தொடர்கள்
பொது
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... நல்லவரா?... கெட்டவரா?! - ஆர்.ராஜேஷ் கன்னா

20220410173529705.jpg

ராக்கெட் வேகத்தில் செல்லும் பெட்ரோல் -டீசல் விலையை சமாளிக்க முடியாமல் வாகன ஒட்டிகள் திண்டாடி வருகின்றனர். இதற்காக மின்சாரத்தில் சார்ஜ் செய்யும் பேட்டரி பொருத்தப்பட்ட மின்-ஸ்கூட்டர்களை இந்தியா முழவதும் பயன்படுத்த மத்திய அரசு திட்டம் வகுத்து அதன்படி மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை தொடங்கப்பட்டது.

2040 ஆண்டுக்குள் சீனா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளில் பசுமை சூழலை மேம்படுத்த பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தில் சார்ஜ் செய்யும் பேட்டரி பொருத்தப்பட்ட பயணிகள் வாகனம் மின்சார ஸ்கூட்டர் 77 சதவீதம் இருக்கும் என்றும் அதே காலகட்டத்தில் இந்தியாவில் தற்போது 2 சதவீதமாக இருக்கும் மின்சார ஸ்கூட்டர் பயன்பாடு வரும் 2030 ஆண்டிற்குள் அதன் பயன்பாடு 80 சதவீதமாக இருக்கும் என்றும் பூலும்பெர்க் தரவுகள் காட்டுகிறது.

இந்தியாவில் கரோனா காலத்திற்கு பின் பெட்ரோல் வாகனங்களை விட மின்சார பேட்டரி பொருத்தப்பட்ட சார்ஜ் செய்யும் மின் ஸ்கூட்டர்கள் பயன்படுத்த மக்கள் தொடங்கினர். மின்சார ஸ்கூட்டர் பெட்ரோல் தேவையில்லை , அத்துடன் காற்று மாசு ஏற்படுத்தும் புகையோ அல்லது ஒலி மாசு ஏற்படுத்தும் சத்தமோ கிடையாது.வீட்டில் இருக்கும் மின்சாரம் முலம் மின் ஸ்கூட்டரை எளிதாக பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.

20220410173611183.jpg

இந்தியாவில் மெல்ல மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை 2 சதவீதமாக உயர தொடங்கியது. இந்த நேரத்தில் சில மின்சார பைக்குகள் தீடீரென தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் அதன் விற்பனை கிட்டதட்ட 10 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது என மின்சார ஸ்கூட்டர் விற்பனை அமைப்புகள் கவலையுடன் தெரிவிக்கிறது.

சென்னையை சேர்ந்த கணேஷ் என்பவர் தனது மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்த போது தனது வாகனத்தில் இருந்து தீடீரென புகை வாசனையை கண்டு சாலை ஒரத்தில் தனது வாகனத்தினை நிறுத்தினார்.அடுத்த சில நொடிகளில் தனது கண் எதிரே தனது ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததை சாலையில் வந்த டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் முலம் தீயை அணைக்க முற்பட்ட போது தனது ஸ்கூட்டர் முழவதுமாக எரிந்து சாம்பலாகி போனது கண்டு அதிரிச்சி அடைந்தார்.

அடுத்து,நாசிக் பகுதியில் 20 மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து அதனை லாரியில் ஏற்றி விற்பனை கூடத்திற்கு எடுத்து செல்லும் வழியில் அத்தனை மின்சார ஸ்கூட்டர்களும் லாரியில் எரிந்து சாம்பலாகியது. இந்தியாவில் ஒரே நேரத்தில் 20 மின்சார ஸ்கூட்டர்கள் எரிந்து சம்பலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

20220410173735433.png

வேலூர் சின்ன அல்லா புரத்தில் வசித்து வந்த துரைவர்மா தனது மகளுடன் வீட்டில் இரவில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டு வாசலில் தனது மின்சார ஸ்கூட்டரை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கி விட்டார். நடு இரவில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறி மின்சார ஸ்கூட்டர் பற்றி எரிந்து புகை சூழந்தது. வீட்டின் உள்ளே தூங்கி இருந்த துரைவர்மா தனது மகளுடன் வீட்டில் வாசலில் கொழந்து விட்டு எரியும் மின்சார ஸ்கூட்டரின் தீயிலிருந்து தப்பிக்க பெட்ரும் அருகே இருந்த பாத்ருமில் தஞ்சம் புகுந்தனர். மின்சார ஸ்கூட்டர் பேட்டரியில் இருந்து வந்த புகையினால் தந்தையும் மகளும் முச்சுதிணறி பாத்ருமில் இறந்தனர். இந்த விபத்திற்கு காரணம் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியது என்று தகவல் வெளியானது.

