தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 29- காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

சத்தியம் இது சத்தியம்


இது சத்தியம் திரைப்படம் வெளியான போது .. இந்தப்பாடல் மிக பிரபலமானது! மேலும் இது பற்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறிப்பிட்டபோது, பாடல்களை இசையமைக்கும் ஸ்டுடியோக்களைத் தாண்டி.. மெல்லிசை என்கிற புதிய வகையில் மக்கள் மத்தியில் இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு அப்பாடல்களை பாடுகின்ற வழக்கத்தை தாங்கள்தான் சேலத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார். அதுபோன்ற இசைக்குழுவின் முதல் பாடலாக இசை வழியே இந்தப் பாடல் ஒலிக்கப்படுமாம்!! அந்த அளவு இப்பாடல் மக்களின் வரவேற்பினைப் பெற்ற பாடல் என்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்!


சத்தியம் இது சத்தியம்
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்ல்லால்
கண்ணதாசன் பாடல்களில் உள்ள கருத்து முத்திரைகள் அற்புத வெளிப்பாடாக அமைபவை. தாயின் கருவறை முதல் பள்ளி அறை வரை எத்தனையோ சிறைகளைப் பார்த்துவிட்டேன் போடா போ.. என்கிற எதார்த்தங்களை பாடல் வரிகளாக்கித் தந்திருக்கிறார்.
பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்
பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்
பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
எத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன் போடா போ
போடா.. போ..
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
துன்பங்கள் துரத்தும்போது மனம் துவண்டுபோகிறது. இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்தான் என்கிற எண்ணம் மறந்துவிடுகிறது. கவிஞரின் வரிகளைக் கேளுங்கள்.. தன்னம்பிக்கை தானே மலரும்! !
தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாணென்ன முழமென்ன
தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன
தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாணென்ன முழமென்ன
தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன
விலைக்கு மேலே விலைவைத்தாலும் மனிதன் விலை என்ன
உயிர் விட்டுவிடால் உடல் சுட்டுவிட்டால் அதில் அடுத்த கதை என்ன.. என்ன
அதில் அடுத்த கதை என்ன
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
கவிஞர் எடுத்துக்காட்டும் உவமைகள் பளிச்சென்று மனதில் பதிகின்றன. மனிதன் யார்? மிருகம் யார்? என்கிற வரையறை காட்டி.. நேர்மையிலும் வேர்வையிலும் வாழ்பவனே தெய்வமடா என்று நிறைவு செய்கிறார்!
பஞ்சை போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக்காரனடா
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதியை ஒளித்து வாழ்பவன் நிச்சயம் மிருகமடா
நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா..
தினம் வாழ்பவன் தெய்வமடா
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
சத்தியம் இது சத்தியம்..

பயணம் தொடரும்...