்கெடுப்புடன் சேர்க்கப்படாமல், புலிகளின் எண்ணிக்கை வெளியிடப்படுகிறது. இது ஒரு தவறான முறை என்கிறார் இவர்.

நீலகிரி மாவட்ட முன்னாள் வன அதிகாரி எஸ் பத்ரசாமி கூறுகையில் நீலகிரி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது முதுமலை புலிகள் காப்பகம் தான். ஆனால் நெடுங்காலமாகவே புலிகள் காப்பகத்தின் வெளி பகுதிகளில் புலிகள்நடமாட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக அவலாஞ்சி, அப்பர்பவானி (upper Bhavani) மற்றும் பார்சன் பள்ளத்தாக்கு பகுதிகளில் புலிகள்நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் அவர். இந்த பகுதிகள் நீலகிரி தெற்கு வனக்கோட்டம் பகுதிகளில் அமைந்துள்ளது என்றார் அவர்.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் டி வெங்கடேஷ் கூறுகையில் புலிகள் சரணாலயத்தில் வெளியில் உள்ள காப்பு காடுகளில் புலிகள் நடமாட்டம் உள்ளது பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் பதினைந்திற்கும்அதிகமாக புலிகள் சரணாலயத்தில் வெளி பகுதிகளில் உள்ளன. இவற்றின்நடமாட்டம் அந்த பகுதியில் உள்ள வனத்தின் வளத்தையும் மற்றும் ஊன் உண்ணிகள்உணவான புள்ளி மான், கட மான் மற்றும் காட்டு மாடுகள் ஆகியவை போதிய அளவில்உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது, என்கிறார் அவர்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் புலிகள் கணக்கெடுப்பு முறைகள் தவறானஒன்றாகும் என்கிறார் உல்லாஸ் கரந்த். இந்த முறையில் வெளிப்படைத்தன்மை என்பதே இல்லை. அதனால் ஆணையம் வெளியிடும் இந்திய புலிகளின்எண்ணிக்கை சரியான ஒன்று இல்லையென அவர் சாடுகிறார். மேலும், அதே தவறான நடைமுறை ஒவ்வொரு மாநில வனத்துறையினரும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் வருத்தத்துக்குரியது, என்கிறார் உல்லாஸ் கரந்த்.

வன ஆர்வலர்களுக்கும், புலிகள் பாதுகாப்பிற்காக பாடுபடும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை தந்தாலும், இன்னும் சிறப்பான வழிமுறைகளைக் கொண்டு கணக்கெடுப்பு செய்தால், புலிகளின் எண்ணிக்கை துல்லியமாக கண்டறிய முடியும் .