தொடர்கள்
அரசியல்
நியூஸ் நியூஸ் நியூஸ் - பொடியன்

ராகுல் காந்தியை கட்டிப்பிடித்து .....

20220420170852963.jpg

பேரறிவாளன் விடுதலையானதும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க வில்லை அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறோம். என்று கூறியிருந்தார் இதுதவிர வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டமும் நடத்தினார் கே.எஸ்.அழகிரி. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் ஒரு கேள்வி கேட்கிறார்.அந்தக் கேள்வி சரியான கேள்வி போல் தான் தெரிகிறது. தண்டிக்கப்பட்ட குற்றவாளியை ஒரு முதலமைச்சர் கட்டியணைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.தன்னுடைய தம்பி என்று ராகுல்காந்தியை கட்டிப்பிடித்த அவரது தந்தை ராஜீவ்காந்தியை மனித வெடிகுண்டு மூலம் தகர்த்த பேரறிவாளனை கட்டிப்பிடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்

பயமுறுத்தும் ரிசர்வ் வங்கி

20220420171116938.jpg

பணவீக்கத்தால் மே மாதம் உணவு பொருட்கள் விலை உயரும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது.ஏற்கனவே கொரானா நோய் தொற்றால் நமக்கு ஏற்பட்ட பண வீக்கத்தை சரி செய்ய இந்தியாவுக்கு கிட்டதட்ட பத்து பனிரெண்டு வருடங்கள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் பயமுறுத்தி இருக்கிறார். இப்போது விலைவாசி உயரும் என்று சொல்கிறார். கூடவே இது நமக்கு மட்டுமல்ல உலகம் பூராவும் இதுதான் நடக்கிறது என்று உலகத்தை சாட்சிக்கு கூப்பிடுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்ம ஊர்க்காரர் அவருக்கு பேச கற்று தர வேண்டுமா

சலுகை இல்லாததால் 1500 கோடி வருமானம்

2022042017123718.jpg

கொரானா அச்சுறுத்தல் இந்திய ரயில்வே 2020 மார்ச்சில் மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டண சலுகையை ரத்து செய்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் இப்போது எல்லா ரயில்களும் ஸ்பெஷல் ரயில் இதில் சலுகைகள் எதிர்பார்க்க முடியாது என்றார்கள்.இப்போது நிலைமை சரியான பிறகு கூட சாதா ரயில் விரைவு ரயில் சூப்பர் பாஸ்ட் ரயில் என்று சகஜ நிலைக்கு திரும்பி ஏசி ரயில் பெட்டிகளில் தலையணை பெட்ஷீட் எல்லாம் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மட்டும் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று ரயில்வே நிர்வாகமும் அமைச்சரும் மாறிமாறி சொல்கிறார்கள். இந்த கட்டண சலுகை நிறுத்தப்பட்டதால் ரயில்வேக்கு 1500 கோடி வருமானம் என்று பெருமை பேசுகிறது ரயில்வே நிர்வாகம். மாதத்தில் ஒரு நாள் விமான நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில் நிலையம் வந்து துணை ஜனாதிபதி விசேஷ ரயிலில் ஆந்திரா செல்கிறார்.அவரும் பொதுமக்களுக்கான ரயிலில் பயணம் சென்றால் சில பல கோடி மிச்சமாகும். இது எல்லாம் கருத்தாக சொன்னால் வழக்கு கைது என்ற பிரச்சினை வரும் என்ற பயமும் என்ன செய்ய

பேரறிவாளன் தியாகியா

20220420172408547.jpg

பேரறிவாளன் விடுதலையை எல்லோரும் கொண்டாடுகிறார்கள் அவரும் எல்லா அரசியல் தலைவர்களைப் போய் பார்த்து நன்றி சொல்கிறார் .ஆனால் அவர் என்ன செய்தார் என்பது நிறைய பேருக்கு மறந்து போயிருக்கும்.அவர்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல். மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் கூட சம்மந்தமே இல்லாத அப்பாவிகள் பலரும் கொல்லப்பட்டார்கள்.அந்தப் பட்டியல் இதோ

20220420172905521.jpg

பேரறிவாளன் பெரிய கொண்டாடப்படவேண்டிய தியாகி எல்லாம் இல்லை