Heading : இந்தியாவை விட்டுக் கொடுத்த ராகுல் - புயல்கிளப்பும் சர்ச்சை.
Comment : Had he born in India, he will not talk bad or I’ll about India, but he is not so
Venkat R, Chennai
Heading : இந்தியாவை விட்டுக் கொடுத்த ராகுல் - புயல்கிளப்பும் சர்ச்சை.
Comment : நம்ம நாட்டுல நடக்கிறதை பத்தி, இங்குள்ள பிரதமரை பத்தி அந்நாட்டுக்காரங்க கேட்டா, 'நோ காமெண்ட்ஸ்'னு ராகுல் காந்தி சொல்லிட்டு போக வேண்டியதுதானே! இது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அவங்க பாட்டி இந்திரா காந்தியின் செயல்பாடுகளை பற்றி கேட்டு தெரிஞ்சு திருந்தட்டும்.
சசிகலா சந்திரசேகர் , ஐதராபாத்
Heading : அனாதைகளாகும் யானைகள் ! மின்சார வேலி பயங்கரம் - ப.ஓப்பிலி
Comment : ஒப்பிலியின் அனாதைகளாகும் யானைகள் பற்றிய கட்டுரையை படித்து முடித்ததும் நெஞ்சு கனத்தது. இதுபோன்ற உயர் அழுத்த மின் திருட்டு மற்றும் மின்வேலிகள் அமைப்பதை முற்றிலும் தடுப்பதற்கு தமிழக முதல்வர் மின்சார மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, யானைகளின் உயிரிழப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதா வெங்கட் , ஆலப்பாக்கம்
Heading : ஊட்டியில் கவர்னர் மகிழ்ச்சி சந்திப்பு ! மகளிர் வழக்கறிஞர்கள் - ஸ்வேதா அப்புதாஸ்
Comment : மகளிர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் பெண் வழக்கறிஞர்கள் சந்திப்பு, அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதை ஸ்வேதா கைவண்ணத்தில் படங்களுடன் படித்து மகிழ்ந்தோம்.
மாலினி கமலசேகர் , கும்பகோணம்
Heading : ஒரு இடைத்தேர்தல் பார்சல்- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்
Comment : ஆர்னிகா நாசரின் ஒரு இடைத்தேர்தல் பார்சல் நகைச்சுவை சிறுகதை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிட கட்சிகள் வழங்கிய பல்வேறு அன்பளிப்புகள், மக்களின் மனதில் 'அனைத்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வராதா... நமக்கும் அதிகளவில் பணம் வராதா?' எனும் விபரீத ஆசையைத் தூண்டி விட்டிருப்பது அழகாக விளக்கியது. இனியாவது அரசியல்வா (வியா)திகள் திருந்தினால் சரி!
சிவசங்கரன், ஹரிஹரன், அகமதாபாத்
Heading : ஊட்டி 200 ம் புத்தக திருவிழாவும் - ஸ்வேதா அப்புதாஸ்.
Comment : ஊட்டி 200 புத்தக கண்காட்சியை சுற்றி பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஏராளமான பயனுள்ள புத்தகங்களை வாங்கி படித்து வருகிறேன். இதுவே கோடை விடுமுறை காலங்களில் நடந்திருந்தால் இன்னும் பலர் பயனடையும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது நிஜமே!
ரேணுகா ஹரி , கோவை
Leave a comment
Upload