ஜோதிகாக்கு பதில் கங்கனா ரனாவத்
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வடிவேலு ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள் சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த ஜோதிகா வேடத்தில் இரண்டாம் பாகத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார் இந்திரா காந்தி பற்றிய பயோபிக் படமான எமர்ஜென்சி படத்தை தயாரித்து இயக்கி நடித்து வருகிறார் கங்கனா ரனாவத்
நடிகை சாய் பல்லவி சினிமாக்கு டாட்டா? !
நடிகை சாய் பல்லவி டாக்டருக்கு படித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு படங்களில் ஹீரோயினி முக்கியத்துவம் உள்ள படங்களை தேடி தேடி நடித்து வருகிறார். சாய் பல்லவி சமீபத்தில் அவர் நடித்து வெளியான கார்கி அவருக்கு இன்னொரு வெற்றி படம். இப்போது அவர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து மருத்துவமனை காட்டுகிறார் டாக்டர் சேவை செய்ய இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வரத் தொடங்கி இருக்கிறது. இதே வதந்தி ஏற்கனவே வந்தபோது அதெல்லாம் இல்லை நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்றார் சாய் பல்லவி. இப்போது என்ன சொல்ல போகிறாய் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
காதல் எல்லாம் இல்லை
நடிகர் பிரபாஸுடன் இந்தி நடிகை கீர்த்தி சனோன் ஆதி புரூஷ் படத்தில் இணைந்து நடித்தார்கள் இவர்கள் இருவரும் காதலிப்பதாக திடீரென கிசுகிசு வைரலாகி பரவியது. ரசிகர்களும் பாவம் உண்மை என்று நம்பி வாழ்த்து எல்லாம் சொன்னார்கள் ஆனால் நடிகை கீர்த்தி சனோன் அதெல்லாம்பொய் நம்பாதீர்கள் என்று சொல்கிறார்.
ஜெய் பீம் - 2
ஜெய் பீம் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு அதன் தயாரிப்பாளர் ராஜசேகர் கண்டிப்பாக என்கிறார்.
கீர்த்தி சுரேஷ்
கே ஜி எஃப் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் விரைவில் தமிழில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் இப்போதைக்கு இது உறுதி .மற்றவை பிறகு...!
Leave a comment
Upload