தொடர்கள்
கவர் ஸ்டோரி
பற்றி எரியும் பஞ்சு விலை - தடுமாறும் திருப்பூர் -ஸ்வேதா அப்புதாஸ்

கடந்த இரண்டு வருடமாக நூல் விலை ஏற்றத்தால் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் , தொழிலாளர்கள் பெருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள் .

20220413181425331.jpg
இந்த நூல் விலை ஏற்றம் மற்றும் பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் போனால் திருப்பூர் உலக அந்தஸ்தை இழக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை .

20220413181627330.jpg
திருப்பூரில் ஜவுளி பிரின்டிங் தொழிலை நடத்தி வரும் ராஜ்குமார் நம்மிடம் கூறும் போது , "யான் சிட்டி என்று உலகளவில் அழைக்கபடும் திருப்பூர் அந்த பெயரை இழந்து விடும் என்ற பயம் ஏற்பட்டு விட்டது .
இங்கு இயங்கும் நூல் மில்கள் அவங்க சவுகரியத்திற்கு நூல் விலையை ஏற்றி வருவதன் விளைவு ஒட்டு மொத்த திருப்பூர் பனியன் தொழில் முடங்கி போகும் அப்பாயம் ஏற்பட்டுள்ளது .
450 இருந்த நூல் விலை இந்த மாதம் 500 ரூபாய் ஏற்றத்தை தழுவ ஏற்றுமதியாளர்கள் கொதித்து போயுள்ளனர் .

20220413181731962.jpg
ஏற்றுமதியாளர்கள் ஆறு மாதத்திற்கு முன்பே ஆர்டர் கொடுத்து விட்டனர் .அப்பொழுது கொடுத்த விலையை தான் பெற முடியும் .இந்த திடீர் விலை ஏற்றத்தை அவர்களிடம் திணிக்க முடியாது எனவே பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்படுவது உறுதி .


இந்த நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாது மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது தான் வருத்தமான ஒன்று.

TEA - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் TEMA - திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் விலையேற்றத்திற்கான எதிர்ப்பை ஒருவாரம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது .

20220413181843760.jpg
ஒருவாரம் போரட்டம் மிக பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று TEA கலந்து பேசி இரண்டு நாள் போராட்டத்தை அறிவித்துள்ளது 16 மற்றும் 17 ஆம் தேதிகள் .
கடந்த வாரம் கோவை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நூல் விலையேற்றத்திற்கான பாதிப்பை பற்றி பிரதமரிடம் பேசுகிறேன் ஆறு மாதம் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார் .

பஞ்சு ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் .
பங்களா தேஷ் , வியட்நாம் , சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதால் தான் இந்த பாதிப்பு .
உள் நாட்டு உற்பத்தியை நிலை நாட்டாமல் வெளிநாட்டிற்கு உற்பத்தியை ஊக்குவிப்பது எந்த விதத்தில் நியாயம் ..


இப்படியே போகும் பட்சத்தில் ஒரு காலத்தில் திருப்பூர் என்ற யான் சிட்டி இருந்ததாம் அது எங்கே என்ற நிலைமை விரைவில் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை " என்று வருத்தத்துடன் கூறுகிறார் .

" மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ள திருப்பூரை மத்திய அரசு விரைவில் காப்பாற்ற முன் வருமா ?" என்று ஆவேச ஆதங்கத்துடன் பேசினார் ஜவுளி ஏற்றுமதியாளர் ரவீந்திரன் அவர் கூறும் போது ,

20220413182007687.jpg

" முப்பஐயாயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டி தரும் ஒரு அதிசய நகர் தான் எங்கள் திருப்பூர் .இன்று செயற்கையான நூல் விலையேற்றத்தால் முழு அந்நிய செலாவணியை இழக்கும் தருவாயில் தத்தளித்து கொண்டிருக்கிறது. திருப்பூர


ஐரோப்பா , யூ எஸ் ஏ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் மேலும் முப்பதாயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டி தருகிறது .

20220413182541430.jpg
மேலும் பாரம்பரிய மேலாடை மற்றும் உள்ளாடை உற்பத்தியில் உள்நாட்டில் 15 ஆயிரம் கோடி 20 ஆயிரம் கோடி லாபத்தை பெற்று தந்த வண்ணம் இருக்கிறது திருப்பூர் .


இந்த தேவையற்ற நூல் விலை இரண்டு மடங்கு உற்பத்தியை பாதித்து விட்டது என்பது வருத்தமான ஒன்று.

20220413182253951.jpg
இந்த நூல் விலையேற்றத்தால் மிகவும் பாதித்துள்ளது கூலி தொழிலாளர்கள் தான் .அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது .


