அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு டிஜிட்டல் பொருளாதாரத்தினால் மத்திய அமைச்சர் தகவல்
அது என்ன இரண்டு ஆண்டு ஒரு கோடி வேலை வாய்ப்பு கணக்கு அதன் பிறகு வேலைவாய்ப்பு திண்டாட்டம் இல்லாமல் போய்விடுமா அமைச்சரே ஓ அடுத்த வருஷம் தேர்தல் வருது இல்ல அப்ப உங்க தகவல் கரெக்ட்தான்
திமுக ஆட்சியில் மக்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது அண்ணாமலை
குஜராத்தில் 576 கோடி போதைப் பொருட்கள் கைப்பற்றல்
பழனிச்சாமி உடன் இணைய வாய்ப்பில்லை டிடிவி தினகரன்
அதேதான் அவரும் சொல்றாரு
இப்போதைக்கு எந்த கூட்டணியிலும் இல்லை பாமக அன்புமணி ராமதாஸ்
தேர்தல் வரும்போது கை செலவுக்கு பணம் ராஜ்யசபா சீட் வன்னியர் இட ஒதுக்கீடு இப்படி நாங்க பேரம் பேசுவோம்
மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் மதிமுக அவைத்தலைவர்
ஏற்கனவே சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் எல்லாம் ஆளுநர் மாளிகையில் தூங்குது துணைக்கு அனுப்ப வேண்டியதுதான்
ஒரு கோடி மக்கள் பயன்பெறும் வகையில் முப்பதாயிரம் கோடியில் புதிய குடிநீர் திட்டம் அமைச்சர் நேரு
ஒரு கோடி பேர் முப்பதாயிரம் கோடி கணக்கு எங்கோ இடிக்குது தலைவரே
தேர்தலில் உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை நிறுத்தி வைப்பேன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
ஆமா எப்ப பார்த்தாலும் டெபாசிட் தொகையை நம்ப தான் பறி கொடுக்கணுமா இந்த முறை சவுக்குக்கு சான்ஸ் கொடுப்போம்
வட கிழக்கு மாநிலத்தில் இரண்டாவது மொழியாக தமிழை இணைக்க வலியுறுத்தி வருகிறேன் தமிழக ஆளுநர்
ஓ நாகா பிரச்னை தீராமல் போனதுக்கு இதுதான் காரணமா
தமிழகம் அமைதியாக இருக்கிறது என்று சிலருக்கு வயிறு எரிகிறது முதல்வர் ஸ்டாலின்
இதுக்கு நம்ம கிட்ட ஏதாவது மெடிசன் இருக்கா தலைவரே
ராவணன் மாதிரி பிரதமர் மோடிக்கு நூறு தலையா இருக்கு மல்லிகார்ஜுன கார்கே கிண்டல்
தலைக்கணக்கே சரியா தெரியல தேர்தல் கணக்கு இவங்களுக்கு எப்படி தெரிய போகுது
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு மக்களை வஞ்சிக்கிறது திமுக வழக்கம்தான் அண்ணாமலை
ஆதார் வங்கி கணக்குடன் இணைப்பு விவசாய மானியம் பெற ஆதார் இணைப்பு அவசியம் இதெல்லாம் மக்கள் மகிழ்ச்சிக்காக அப்படித்தானே ஐபிஎஸ் சார்.
Leave a comment
Upload