1. வெவ்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதிகள் வாழ்க்கை நடத்துவது ஈஸியா? மதம் மாறி கல்யாணத்தை விட இது கொஞ்சம் சிரமம் இல்லையா?
இதில் அது, இது என்பது கிடையாது. மனமொத்த தம்பதியாக இருப்பது தான் முக்கியம்.
2. கப்பல் பயணம் செய்திருக்கிறீர்களா? வாந்தி எடுத்த அனுபவம்??
குட்டி ட்ரிப் போயிருக்கிறேன்.வாந்தி எல்லாம் எனக்கு வந்ததே இல்லை!
3. சுஜாதாவும் இலக்கியவாதிதான் என்று அடித்துச் சொல்லுவேன், உங்கள் கருத்து?
இலக்கிய வாதியைவிட அவர் கொஞ்சம் மேல். கமர்ஷியலாகவும் அவர் வெற்றி பெற்றவர் என்பதை நினைவில் கொள்க!
4.திருப்பதி ,சபரிமலை இப்படி மலைக் கோயில்களுக்கு செல்வது உண்டா?
திருப்பதிக்கு பலமுறை சென்று இருக்கிறேன். நாலைந்து முறை நடந்தே மலையேறி இருக்கிறேன். 'முழங்கால் முடிச்சு' என்கிற இடங்களில் செங்குத்தான படிகளில் ஏறும்போது அழுகை வரும்! சபரிமலைக்கு சென்றதில்லை.
5.நம்மூரில் எத்தனை பெரிய அயோக்கியத்தனமாக இருந்தாலும் அப்படியே அமுங்கிப் போகிறதே? உ-ம் :பொள்ளாச்சி. என்ன காரணம்?
மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் ஆர்வம் போய் புதிய பிரச்சினைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள்.அது தவறல்ல, ஆனால் சட்டம் கரெக்டாக இயங்கி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வழி செய்ய வேண்டும். அதுவும் நடக்காவிட்டால் நீங்கள் சொல்வது போல 'அமுங்கி போய் தான்' விடும்!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com
Leave a comment
Upload