தாம்பரம் அடுத்த கன்னடபாளையத்தில் தனது தாயுடன் வசித்து வந்தார் 17 வயது நிரம்பிய கோகுல்ஸ்ரீ . தன் தந்தை இறந்தததால் சிறுவன் கோகுல்ஸ்ரீ அருகில் இருக்கும் பொம்மை விற்கும் கடையில் மாத ஊதியம் ரு2000 சேர்ந்து அந்த சம்பளத்தினை தனது தாயாரிடம் சேர்த்து வந்தான்.
கடந்த டிசம்பர் 29ந் தேதி கோலுல்ஸ்ரீ தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 9.30 மணியளவில் தாம்பரம் ரயில்வே ஸ்டேசனுக்கு வந்துள்ளார். தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை(RPF) போலீசார் கோகுல்ஸ்ரீ மீது தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பேட்டரியை திருடிய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்தனர்.
கோகுல்ஸ்ரீ தனது தாயாருக்கு காவலர் முலம் தகவல் சொல்லி தாயார் வந்து பார்த்த போது தான் எதுவும் செய்யவில்லை போலீஸ் பிடித்து பொய் வழக்கு போட்டுவிட்டது. எப்படியாவது பெயிலில் எடுங்கள் என்று தன் தாயாரிடம் அழுதவாறு சொன்னான்.
பொங்கல் விடுமுறைக்கு பிறகு தான் பெயில் கிடைக்கும் என்று கோகுல்ஸ்ரீ தாயார் சொன்னார். கிட்டதட்ட தாயும் மகனும் ரயில்வே காவல்நிலையத்தில் கிட்டதட்ட ஓன்றரை மணிநேரம் பேசினார்கள் . அப்போது கோகுல்ஸ்ரீ உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை என அவனது தாயார் சொன்ன தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 30,கோகுல்ஸ்ரீ 17 வயது நிரம்பியவர் என்பதால் அவரை வழக்கமான சிறையில் அடைக்கமுடியாது என்பதால் அவரை ஜூவலின் போர்ட்டில் ரயில்வே போலீஸ் முன்னிறுத்தி செங்கல்பட்டு சீர்த்திருத்த பள்ளியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வைக்க உத்திரவுப்படி அங்கே காவலில் வைக்கப்பட்டார்.
டிசம்பர் 31,மாலை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வார்டன் எனக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். உங்கள் மகன் பூரி மற்றும் மோர் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது வலிப்பு வந்தது, உடனே அவனை நாங்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து செங்கல்பட்டு மருத்துமனையில் சேர்ந்துள்ளோம் என்றார். அதே குரல் மீண்டும் எனக்கு செல்பேசி முலம் அழைத்து இப்போது உங்கள் மகனை எம்ர்ஜென்சி வார்ட்டில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்றார். அடுத்த பத்து நிமிடத்திற்குள் என் மகன் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்ற தகவலை சொன்னது என்கிறார் சிறுவன் கோகுல்ஸ்ரீ தாயார்.
சிறுவர் சீர்த்திருத்த பள்ளி உள்ளே இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து ஆஸ்பித்திரிக்கு அழைத்துசெல்லப்பட்ட மகனின் இறந்த செய்தி கேட்டு அழுது புரண்டு கோகுல்ஸ்ரீ தாயார் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு இரவில் வந்த போது இறந்த மகனை பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை .
கோகுல்ஸ்ரீ தாயார் மருத்துவமனையில் இருந்து நள்ளிரவு 1 மணி சிறுவர் சீர்த்திருந்த பள்ளிக்கு சென்று தன் மகனுக்கு என்ன ஆனாது என்று அழுது புலம்பியுள்ளார். அங்கிருந்த ஊழியர் நள்ளிரவு நேரம் என்பதால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் வீட்டில் கோகுல்ஸ்ரீ தாயார் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 1 ,மதியம் தான் தன் மகனை செங்கல்பட்டு மருத்துவமனையில் பிணவறையில் இருந்த தனது மகனை பார்க்க அனுமதித்தனர்.அப்போது தன் மகன் உடம்பு முழுக்க அடித்த காயங்கள் , தன் மகனின் நெற்றி, கன்னத்தில் பலமான தாக்கியதற்கான தழும்புகள் ..தன் மகனின் முக்கு,கீழ் உதடு ஆகிய இடங்களில் பிளேடால் வெட்டப்பட்ட ரத்த காயங்கள் இருந்தது. அத்துடன் தன் மகனின் மார்ப்பில் பலமாக அடித்த காயங்களும் காணப்பட்டதை கண்டு கோகுல்ஸ்ரீ தாயார் தன் மகனை சீர்த்திருத்த பள்ளியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடித்து கொன்றுவிட்டனர் என்று அழுது புரள ஆரம்பித்தார்.
செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்து கூர்நோக்கு இல்ல ஊழியர் தன்னை மீண்டும் கட்டாயப்படுத்தி தான் இரவு தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு தாயாராக இருந்த வெற்று பேப்பர்களில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தினர். நான் வெற்று தாள்களில் கையெழ்த்திட மறுத்து அங்கிருந்து ஆட்டோ பிடித்து மீண்டும் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து என் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது, என் மகனை கொன்றுவிட்டனர் என்று மனு கொடுத்தேன் என்று அவரது தாயார் சொன்னார்.
ஜனவரி3, என் மகனின் உடலை இறந்த மூன்று நாட்களுக்கு பிறகு செங்கல்பட்டு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்த போது என் மகனை கூர்நோக்க இல்லத்தில் இருப்பவர்கள் அடித்து துன்புறத்தியதால் இறந்த கொலை செய்த விவரம் வெளியாகியது. இதன் பிறகு செங்கல்பட்டு நீதித் துறைநடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை நடத்தினார்.
சிறுவன் கூர்நோக்கு மையத்தில் கோகுல்ஸ்ரீ இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இதில் பணியாற்றிய சூப்பரிடெண்டண்ட் மோகன், அசிசெஸ்டண்ட் சூப்பர்டெண்ட் வித்யாசாகர்,பார்பர் ஹானஸ்ட்ராஜ், வார்டன்கள் சரண்ராஜ் , சந்திரபாபு ஆகிய 6 பேரை செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் என்று செங்கல்பட்டு காவல்துறை எஸ்.பி .ஏ.பிரதீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்குள் கூர்நோக்கு இல்லத்தில் நீதிமன்ற உத்திரவுப்படி வந்த சிறுவனை இங்கிருக்கும் அதிகாரிகள் சிலர் அடித்து கொன்றுவிட்டதாக தகவல் காட்டு தீயாய் பரவியது. அத்துடன் கூர் நோக்கு இல்லத்தில் இறந்த கோகுல்ஸ்ரீ உடலை அவனது தாயாருக்கு காட்டாமல் இங்கிருக்கும் அதிகாரிகள் அலைகழித்தும், அதன் பிறகு இறந்த சிறுவனின் உடல் இரு தடவை ஆஸ்பித்திரியில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு சீர்த்திருத்த பள்ளியில் உள்ள இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல்ஸ்ரீ அடித்து கொலைசெய்யப்பட்ட விதம் காவலில் சித்ரவதை(custodial Torture) தான் என எங்கள் குழு உண்மை கண்டறிதுள்ளது.இது 2020 ஆண்டு நடந்த சாத்தன்குளம் காவலில் சித்ரவதை மரணம் போன்றது. இந்த சம்பவத்திற்கு காரணம் குற்றசெயல்களில் ஈடுபட்டதாக சொல்லப்படும் சிறுவர்களை மிரட்டி அடித்து திருத்திவிடலாம் என்று சில சீர்த்திருத்தபள்ளி ஊழியர்களின் மனநிலையால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என மாநில காவல் சித்ரவதை ஒருங்கிணைப்பாளர் அசீர் தெரிவித்தார்.
