தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

செட்டில் தூங்கி விடுகிறேன்

20220414085121687.jpeg

இந்த நிமிடம் வரை படத்தின் தலைப்பு தெரியாத விஜய் நடிக்கும் 66 வது படம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. வம்சி இந்த படத்தின் இயக்குனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி ராஷ்மிகா மந்தானா.சென்னையில் பூஜை பாடல் காட்சிஅதன் பிறகு ஹைதராபாத்தில் படப்பிடிப்பு.இந்த அனுபவத்தை ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .படப்பிடிப்பு மிகவும் நன்றாக நடந்து வருகிறது. நான் எங்கு படுத்தாலும் தூங்கிவிடுவேன். இதேபோல் படபிடிப்பில் ஒருநாள் நாற்காலியிலேயே தூங்கிவிட்டேன். இதுபற்றி என் நண்பர்கள் குறிப்பிட்டு கேலி ஆனால் இது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை தூங்குவது என்பது ஒரு வரம் அது எனக்கு கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் உண்மைதானே.

நெஞ்சுக்கு நீதி அரசியல் படமாம்

20220414085411840.jpeg

மே 20ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாக இருக்கிறது.இது ஒரு அரசியல் படம் வசனங்களில் ஏகத்துக்கு அரசியல் நெடி என்பது முன்னோட்ட திலேயே தெரிகிறது.இந்தியில் வெளியான ஆர்டிகள் 15 என்பதுதான் நெஞ்சுக்கு நீதி கதை. உதயநிதி ஸ்டாலின் தாத்தா எழுதிய வரலாற்றுத் தொடரின் தலைப்பு நெஞ்சுக்கு நீதி.ஆர்டிகல் 15 என்பது சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற அந்த சட்டப்பிரிவை குறிக்கும்.

இது பற்றி குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின் எல்லோருக்கும் பிடிக்கும் சமூகநீதி பற்றிய படம் என்கிறார் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ஜோடி

20220414085458806.jpeg

சாய்பல்லவியின் வளர்ச்சி குறுகிய காலத்தில் ஆனால் நிதானமான வளர்ச்சி.மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் சாய்பல்லவி.முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து மலையாளம் கன்னடம் தமிழ் தெலுங்கு என்று இப்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் என்று ஆகிவிட்டார் சாய் பல்லவி.லேட்டஸ்டாக சிவகார்த்திகேயன் 21 வது படத்தில் சாய்பல்லவி தான் ஜோடி.இந்தப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

மத்திய அரசை வம்புக்கு இழுக்கிறார் கமல்

20220414085543584.jpeg

கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தப்படத்தின் முன்னோட்டம் பாடல் வெளியீடு மே 15ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.இந்தப்படத்தில் கமலஹாசன் எழுதி பாடிய பாடல் சர்ச்சை ஆகிக்கொண்டிருக்கிறது. ஒன்றியத்தின் தப்பாலேஒன்னும் இல்ல இப்பாலே என்ற வரிகள் மத்திய அரசை குறை கூறுவதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்துக்கு போவோம் என்று புகார் தந்தவர் புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆணையர் என்ன செய்வார் என்று தெரியவில்லை இது இப்போதைய நிலவரம்

பிரபுதேவாவுக்காக பாடினார் தனுஷ்

20220414085609976.jpeg

பிரபுதேவாவுக்காக பாடல் பாடி இருக்கிறார் நடிகர் தனுஷ் .குலேபகாவலி ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இப்போது பிரபுதேவா ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படமான ஜல்சாவை இயக்கி வருகிறார்.இந்தப்படத்தில் இவர்களுடன் யோகி பாபு சேத்தன் தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கிறார்கள்.இசை அஸ்வின் விநாயகம்.ஒரு நடன காட்சி பாடலுக்காக பிரபுதேவாவுக்காகநடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்.