தொடர்கள்
அரசியல்
திமுகவின் திடீர் ஆங்கில மோகம் - ராம்

20220421095510742.png

பாரதியார்.

ஆங்கிலக் கல்வி பற்றி அவருக்கு ஒரு கருத்து இருந்தது.

ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி உட்பட பல மொழிகளில் தேர்ச்சிபெற்றிருந்த பாரதி இந்தியர்கள் பல மொழிகள் கற்பதை ஊக்குவித்தார். அதே நேரம் பிற மொழிகளைக் கற்பதற்கு முன் தாய்மொழியில் தேர்ச்சிபெற்றிருப்பதை அடிப்படைத் தகுதியாக வரையறுத்தார்.

இது எதற்கு இப்போது சம்பந்தமில்லாம் என்று கேட்பவர்களுக்கு, சென்ற வார நிகழ்ச்சியை நினைவூட்ட விரும்புகிறோம்.

பாஜக வின் அண்ணாமலை ஒரு கூட்டத்தில் திமுக அமைச்சர்கள் 90 சதவிகிதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது ஏன் தனியாக விமானம் ஏறக் கூடத் தெரியாது என்று சொல்லி விட, திடீரென பொங்கியது ஆங்கில மோகம் தி.மு.க பிரமுகர்களுக்கு.

அதையொட்டி விகடகவியில் வெளிட்ட ஒரு நகைச்சுவை மீம்ஸ் இங்கே.....

ஆங்கிலம் ஒரு வேளை உண்மையிலேயே தெரியாது என்றால் அதில் என்ன அவமானம் இருக்கிறது ?? ஒரு ரஷ்ய தலைவரோ, அல்லது சீனத் தலைவரோ, கொரியத் தலைவரோ, ஏன் நம் பிரதமர் மோடி கூட முக்கியமான தருணங்களில் தாய் மொழியில் தான் பேசுகின்றனர். அவர்கள் பேசுவதை கேட்க வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.

எந்த சர்வதேச தலைவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை என்ற வெட்கமோ அவமானமோ இல்லையே ??

பின் ஏன் அண்ணாமலை சீண்டலுக்கு அமெரிக்காவில் வசித்து வந்து, அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்ட பி.டி.ஆர்.ராஜனுக்கு கூட மூக்கிற்கு மேல் கோபம் வந்து ஆங்கில காணொளியை விட வேண்டும்.

இதில் பாவம் நம்ம முதல்வரையும் எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டி படிக்க வைத்து பத்து பதினைந்து ஷாட் எடுத்து அதை வெட்டி ஒட்டி, ஒரே சீராக பேசுவது போல் காட்ட முயற்சித்து... எதற்கு இந்த வீண் ஜம்பம்.

இதில் நன்றாக ஓரளவு ஆங்கிலம் பேசத் தெரிந்த தயாநிதி மாறன் வீடியோவில் வரவில்லை. ஏனெனில் அவர் இந்த அளவுக்கெல்லாம் கீழறங்கி ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கருதியிருக்கலாம்.

ஆக தமிழர்களின் பிரச்சினையே இது தான்.

இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்பார்கள். ஆனால் அடிப்படையில் ஆங்கில மோகத்தில் மூழ்கிக் கிடப்பார்கள்.

என்னுடைய நண்பர்கள் சிலர் குடும்பங்களில் கூட தம் மக்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் தமிழ் தெரியாது என்பதை கொஞ்சம் கூட சுரணை இல்லாமல், கூச்ச நாச்சமில்லாமல் பெருமை பேசுவதை இன்றும் கேட்கிறேன்.

தலைவர்களே இப்படி என்றால் சாமானிய மக்களின் மனநிலையும் அப்படித்தானே இருக்கும்.

சரி, அரை குறையாக ஆங்கிலம், ஹிந்தி வெறுப்பு சரி. தமிழாவது மணிப்பிரவாளமாக துண்டு சீட்டோ அல்லது எழுதி வைத்துக் கொள்ளாமலோ இவர்களால் பேச முடியுமா என்றால்.....

வேண்டாம் விடுங்கள்.