தவறு செய்து விட்டு வரும் சிறுவர்களை திருத்த சீர்த்திருத்த பள்ளி மற்றும் கூர்நோக்கு இல்லங்களில் உளவியல் கவுன்சில் தரும் நபர்கள் இல்லை என்பதால் இங்குள்ள பயிற்சி பெறாத ஊழியர்கள் இதுப்போன்ற மூர்க்க தனமான தாக்குதலை நடத்தி தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர் . அத்துடன் தமிழகம் முழவதும் உள்ள சீர்த்திருத்த பள்ளிகள் உரிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் இது போன்ற காவல் சித்ரவதை கொலைகள் நடைபெறுகிறது என்று காவல்துறை அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் சீர்த்திருத்தப்பள்ளி யில் குற்றம்நிருப்பிக்கப்பட்ட இளம் சிறுவர் குற்றவாளிகள் மற்றும் சிறு குற்றங்கள் செய்து போலீஸார் அனுப்பி வைக்கும் கூர்நோக்கு இல்லங்கள் என இரண்டும் ஓன்றாக இருப்பதால் அடிக்கடி இங்கிருந்து சிறுவர்கள் தப்பி செல்வது வாடிக்கையாகிவிட்டது.இதனால் இந்த சிறிய வழக்குகளில் ஈடுபட்டு வரும் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லங்கள் தனியாக அமைக்க வேண்டும் என்று காவல்துறையினர் குரலாக உள்ளது.
இளம்சிறார்கள் சீர்த்திருத்த பள்ளியில் தமிழக அரசு அவர்களுக்கு கைத்தொழில் பேக்கரி பொருட்கள் செய்வது, ஏசி மெக்கானிக், ப்ளாம்பிங் , டெயலரிங் வேலை , யோகா எல்லாம் கற்று அவர்கள் திருந்த செய்ய திட்டங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் அங்கிருந்த காவலர்களால் அடித்துச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சீர்திருத்தப் பள்ளியிலும் சிறுவர்கள் அடித்துக் கொல்லப்படுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.சிறுவனின் தாயாருக்கு இறந்த மகனின் உடலை பார்க்கக்கூட அனுமதி மறுத்து, வீட்டில் அடைத்து வைத்ததோடு, வெற்றுத்தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டிய கொடுமைகளும் அரங்கேறியுள்ள நிகழ்வுகள் நாம் சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.உயிரிழந்த சிறுவன் கோகுல்ஸ்ரீயின் உடலில் பல இடங்களில் அடித்துத் துன்புறுத்தப்பட்ட கடுமையான காயங்கள் இருந்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் இருமுறை நடைபெற்ற உடற்கூராய்வின் அறிக்கைகளும், சிறுவன் கோகுல்ஸ்ரீ காவலர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 20 மாதங்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் சிறை மற்றும் காவல் நிலையங்களில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநரே விசாரணையின்போது கைதிகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பிய பிறகும் காவல்நிலைய மரணங்கள் இன்றுவரை குறைந்தபாடில்லை. தற்போது அதன் உச்சமாகச் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனும் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது திமுக அரசின் அதிகார கொடுங்கரங்களின் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும், அதனை தடுக்கக் திறனற்ற நிர்வாகத் தோல்வியையுமே வெளிக்காட்டுகிறது. என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவர் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார்.
சிறுவனின் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிறுவனின் தாயாரை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மிரட்டியதுடன் பிரேத பரிசோதனையும் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தி இவ்வழக்கை மூடி மறைக்க, திட்டமிட்டு செயல்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சிறுவன் கோகுல்ஸ்ரீயின் தாயார் கணவனை இழந்தவர். நிரந்தர வருமானம் இல்லாமல், 5 குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பெரும் சிரமத்தில் வாழ்ந்து வருபவர். இறந்து போன கோகுல்ஸ்ரீயின் வருமானத்தை நம்பியிருந்த குடும்பமாகும். எனவே, தமிழக முதல்வர் இவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், வசிப்பதற்கு அரசு வீடும், அரசு வேலையும், இவரது குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பதற்கான வசதிகளையும் செய்து தரவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு நேரில் சென்று இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்.
தமிழுகத்திலுள்ள அனைத்து சிறார் கண்காணிப்பு இல்லங்களையும் ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசை மனித உரிமைத் தொண்டு நிறுவனமான பீப்பிள்ஸ் வாட்ச் கேட்டுக் கொண்டுள்ளது.
செங்கல்பட்டு சீர்த்திருத்த பள்ளியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் பணிபுர்ந்தவர்கள் அனைவரும் கூண்டோடு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு புதிய அலுவர்கள் நியமிக்கும் பணி தமிழக அரசு தொடங்கியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை திருத்தும் பணியில் இருந்த கூர்நோக்கு இல்ல ஊழியர்கள்,அதிகாரிகளே கொலை குற்றத்தில் ஈடுபட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதை….!
Leave a comment
Upload