தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20220420164343668.jpeg

திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கூடுதல் நிதி அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்.

ஆமா அவர் கேட்டு தரல நீங்க முயற்சி செய்து பாருங்கள்

சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் இது திராவிட மாடல் அரசு முதல்வர் ஸ்டாலின்

அப்போ இது கழக ஆட்சி இல்லையா கோபால்

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு மோடி தீர்வு காணவேண்டும் பழநெடுமாறன்

இப்ப இலங்கையோ பிரச்சனை ஆயிடுச்சு தலைவரே முதலா அதை பாருங்க

பழனி சென்றபோது எச் ராஜா கைது

அவருக்கும் பொழுது போகணும் சும்மா இருக்க முடியாது

கலவரத்தை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசுவாரனால் அவரை எப்படி அடக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு தெரியும்- ஆர் எஸ் பாரதி

இதுதான் அந்த திராவிட மாடல் ஆட்சியா

2026ல் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா அண்ணாமலை நம்பிக்கை

அப்போ 2026 பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி என்று அன்புமணி சொல்வது சும்மா தானா

நாள் முழு நேர அரசியல்வாதி இல்லை முழுநேர நடிகரும் இல்லை- நடிகர் கமல்ஹாசன்

உங்களுக்கு இப்பதான் தெரியும் ஆனா மக்களுக்கு எப்பவோ தெரியும்

முதல்வரைப் புகழும் பன்னீர் செல்வத்தின் மகன்

ரெய்டு வரக்கூடாது இல்ல அதான்

பகுத்தறிவு பேசும் திமுக ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை பௌர்ணமியில் வெளியிட்டது ஏன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதை விடுங்க உங்க கட்சில அந்த 2 பதவிக்கு ஏகப்பட்ட கோஷ்டி கேக்குதா சொல்றாங்க ,அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க

சில விஷயங்களை நாம் மறந்துவிட வேண்டும்- சசிகலா

அதைத்தான் உங்களுக்கு ரொம்ப ஆண்டுகளாக எடப்பாடி சொல்லி வருகிறார்

மக்கள்தொடர்பை இழந்து விட்டோம் -ராகுல்காந்தி

உங்களைப் பற்றி பேசும் போது குலாம் நபி ஆசாத் கோஷ்டியும் அதைத்தான் சொல்கிறது.

முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது தமிழகம் -ஆளுநர் ரவி.

சும்மா சொல்றார் நம்பாதீங்க என்கிறார் முதல்வர்.