நல்ல முறையில் இயங்கி வந்த மின்சார ஸ்கூட்டர்கள் அடிக்கடி விபத்து எதனால் ஏற்படுகிறது என்று மத்திய அரசு ஆராய தொடங்கியது.அத்துடன் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் மத்திய அரசுஅழைத்து தவறு எங்கே நடக்கிறது என ஆராய தொடங்கியது.

வெளிநாடுகளில் இருந்து மின்சார ஸ்கூட்டர் இயங்குவதற்கு இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள் இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலையான 40C தாக்குபிடிக்கும் வல்லமை இல்லை என தெரிய வந்துள்ளது.அத்துடன் இந்தியாவில் பல சாலைகள் குண்டும் குழியுமான நிலையில் சீரமைக்கபடாமல் இருப்பதும் , அதிக வெப்பநிலை , அதிக குளிர் என மாறி வருவதால் மின்சார ஸ்கூட்டரில் பொருத்தி சார்ஜ் செய்யும் போது அல்லது சார்ஜ் செய்த பின் தீடீரென தீ பிடிக்கிறது என்று முதல் நிலை விசாரணையில் தெரியவந்துள்ளது.

20220410173958901.jpg

சீனா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லித்தியம் பேட்டரிகள் குளிர் பருவநிலையை ஒட்டி தயாரிக்கப்படுகிறது. இந்தியா போன்ற வெப்பநிலை அதிகமாக உள்ள நாடுகளுக்கு இந்த வகையான பேட்டரிகள் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு பேட்டரி சூடாகி தீ விபத்து ஏற்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலும் ஆசிட் உள்ளே செல்கள் வைத்து தயாரிக்கப்படும் பேட்டரிகள் தான் கார்களில் பயன்படுகிறது. மின்சார ஸ்கூட்டரில் பயன்படும் லித்தியம் பேட்டரிகள் 25 -30 டிகிரி வரை நாடுகளில் எந்தவித பிரச்சனையில்லாமல் வேலை செய்யும்.லித்தியம் பேட்டரிகளை பராமரிக்க அதிக கவனத்துடன் தொழில்நுட்பமும், அனுபவம் வாய்ந்த டெக்னிசியன்களும் தற்போது நம்மிடம் இல்லை.இந்தியாவில் உள்ளூர் தயாரிப்பில் நமது காலநிலைக்கு ஏற்றாற் போல் பேட்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மத்திய அரசு க்கப்படுத்தினால் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சாலை எங்கும் பசுமையை பாதிக்காத மின்சார ஸ்கூட்டர்கள் பாதுகாப்புடன் அதிகளவில் பயணிக்கும் என்கின்றனர் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர்.

மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்தும் நபர்கள் வீட்டின் உள்ளே வைத்து மின் இணைப்பில் ரிசார்ஜ் செய்யகூடாது.மின்சார ஸ்கூட்டர் எவ்வளவு நேரம் ரிசார்ஜ் செய்ய வேண்டும் என்று வண்டி தயாரிக்கும் நிறுவனம் சொல்கிறதோ அந்த கால அளவிற்கு மிகாமல் ரிசார்ஜ் செய்ய வேண்டும். மின்சார ஸ்கூட்டரை வரம்புமீறி ரீசார்ஜ் செய்தால் தீவிபத்து ஏற்படும் . மின்சார ஸ்கூட்டரில் பயன்படுத்தும் பேட்டரிகள் சூடானால் அதனை தவிர்க்கும் வெப்ப மேலாண்மை(No Thermal Management) இல்லை என்பது மின்சார ஸ்கூட்டர் தீ பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது என பெங்களுர் சேர்ந்த மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.

20220410174459795.jpg

பெட்ரோலியத்திற்கு மாற்றாக தான் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலுள்ள பேட்டரிகள் முலம் எப்படி வாகனம் தீப்பிடிக்கிறது என்பது குறித்து இப்போதைக்கு பதிலளிக்க இயலாது. மின்சார ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவங்களை கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்களுக்கு தரத்தினை உயர்த்தும் வழிகாட்டல்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆய்வு செய்ய நிபுணர் குழவினை அமைத்துள்ளது.கவன குறைவுடன் மின்சாரத்தில் ரீசார்ஜ் முலம் இயங்கும் வாகனங்கள் இனி வரும் காலங்களில் தீ பிடித்தால் தயாரிப்பு நிறுவனத்தின் மீது கடுமையான தண்டனை அளிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

தரமான பேட்டரிகள் முலம் தயாரிக்கப்படும் மின்சார ஸ்கூட்டர் , மின்சார கார் இனிவரும் ஆண்டுகளில் இந்தியாவின் மிக பிரதானமான வாகனமாக மாறி சாலைகளில் சத்தமின்றி , காற்று மற்றும் ஒலி மாசுபாடு இன்றி இந்தியா மிளிரும் .

ஆக , எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் காலத்தில் இந்தியர்களுக்கு நல்லவராக பயன்படுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!.