தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20230027163751466.jpeg

கொலிஜியம் மீது மத்திய அரசு மீண்டும் குற்றச்சாட்டு

20230027164450907.jpg

நன்றி: தினமணி

பாவம் நீதிபதிகள்

தமிழகம் அமைதி பூங்காவாக தொடர நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

அதாவது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்தால் நாங்கள் அமைதி பூங்காவுக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஆமாம் தலைவரே திமுக தான் இறங்கி வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க இல்ல இனிமே நமக்கு என்ன கவலை.

இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடட்டும் கே.எஸ்.அழகிரி சவால்

எதுக்கு டெபாசிட் போவதற்க்கா

நீதித்துறை கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

இவர் ஓய்வு பெற்ற பிறகு தான் இவருக்கு நீதித்துறை கட்டமைப்புப் பற்றி நினைவுக்கு வருகிறது.

குற்ற விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் வேட்பாளர்களுக்கு தேர்தல் துறை அறிவுறுத்தல்.

அது தேவையில்லை ஓட்டு கேட்க போகும் போது மக்களுக்கு தெரிந்து விடும்.

போதும் இலவச திட்டங்கள் காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி கட்டுரை

இப்படி நீங்க கட்டுரை எழுதப்போற விஷயம் பிரியங்காவுக்கு தெரியுமா ?

திராவிட மாடலில் ஆங்கிலச் சொல் ஏன் பயன்படுத்த வேண்டும் உயர்நீதிமன்றம் கேள்வி

நல்ல கேள்வி அவ்வளவுதான் சொல்ல முடியும்.

உசேன் போல்ட் கணக்கில் இருந்து 100 கோடி திருட்டு

ஓடிப்போய் சில நொடிகளில் திருடனை பிடித்திருப்பாரு இந்த ஓட்டப்பந்தய வீரர்.

திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் நடக்கும் வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு

அப்பாடா ரெண்டு நாள் கடன் வாங்கியவர்கள் வந்து கேட்டால் வங்கி ஸ்ட்ரைக் என்று சமாளிக்கலாம்.

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர்.

வசூல் எல்லாம் முடிஞ்சு முழு ஆண்டு தேர்வு நடக்கப்போகுது அமைச்சர் இப்பதான் எச்சரிக்கையை சொல்றாரு.

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலையை யாரும் ஒன்றும் செய்ய முடியாது சசிகலா.

அதான் ஏற்கனவே நீங்கதான் நிறைய செஞ்சுட்டீங்களே

வணிகவரி பத்திரத்துறை 1.17 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் உயர்த்தி சாதனை அமைச்சர் மூர்த்தி பெருமிதம்.

இது தமிழ்நாடு ஜிஎஸ்டி மாதிரி தெரியுது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தாமாக ஆதரிப்பவரே வெற்றி பெறுவார்- ஜி.கே.வாசன்.

ஓ உங்க கட்சிக்கு வாக்கு எல்லாம் கூட இருக்கா பரவாயில்லையே

மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்

ஆனா வாக்காளர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சுன்னு கேக்குறாங்க உணர்ச்சி வசப்படாமல் கொஞ்சம் ஜாக்கிரதையா பேசுங்க எம்பி.