தொடர்கள்
Daily Articles
ஆரோக்கியம் நம் கையில்...!! - 12 - ஆரூர் சுந்தரசேகர்

20210322191939710.jpg

கொரோனா இரண்டாவது அலையின் அச்சம் தமிழகத்தில் பூதாகரமாக உள்ளது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக நமது முன்னோர்கள் சொல்லி கொடுத்த ஆவி என்னும் வியர்வை பிடித்தலை தனந்தோறும் சில தடவைகள் செய்தாலே போதுமானது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில், தினமும் அவ்வபோது வெந்நீர் அருந்துவது நமது தொண்டைக்கு இதாமானது ஆகும். கொரோனா வைரஸ் நமது தொண்டைக்குள் புகுந்து முக்கின் பின்புறம் உள்ள பாராசைனடிஸ் என்ற பகுதியில் 3 முதல் 4 நாட்கள் தங்கி இருக்கும். நாம் வெந்நீர் அருந்தினால் கூட முக்கின் பாரா சைனடிஸ் பகுதியில் ஓளிந்து இருக்கும் கொரோனா வைரஸ் மறைந்து வாழும்.

முக்கின் பாரா சைனடிஸ் உள் பகுதியில் மறைந்து இருக்கும் கொரோனா வைரஸ் 4 அல்லது 5 நாட்கள் கழித்து, மெதுவாக நமது நுரையீரலுக்கு சென்று தங்கி தனது அரக்கத்தனமான வேலையை தொடங்கும். நுரையீரலில் பல்கி பெருகும் கொரோனா வைரஸ், நமக்கு முச்சு திணறலை உண்டாக்கும். தொடர் காய்ச்சல், உடல் வலி, அசதி, இடுப்பு வலி என நம்மை நகர விடாமல் செய்ய தொடங்கும்.

ஆரம்ப நிலையில் கொரோனா வைரஸ் நுரையீரல் சென்று தனது கொடுரத்தை துவங்கியதை உரிய மருத்துவ பரிசோதனை முலம் கண்டறிந்து, சிகிச்சை எடுத்துகொண்டால் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

கொரோனா வைரஸ் நமது முக்கின் பின்புறம் இருக்கும் பாரா சைனடிஸ் பகுதியில் ஓளிந்து இருந்தாலும், தினமும் காலை, மாலை இருவேளைகளில் ஆவி எனும் வேதுபிடித்தல் செய்யும்போது, 50°C ல் கொரோனா வைரஸ் செயலிழந்து விடும். 60°C ஆவி எனும் வேதுபிடிக்கும் போது கொரோனா வைரஸ் மிகவும் வீக்காகி விடும். அதன் பிறகு நமது உடம்பில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் 70°C கொரோனா வைரஸ் உடன் போரிட்டு அழித்துவிடும்.

நீங்கள் வீட்டிலேயே இருந்தால் தினமொரு தடவை ஆவி எனும் வேதுபிடித்தல் நல்லது. நீங்கள் கடைக்கு சென்று காய்கறிகள், அத்தியவசிய உணவு பொருட்களை வாங்கி வந்தபின், தினமும் இருவேளை ஆவி எனும் வேதுபிடித்தல் நல்லது. நீங்கள் முன்கள பணியாளர்களாக பணி செய்தால் தினமும் மூன்று வேளை வியர்வை எனும் வேதுபிடித்தல் மிகவும் நல்லது.

தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சுமார் 5 நிமிடங்கள் ஆவி எனும் வேதுபிடிப்பதை, கொரோனா இரண்டாவது அலை முடியும் வரை தொடர்ந்தால்.. கொரோனா வைரஸிடமிருந்து நாம் தப்பிக்கும் எளிய வழி இது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு, ஆவி எனும் வேதுபிடிக்கும் போது பெற்றோர்கள் உடனிருந்து வழிகாட்டுதல் அவசியம். இதனால் சுடுநீர் பட்டு சிறுவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

நம் கிராமபுறங்களில் கிடைக்கும் நொச்சி இலைகளை சிறிதாக வெட்டி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விட்டு, அதில் வரும் ஆவி எனும் வேதுபிடிக்கும் பிடித்து வந்தால்... நமக்கு ஏற்படும் மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைபாரம், தலைவலி, தலையில் நீர் கோர்த்து இருப்பது அனைத்தும் வியர்வையாக வெளியேறிவிடும். நொச்சி இலைகளை சேமித்து, ஒரு துணிப்பையில் போட்டு மூட்டை கட்டி தலையணை போல தலைக்கு வைத்து தினமும் தூங்கி வந்தால், சைனஸ் பிரச்சனை வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தினமும் ஆவி எனும் வேதுபிடிப்பதை தொடர்வதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதனால் கொரோனா வைரஸ் எனும் அரக்கனை, பூமி பந்தில் இருந்து அகற்றி தூய்மையான காற்றினை சுவாசித்து ஆரோக்கியத்துடன் உயிர் வாழலாம்.