தொடர்கள்
கவர் ஸ்டோரி
தேர்வு எழுதும் மாணவர்கள் தயாராக ... சூப்பர் டிப்ஸ். ! சத்தியபாமா உப்பிலி

20230217194327313.jpeg

இது பரீட்சை நேரம். எங்கு பார்த்தாலும் பயம் கலந்த பேச்சு தான். பள்ளி சிறார்கள், அவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அனைவரும் களைத்துப்போகும் நேரம். இந்த பயம் காலம் காலமாக இருக்கத்தான் செய்கிறது. அனால் இப்போது அதிகம். போட்டிகள் அதிகம், போட்டி மனப்பான்மை அதிகம், ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு பதட்டமடைதல் அதிகம். அனேக பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகளின் மேல் சுமத்துவது, அவர்களே அறியாமல் அவர்களை ஒரு சமூக அழுத்தத்திற்கு கொண்டு செல்வது எல்லாம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. “இப்போ பிரஷர் குடுக்கலேன்னா, பின்னாடி அவங்களே கேப்பாங்க . நான் தான் சோம்பேறியா இருந்தேன். நீக்க ஏன் என்ன அடிச்சு படிக்க வெக்கலன்னு". இப்படிப்பட்ட ஒரு கருத்து பெரும்பாலும் அத்தனை பெற்றோர்களிடமும் இருக்கிறது. இதன் உண்மை தன்மையை முழுவதும் ஒதுக்கி விடலாகாது.

இதை பற்றி, வித்யா ரத்னா பள்ளியின் முன்னாள் துணை முதல்வர் திருமதி. உஷா பாஸ்கரனிடம், பேசும் போது அவர் பகிர்ந்து கொண்ட கருத்து:

20230217194402549.jpeg

"எக்ஸாம் நெருங்க நெருங்க மாணவர்களை பெரிதும் பாதிப்பது பீதி. நன்றாக படிக்கும் மாணவர்களையும் இது தாக்குகிறது. காரணம் என்ன என்று ஆராய்ந்தால் அவர்களை சுற்றி உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டடாயம் அவர்கள் மேல் திணிக்கப் படுவதால். பெற்றோர்கள் எதிர் பார்த்த அளவு மார்க் வாங்க வேண்டும்; அவனது/அவளது மதிப்பெண்ணே அவர்கள் பள்ளியின் தரத்தை நிர்ணயிப்பதால் பள்ளிகளின் எதிர்பார்ப்பு ; பின் அவன்/அவள் நண்பர்களை விட அதிக மதிப்பெண்கள் வாங்கினால் தான் நல்ல கல்லூரிகளில் இவர்கள் விரும்பிய வகுப்பு எடுக்க முடியும் என்ற சக அழுத்தம் அது மட்டுமல்லாது ஃபெயில் ஆகி விடுகிற மாணவ மாணவியர்கள் தான் ஃபெயில் ஆகிட்டோம் என்பதை விட மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற கவலை. இது அத்தனையும் ஒன்றாய் சேர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

கற்றல் கற்பித்தல் வருடம் முமுவதும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு ஆனால் அப்போது இல்லாத கலக்கம் பரிட்சை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? பரிட்சையின் முடிவுகள் மாணவனை நேரிடையாக பாதித்தாலும் அவனை சார்ந்து, சுற்றியிருப்பவர்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமே ஒரு மன அழுத்தத்தை மாணவனுக்கு தருகிறது.

தன்னுடைய அறிதலுக்கும் புரிதலுக்கும் மட்டுமே படிக்கின்றவன் தன்னைச் சுற்றி உள்ள உலகத்தை ஆராய்ந்து தான் கற்றதை அதனுடன் ஒப்பிட்டு அதை புரிந்து கொள்வதால் இவை சைக்கிளிங் ,ஸ்விம்மிங்க் போன்று மசில் மெமரியாக மாறி பழக்கம் விட்டாலும் மறக்காமல் இருக்கும். ஆகவே மாணவர்களே மார்க் வாங்க என்று படிக்காமல் தெரிந்து,அறிந்து,புரிந்து கொள்வதற்கு படியுங்கள்."

இவர் சொல்லுகிற அந்த மன அழுத்தத்தில் கொண்டு விடக்கூடிய பல வகை சமூக அழுத்தங்கள் எப்படி ஆரம்பிக்கிறது? அதற்காக குழந்தைகள் தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்களா இல்லை அழுத்தத்திற்கு ஆளாகி படிப்பில் கவனம் இழக்கிறார்களா? சில ஆண்டுகளுக்கு முன் உயர் நீதி மன்றம் எல்லா பள்ளிகளிலும் ஒரு மனநல ஆலோசகர் கட்டாயம் இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. அதை சில பள்ளிகள் கடை பிடிக்கின்றனர். அவர்களிடம் பேசும் போது, குழந்தைகளின் மனநலத்தையே முன் வைக்கிறார்கள். இந்த வளையொலி சென்னையிலும், பெங்களூரிலும் சில பள்ளிகளில் மனநல ஆலோசகராக பணியாற்றிவரும் ரம்யாவின் நேர்க்காணல்.

இரண்டு பகுதிகளாக இங்கே குரல் நேர்காணல்.

முதல் பகுதி

இரண்டாவது பகுதி