தொடர்கள்
தொடர்கள்
நியூஸ் நியூஸ் நியூஸ் - பொடியன்

பாவம் தேங்காய் விவசாயிகள்

20220414082037896.jpeg

பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் தான் பிரதான தொழில் விவசாயிகள் மட்டுமில்லை இதனை நம்பி லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் உள்ளனர். சென்ற ஆண்டு நல்ல மழை என்பதால் இந்த ஆண்டு தென்னை விளைச்சல் கொஞ்சம் அதிகம் தான்.ஆனால்இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரவில்லை.பொதுவாக பொள்ளாச்சி தேங்காய் கொச்சின் துறைமுகம் மூலம் துபாய்க்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.

இது தவிர லாரிகளில் மகாராஷ்டிரம் டெல்லி மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் இங்கிருந்து தான் தேங்காய் போகும். இப்போது கன்டைனர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி குறைந்து விட்டது. முதலில் கன்டெய்னர் வாடகை 72,000 மாக இருந்தது. இப்போது அது 3 லட்சமாக உயர்ந்து விட்டது. இதே போல் வடமாநிலங்களுக்கு லாரி உரிமையாளர்கள் மாங்காய் எடுத்து செல்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். காரணம் இப்போது அங்கே மாங்காய் மற்றும் மாம்பழத்துக்கு ஏக கிராக்கி. வடமாநிலங்களுக்கு தேங்காய் செல்வது குறைந்து விட்டது.

3 கோடி தேங்காய் பொள்ளாச்சியில் தற்போது தேக்கம். கொப்பரைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய மத்திய மாநில அரசை கேட்டுக்கேட்டு அலுத்து விட்டார்கள். இதுவரை எந்த பதிலும் இல்லை.

ஆபத்தான அங்கன்வாடி மையம்

20220414082107398.jpeg

சட்டசபையில் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் அந்த திட்டத்திற்கு அவ்வளவு கோடி இந்தத் திட்டத்துக்கு இத்தனை ஆயிரம் கோடி என்று அறிவிப்புகளை தினந்தோறும் வெளியிடுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் வெற்று அறிவிப்புகள் தானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல் கோட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் இயங்குகிறது.

.அங்கன்வாடி என்பது சிறு குழந்தைகள் காப்பகம்.அங்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் அங்கன்வாடி யை பார்த்து இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் நமது குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தபடியே தான் வேறு வழியின்றி விட்டு விட்டு செல்கிறார்கள்.அதிகாரிகளும் வந்து பார்க்கிறார்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சென்ற ஆட்சி பற்றி கரப்ஷன் கலெக்சன் என்று வர்ணித்தார் முதல்வர் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று இப்போதும் அதே கதை தான் போலும்.

தக்காளிக்கு வந்த கிராக்கி

2022041408213088.jpeg

போன மாதம் தக்காளி கிலோ 6 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் என்று மலிவு விலை விற்பனைப் பொருளாக இருந்தது. இப்போது கோயம்பேடில் ஒரு கிலோ தக்காளி விலை 70 ரூபாய். இதற்கு காரணம் வரத்து குறைந்து விட்டது. அதனால் விலை ஏற்றம் என்கிறார்கள்.ஆந்திரா கர்நாடகம் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டன்சத்திரம் தேனி திண்டுக்கல் ஓசூர் போன்ற இடங்களிலிருந்து தக்காளி கோயம்பேடு வரும். அசானி புயல் ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து நின்று போனது தேனி ஒட்டச்சத்திரம் ஓசூர் பகுதிகளில் கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதித்தது வரத்து குறைந்தால்விலை ஏறுவது இயற்கை தானே என்கிறார்கள் புள்ளி விபர புலிகளான கோயம்பேடு வியாபாரிகள்.

வந்தார் சபரீசன்

20220414082216670.jpeg

திமுக ஆட்சி ஓராண்டு முடிந்த மே ஏழாம் தேதி முதல்வரின் மருமகன் சபரீசன் சட்டமன்றத்தில் தனது மாமனார் ஓராண்டு சாதனை பற்றி பேசயிருப்பது கேட்பதற்காக சட்டசபைக்கு வந்தார்.அவரை வாசலில் வரவேற்று சட்டமன்ற பார்வையாளர் மாடத்திற்க்கு அழைத்துச் சென்றார் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினுக்கும் சபரிசனுக்கும் லடாய் என்றெல்லாம் கிசுகிசு வந்து கொண்டிருந்த நேரத்தில் இருவரும் சிரித்து பேசியபடியே வந்தது அதெல்லாம் கப்சா என்று சொல்வது போல் இருந்தது.