1.நீங்கள் ரசித்து படித்த சமீபத்திய புத்தகம் எது ? ஒன்லைன் ஸ்டோரி சொல்லமுடியுமா?
என்னுடைய தங்கை ரூபா பத்மநாபன் என் பிறந்தநாள் அன்று ஒரு செட் அகதா கிறிஸ்டியின் புத்தகங்களை தந்தார். எனக்கு அகதா பிடிக்கும். நான் பொதுவாகவே ஒரே சமயத்தில் 4 புத்தகங்களை படிக்கும் வழக்கம் உடையவன். "வாட் இஸ் யுவர் ரேஞ்சர்ஸ் ஐடியா" என்ற சுவையான புத்தகத்தையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
2. வெப் சீரீஸ் பார்ப்பதுண்டா ? பிடித்த வெப் சீரீஸ் என்னது ?
நெட்ஃப்ளிக்ஸில் 'மெண்டலிஸ்ட்' என்ற சீரீஸ் பார்த்தேன். நன்றாக இருந்தது அது முடிந்து விட்டது. இப்போது வேறு ஒன்று தேடிக் கொண்டிருக்கிறேன்!.
3.உலகம் 24 மணி நேரத்தில் அழிந்து விடும் என்று வைத்து கொள்வோம் .. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
நண்பர் மேப்ஸ், சில சமயம் வாங்கி வரும் மொறுமொறு வென்ற பக்கோடாவை சாப்பிட்டு கொண்டு இருப்பேன்.
4. வெற்றி பெற்ற விஷயங்களை விவாதிக்க கூடாது என்ற பொது விதி இருந்த போதிலும்.......... விக்ரம் உண்மையில் 500 கோடி வசூலுக்கு வொர்த்தான படமா என்ன ?
கொஞ்ச காலமாக ஜனரஞ்சகமான படங்கள் வரவில்லை. விக்ரம் வந்து வெற்றி பெற்றுவிட்டது. விடுங்கள் வெற்றி பெற்ற விஷயங்களை விவாதிக்க கூடாது என்பது உண்மைதான்!.
5. மனித இனம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் கடல் வாழ் பிராணிகள் உருத்தெரியாமல் போகின்றன என்று குற்ற உணர்ச்சி ஏறப்பட்டதுண்டா ?
ஒரு கடல்வாழ் பிராணியின் வயிற்றிலிருந்து பிதுக்கி பிளாஸ்டிக் பாட்டில்களை வெளியே எடுக்கும் டாக்குமென்டரி ஒன்றைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது மனிதர்கள் பல விஷயங்களில் கெட்டவர்கள்!.
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன் .
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in
Leave a comment
Upload