தொடர்கள்
சினிமா
சிவகார்த்திகேயன் அக்காவுக்கு விருது - மாலா ஶ்ரீ

20230028063822799.jpg

'கனா' படத்தை சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்து வெற்றி கண்டார். இதன் அறிமுக விழாவில் தனது மனைவி, குழந்தை, சகோதரியான டாக்டர் கவுரி மற்றும் தாயை அறிமுகப்படுத்தி, தனது தந்தையைப் பற்றி பேசினார். அப்போது தனது சகோதரி பற்றிய ஒரு சம்பவத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் நினைவுகூர்ந்தார். அதில், எனது அக்கா டாக்டருக்கு படிக்க வேண்டும் என தந்தை விரும்பி, ₹15 லட்சம் கடன் வாங்கி, அட்மிஷனுக்கு கல்லூரி வரை அக்காவை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு 'நான் நன்றாக படித்து, அடுத்த வருடம் மெரிட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து கொள்கிறேன்' என தந்தையிடம் அக்கா கூறிவிட்டார். அதன்படியே அடுத்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்ததால், நாங்கள் ₹15 லட்சம் கடனிலிருந்து தப்பினோம். சிறிது காலத்தில் என் தந்தை இறந்துவிட்டார். என் தந்தைக்கு கொடுத்த வாக்குப்படி அக்கா டாக்டராகி பெருமைப்பட வைத்துள்ளார் என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

20230028063935840.jpg

நடிகர் சிவகார்த்திகேயனின் மூத்த சகோதரி கவுரி, தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பேதாலஜி பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 26-ம் தேதி 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் கவுரிக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். எங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சிறந்த மருத்துவர் விருதுக்காக வாழ்த்துகள் அக்கா. எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அப்பா நிச்சயம் பெருமைகொள்வார். உனது நேர்மையும் உழைப்பும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

20230028064016670.jpg

விகடகவி மட்டும் என்ன ஒழுங்கா... தலைப்பையே சிவகார்த்திகேயன் அக்காவுக்கு விருதுன்னு தான் போட்டிருக்கு என்று கேட்கலாம்....

என்ன செய்வது...சினிமா தமிழகத்தை படுத்தும் பாடு அப்படி.

தவிரவும் சிவகார்த்திகேயனின் சின்ன வயசு போட்டோவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்குமா இல்லையா ???

(யப்பா சமாளிச்சாச்சு)

அப்படியே ஒரு குறளும் சொல்லிக்கிறேனே ப்ளீஸ்.....

கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு

மாடல்ல மற்றயவை. !!!

மாலா ஶ்ரீ