1.உங்கள் பிறந்த நாள், திருமண நாளை எப்படி கொண்டாடுவீர்கள்?
மற்ற நாட்களைப் போலத்தான். அப்பா, அம்மா படங்களை எப்போதும் போல் வணங்கி விட்டு சாப்பிடுவேன். ஒரு பாயசம் எக்ஸ்ட்ராவாக மனைவி ரெடி பண்ணி இருப்பார். இரவில் குடும்பத்தை ஏதாவது ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வேன். ரொம்ப ஃபோன் கூட எனக்கு வராது!.
2. மழையில் நனைந்து இருக்கிறீர்களா?
பள்ளிப்பருவத்தில் எனக்கு ஆஸ்துமா நோய் இருந்தது.லேசாக தூறலில் நின்றாலே மூச்சிறைப்பு வந்துவிடும்.ஆகவே அப்போதிலிருந்தே நான் மழையில் மட்டும் நனையவே மாட்டேன். இப்போது எனக்கு ஆஸ்துமா நோய் இல்லை. இருப்பினும் பழக்க தோஷத்தால் நனைய பயமாய் இருக்கிறது!.
3. அடடா! இந்த தலைவரை நாம் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று நீங்கள் ஏங்கும் தலைவர் யார்?
அலெக்ஸாந்தர், செங்கிஸ்கான், காந்திஜி, விவேகானந்தர் இப்படி பெரிய லிஸ்ட்டே போடலாம்! செய்ய முடியாததற்கு வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை!.
4. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா?
ரொம்பவே!!
5. நீங்கள் பசிக்கு சாப்பிடுபவரா? அல்லது ருசிக்கு சாப்பிடுபவரா?
ருசி என்னும்போதே என்னுடைய பசி ரெடி ஆகிவிடும். எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டு பார்த்து விடுபவன் நான்!.
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com
Leave a comment
Upload