எங்களுக்கும் காலம் வரும்..
1961ஆம் ஆண்டு.. கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்கள் முழுக்க முழுக்க பிரபலமான இரண்டு படங்கள் எனது நினைவில்.. ஒன்று பாசமலர்.. மற்றொன்று பாலும் பழமும்.. நான் பிறந்த ஆண்டும் 1961 என்பதில் எனக்கொரு சந்தோஷம்.
ஏ.பீம்சிங் இயக்த்தில் தமிழ்த்திரையில் உருவான “ப” வரிசைப் படங்கள்.. பாசத்திற்கும் பந்தத்திற்கும் பவித்ரமான எடுத்துக்காட்டுக்கள்! பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பாகப்பிரிவினை, பச்சை விளக்கு, பாதகாணிக்கை, பாவமன்னிப்பு என்று பவனிவரும் படங்கள் யாவும் மக்கள் மனதில் மறக்கவொண்ணா காவியங்களாக விளங்குபவை. இப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வெள்ளிக்கிண்ணத்தில் ஏற்றிய தீபங்களாய் காலங்களை வென்று இன்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. பெரும்பாலான பாடல்கள் கவியரசு கண்ணதாசன் இயற்றியவையாகவும், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்ததாகவும் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு காட்சிக்காக.. ஒவ்வொரு திரைக்கதையின் தேவைக்காக புனையப்பட்டிருந்தாலும், நமது அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்து பின்னிப் பிணையப்பட்டிருப்பதுதான், இவற்றின் வெற்றிக்கான மூல மந்திரமாகும். மனித எண்ணங்களை வளமாக்கி, வாழ்த்துப்பாடி, வரவேற்று, உற்சாகம் ஊற்றெடுக்க இதுபோன்ற பாடல்கள் வழிவகுக்கின்றன என்பது உளவியல் சார்பான கூற்று. நேர்மறை எண்ணங்களில் நம் நெஞ்சங்கள் பயணிக்க, ஆழ்மனம்வரை அவை அவசியாய் வேரூன்றி பரிணமிக்க, மனதில் ஒரு ஒளிவெள்ளம் பாய்ந்துவரும்! ஒட்டுமொத்தமாய் சொல்கிறேன்..- தனிமனித வாழ்வின் நம்பிக்கை – தன்னம்பிக்கையர் துளிர்விட்டு வளரக்கின்ற பாட்டுப் புதையல்களை நம் வரும்காலச் சந்ததிகளுக்கும் கொண்டுசென்று சேர்க்கிற பொறுப்பை நாம் ஏற்போம்! அதற்கான வழிவகுப்போம்!!
நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இணைந்துவழங்கிய பாசமலரில் பண்பட்ட நடிப்பில் பதிவான பாட்டு இது! விஸ்வநாதன் ராமமூர்த்தி எனும் வெற்றிநாயகர்கள் இசையில் புடம்போட்டத் தங்கமாய் மிளிரும் பாட்டு! தான் வாழ்வதே பெரும்பாடெனும் இவ்வாழ்க்கைப் போராட்டத்தில் எல்லோரையும் வாழ வைப்பேன் என்கிற பொதுவுடைமைச் சிந்தனையை விதைக்கும் பாட்டு! ஆயிரமாயிரம் பக்கங்களிலல் மொழியவேண்டிய நல்அறிவுப் பொக்கிஷத்தை ஒரே பாடலில் உரக்கிச் சொல்லும் பாட்டு! வெ்ளை மனதாய் வாழும் உள்ளங்களின் பிள்ளை மொழியாய் தவழ்ந்திடும் பாட்டு! கேட்கும்போதெல்லாம் உற்சாக கங்கை ஓடிவரும் பாட்டு! பச்சைக் குழந்தைபோல் நடிகர்திலகம் திரையில் தோன்றி நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த பாட்டு!
தந்தானேதானேதந்தானேதந்தானேதானேனேனா
தந்தானேதானேதந்தானேதந்தானேதானேனேனாஓ....ஓ..ஓ..ஓ..
தந்தானதானதந்தானேதானேதந்தானேனேதானேதானேதந்தானேனேதானேதானேதந்தானேதந்தா
எங்களுக்கும்காலம்வரும்காலம்வந்தால்வாழ்வுவரும்
வாழ்வுவந்தால்அனைவரையும்வாழவைப்போமே
தந்தானேதானேதந்தானேதந்தானேதானேனன்னா
தந்தத்தானேதந்தன்னாதந்தத்தானேதந்தன்னாஆ..ஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ
வளரும்வளரும்என்றேகாத்திருந்தோம்
மலரும்மலரும்என்றேபார்த்திருந்தோம்
மலர்முடிந்துபிஞ்சுவரும்வளர்ந்தவுடன்காய்கிடைக்கும்
காய்களெல்லாம்கனிந்தவுடன்பழம்பறிப்போமே
எங்களுக்கும்காலம்வரும்காலம்வந்தால்வாழ்வுவரும்
வாழ்வுவந்தால்அனைவரையும்வாழவைப்போமே
தந்தத்தானேதந்தன்னாதந்தத்தானே
தந்தன்னாஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ
உழவும்தொழிலும்இங்கேநாம்படைத்தோம்
உறவும்சுவையும்என்றும்நாம்வளர்த்தோம்
பணம்படைத்தமனிதரைப்போல்பஞ்சுமெத்தைநாம்பெறுவோம்
மாடிமனைவீடுகட்டிவாழ்ந்திருப்போமே
நெஞ்சில்ஒருகளங்கமில்லைசொல்லில்ஒருபொய்யுமில்லைஆ...ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லாவாழ்க்கையிலேதோல்வியுமில்லைஆ..ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லாவாழ்க்கையிலேதோல்வியுமில்லைஆ.ஆ.ஆ.அ
தோல்வியுமில்லைஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
எங்களுக்கும்காலம்வரும்காலம்வந்தால்வாழ்வுவரும்
வாழ்வுவந்தால்அனைவரையும்வாழவைப்போமே
பயணம் தொடரும்..
Leave a comment
Upload