தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் டியர் மதன்

2022921150913448.jpg

1.உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் அகதா கிறிஸ்டிக்கு இணையான துப்பறியும் எழுத்தாளர் தமிழ் அளவில் யார்?

2022921150745271.jpg

யாரும் இல்லை. அகதாவுக்கு இணையாக உலகிலேயே யாரும் கிடையாது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.அகதா ஒவ்வொரு கிறிஸ்துமஸ் வரும்போதும் ஒரு புத்தகம் எழுதி வெளியிடுவார். அதற்காக உலகமே காத்திருக்கும்.அகதா எழுதும் கதையின் கடைசியில் வரும் 'டிவிஸ்டை 'யாராலும் முன்கூட்டியே கற்பனை செய்ய முடியாது.நீங்கள் எவ்வளவு கெட்டிக்காரராக இருந்தாலும் !அதுதான் அவரது வெற்றி!

2.கடவுள் ஏன் கல்லானார்?

2022921151103503.jpg

கடவுளைக் கல்லாக்கியதே மனிதன் தான். நம்மிடம் சிக்கிக் கொண்டு தப்ப முடியாமல் ஒரே இடத்திலேயே தவிக்கிறார் கடவுள், பாவம்!

3.இப்போது நீங்கள் எழுத நினைக்கும் புத்தகம் எது? விகடகவியில் தொடராக எழுதுவீர்களா?

2022921151438466.jpg

நான் பெரிய எழுத்தாளன் ஒன்றும் கிடையாது. நான் ஒரு கார்ட்டூனிஸ்ட். சில புத்தகங்கள் எழுதினேன், அவ்வளவுதான். இப்போதும் நிறைய படிக்கிறேன். புத்தகம் எழுதும் ஐடியா ஒன்றும் கிடையாது! ஆனால்.... யாருக்கு தெரியும்?!

4.இந்திய சமூகத்தை பிடித்த இரு பெரும் சாபக்கேடுகள் என்னவென்று கேட்டால் எவற்றை சொல்வீர்கள்?

ஜாதி வெறி ,லஞ்ச ஊழல்!!

5.பேருந்தில் இலவசமாக பயணிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து , டிக்கெட்டுக்கு காசு கொடுத்த தமிழக பாட்டியை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

2022921151728483.jpeg

இலவசங்களுக்கு எதிரான ஒரு குறியீடு(Symbol) தான் அந்தப் பாட்டி. ஏன் அவரை ஒரு பத்திரிகை கூட பேட்டி கண்டு வெளியிடவில்லை? அல்லது எனக்குத் தெரியாத பத்திரிகை எதிலாவது அவரை "கவர்" செய்து இருக்கிறார்களா?

6.ஒரு தனியார் டிவி சேனலில் நாளைய இயக்குனரைத் தேர்வு செய்த அனுபவம் உங்களுக்கு உள்ளது. நீங்கள் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருந்தால், எந்தெந்த கதாபாத்திரத்திற்கு, எந்தெந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்திருப்பீர்கள்?

2022921152117780.jpg

மணிரத்தினம் நன்றாகவே கதாபாத்திரங்களை செலக்ட் செய்து இருக்கிறார். அதை ரசியுங்கள். நாளைய இயக்குனர் தேர்வு வேறு ஒரு டைப். அதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. நந்தினி ரோல் கூட உடனே சொல்லிவிடலாம், அருள்மொழித் தேவன் செலக்சனுக்காக மட்டும் சற்று அதிகமாக சிரமப்பட்டு இருப்பாரோ? ஒரு தமாஷ் என்னவென்றால், கதை நடக்கும்போது முக்கால்வாசி கதாபாத்திரங்களுக்கு வயது 20 ல் இருந்து 25 வரை தான் என்று எங்கோ படித்தேன்?!

7.அரசு ஊழியர்கள் இனி "ஹலோ"வுக்கு பதிலாக வந்தேமாதரம் "என்று சொல்ல வேண்டும் என மகாராஷ்டிரா அரசு தீர்மானம் போட்டு இருக்கிறது. உங்களை கேட்டால் "ஹலோவு"க்கு வேறு என்ன மாற்று வார்த்தை சிபாரிசு செய்வீர்கள்?

தமிழ்நாட்டில் என்றால் 'வணக்கம்' அல்லது 'தொலைபேசி வணக்கம்' என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற அர்த்தமில்லாத 'மாற்றங்களை'க் கொண்டு வருவதை விட எத்தனையோ உருப்படியான காரியங்கள் இருக்கின்றன!

8.நம்மை மீறிய சக்தி என்ற ஒன்றை கடவுளாக நம்பி வணங்குகிறோம். ஆனால் அது நிஜத்தில் கடவுள் இல்லை, நம்மை காப்பது சக்தி வாய்ந்த ஏலியன்கள் என்று இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

2022921152709858.jpg

ஏலியன்கள், அவர்களை மீறிய சக்தி ஒன்றை வணங்காமலா இருப்பார்கள்? நானும் அதை பின்பற்றி இருப்பேன். 'நம்மை மீறிய சக்தி' இல்லாத வாழ்க்கையே கிடையாது!

தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்

வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in