தொடர்கள்
ஆரோகியம்
புழல் நீர்த்தேக்கத்தில் கலக்கும் கழிவு நீர் ! ஒரு அதிச்சி ரிப்போர்ட்   - ப ஒப்பிலி 

20230328154634382.jpg

சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரியில் ஒரு நாளுக்கு இரண்டு லட்சம் லிட்டர் கழிவு நீர் கலப்பது உங்களில் எத்தனை பேருக்குதெரியும்?. மெட்ரோ வாட்டர் இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் வீடுகளுக்கு தினமும் தண்ணீர் விநியோகம் செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு நீர்த்தேக்கத்தை முறையாக பராமரிக்க வேண்டாமா என்பதே நமது கேள்வி.

கடந்த வாரத்தில் அந்த நீர்தேக்கத்திற்கு சென்ற போது பேரதிர்ச்சி காத்திருந்தது. கிட்டத்தட்ட ஆறு இடங்களில் கழிவு நீர் ராட்சத குழாய்கள் மூலம்நீர்த்தேக்கத்தில் கலப்பதை நேரில் காண முடிந்தது. செங்குன்றம் கொடுவள்ளி சாலையில் ஒரு இடத்திலும், வெங்கடாசலம் நகர், திருமுல்லைவாயில் பகுதியில் ஐந்து இடங்களில் கழிவு நீர் கலப்பதை காண முடிந்தது. இந்த இடம் நீர்தேக்கத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

20230328154748443.jpg

கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்க நிறுவனர் சேகரன் கூறுகையில் அம்பத்தூர் பகுதியில் ஒரு சில இடங்களில் இருந்தும், திருமுல்லைவாயல்பகுதியில் உள்ள வீடுகளின் கழிவு நீரும் புழல் ஏரியில் கலக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த வசிப்பிட பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிஇல்லாததே, என்கிறார் சேகரன்.

2023032815484234.jpg

திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகர் பகுதியை சுற்றி ஒரு லட்சம் வீடுகளுக்கு மேல் உள்ளன. அதே போல அம்பத்தூரில் ஒரு பகுதியில் லட்சத்திற்கும்மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உற்பத்தியாகும் கழிவுநீர் நேரடியாக புழல் நீர் தேக்கத்தில் கலக்கிறது. இதனால் நீர்த்தேக்கத்தின் வட மேற்குபகுதியில் ஆகாய தாமரை கம்பளம் விரித்தாற்போல் பறந்து விரிந்து காணப்படுகிறது. இந்த ஆகாயத்தாமரையின் பெருக்கத்தால் நீர் நிலைக்குள் சூரியஒளி நேரடியாக வீச முடிவதில்லை. சூரிய ஒளி இல்லாததால் நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, மீன் மற்றும் இதர உயிர்கள் வாழ முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், இந்த ஆகாய தாமரை கொசுக்கள் பெருக்கத்திற்கு ஒரு காரணமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த நீரைசுத்தப்படுத்தி விநியோகித்தால் நோய் கிருமிகள் பரவ அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

20230328154904506.jpg

புழல் ஏறி மற்றும் அராபத் ஏறி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ச சுந்தரமூர்த்தி கூறுகையில் நீர்த்தேக்கத்தில் கழுவு நீர் கலக்கும் பிரச்சனை கடந்தபத்து ஆண்டுகளாக உள்ளது. இந்த பகுதியில் 2013இல் ஆவடி மாநகராட்சியால் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. முதல் இரண்டு மூன்று வருடங்களுக்குமழை நீர் மட்டுமே அதில் சென்று கொண்டிருந்தது. காலப்போக்கில் இந்த பகுதி வளர்ச்சி அடைய அடைய, மேலும் மேலும் வீடுகள் மற்றும் அடுக்கு மாடிகுடியிருப்புகள் வர தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்த போது, அங்கு உற்பத்தியான கழிவு நீரை பாதாள சாக்கடைமூலம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று மறு சுழற்சி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம்இல்லாத சூழலில், பொது மக்கள் தங்கள் வீடு கழிவு நீரை மழை நீர் வடிகாலுக்கு திருப்பி விட்டு விட்டனர். அது தான் தற்போது பெரும் பிரச்சினையாகஉருவெடுத்துள்ளது, என்றார் சுந்தரமூர்த்தி.

பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் இது பற்றி கேட்ட பொது, கழிவு நீர் புழல் நீர்த்தேக்கத்தில் கலப்பது குறித்து பல முறை மேல் அதிகாரிகளிடம் முறைஇட்டு விட்டோம், ஆனால் இது வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் அதிகாரிகள். சமீபத்தில் இந்த பகுதியை சேர்ந்த ஆளும் கட்சிபிரமுகர் ஒருவரிடம் இது குறித்து கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போது, பொது மக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அனுமதிக்கமுடியாது எனகறாராக கூறி விட்டார்.

பொது மக்களும், நீர் ஆதார பாதுகாப்பு அமைப்புகளும் அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, நீர்த்தேக்கத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்கஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். இவ்வாறு துரித நடவடிக்கை எடுத்தால் தான் கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் தொற்று நோய்கள்மக்களிடம் பரவாமல் தடுக்க முடியும். இல்லையெனில், நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.