கடந்த 2021 ஆம் ஆண்டு 30 ஆம் எண் நூல் விலை 210 இருந்தது 440 ஆக உயர்ந்தது தான் இதுவரை குறையாமல் ஏறி கொண்டே இருப்பதால் பின்னலாடை தொழில் தத்தளித்து கொண்டிருக்கிறது .
பங்களா தேஷ் , இந்தினேஷியா ,வேட் நாமுக்கு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்வது தான் நல்லது .

20220413182411730.jpg
பஞ்சு உற்பத்தியில் கோவை தான் முதல் இடத்தை பிடித்தது அதனால் தான் மான்செஸ்டர் ஆஃப் சவுத் இண்டியா என்று அழைக்க பட்டது .தற்போது உள்ள நெருக்கடியில் அந்த பெயர் மறைந்து விடுமோ என்று தோன்றுகிறது .


பருத்தி உற்பத்தியில் இந்தியா முதன்மையில் இருக்கிறது ஆந்திரா , மகாராஷ்டிரா , மத்திய பிரதேஷ் , குஹாரத் , ராஜஸ்தானில் விளைச்சல் இருந்தும் நூல் விலையேற்றம் அபத்தமானது .புயல் , வெள்ளம் , வறட்சியால் விலை ஏற்றம் என்றால் இயற்கை காரணம் என்று சொல்லலாம் .தற்போது ஏற்பட்டுள்ளது செயற்கை தானே இதை மத்திய அரசு சரிசெய்ய வேண்டாமா ?.


மாதத்தின் முதல் நாள் நூல் விலை கிலோவுக்கு 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் உயரும் பின் அடுத்த மாதம் தான் உயர்வு அறிவிக்கப்படும் .


தற்போது 40 ரூபாய் திடீர் என்று உயர்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம் .
இதனால் பாதிக்க படுவது உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல இந்த பின்னலாடை தொழிலை நம்பியுள்ள தொழிலாளிகள் 10 லட்சத்திற்கு மேல் வேலை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது .
ஆறு மாதத்திற்கு முன் எடுத்த ஆர்டர்களின் பேரில் தான் விலை நிர்ணயம் செய்ய முடியும் .நூல் விலையேற்றத்தை காரணம் காட்டி வெளிநாட்டு வியாபாரிகளிடம் விலையேற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு கோடி கணக்கில் நஷ்டத்தை தான் சந்திக்க முடியும் .


வேலை நிறுத்தத்தால் எந்த பயனும் இல்லை .பெரிய முதலாளிகளுக்கு அது லாபம் ..தொழிலாளிகளுக்கு மிக பெரிய நஷ்டம் .

20220413182659326.jpg
திருப்பூர் பின்னலாடை தொழிலை வைத்து கொண்டு மிக பெரிய அரசியல் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது .பாதிக்க பட்டுக்கொண்டிருப்பது எங்களை போன்ற உற்பத்தியாளர்களும் தொழிலாளிகளும் தான் . மத்திய அரசு விறைவில் நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி பஞ்சு ஏற்றுமதியை தடை செய்து லட்ச கணக்கான பின்னலாடை தொழிலாளிகளையும் உற்பத்தியாளர்களை காப்பாற்றுமா?"

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, " நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் 38 தி மு க நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் . நூல் விலையை குறைத்து பஞ்சு இறக்குமதி செய்ய தொடர் அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்
திருப்பூர் யான் சிட்டி அந்தஸ்தை மத்திய அரசு தக்கவைக்குமா .?

வெளிநாட்டு வியாபாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, திருப்பூர் விலை உயர்வு அதிர்ச்சியான விஷயம் தான். இருந்தாலும் திருப்பூரில் உள்ள மனநிலை ஆர்டர் எடுத்த பின் எத்தனை நாள் தாமதமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது. எடுத்த ஆர்டர்களை முன்னமேயே திட்டமிட்ட படி செய்யும் உற்பத்தியாளர்கள் தப்பிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நூல் விலை கொஞ்சம் இறங்கியதும் ஆர்டர் செய்யலாம் என்று காத்திருந்தவர்களுக்கு இது தலையில் இடி விழுந்த மாதிரி தான் என்றார்.

தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் பஞ்சின் விலையை மத்திய அரசு எதாவது செய்து குறைக்கவில்லை என்றால், இந்த தொழிலில் இருப்பவர்களின் வயிறு மட்டும் தான் எரியும்.

இனி அவர்கள் வீட்டில் அடுப்பு எரியாது என்பது தான் சோகம்.