கடந்த வாரம் இறந்து போன இங்கிலாந்து இளவரசர் பிலிப், பண்டிபூர் சரணாலயத்திற்கு விசிட் செய்ததை நினைவு கூறுகிறார்கள் முன்னால் அணு விஞ்ஞானி ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவி கீதா...
“இங்கிலாந்து பிரின்ஸ் பிலிப் இந்தியா வந்த போது, இரண்டு முறை அவரை சந்தித்து பேசும் வாய்ப்பை நாங்கள் பெற்றுள்ளோம்.
கீதா ஸ்ரீநிவாசன் கூறும் போது.. “நான் 1986 ஆம் வருடம், WWF India-வின் மகாராஷ்ட்ரா மற்றும் கோவா பொறுப்பாளராக இருந்த போது, டெல்லியில் சோலே கோட்ரேஜ் WWF India தலைமை இடத்தின் கட்டிடத்திற்கு டொனேஷன் கொடுத்தார்... அந்தக் கட்டிடத்தை திறந்து வைக்க உலக WWF தலைவர் என்ற முறையில் பிரின்ஸ் பிலிப் 1989 ஆம் ஆண்டு டெல்லி வந்தார். அப்பொழுது தான் அவரை சந்தித்தேன். ஒரு அரச குடும்பத்தின் பிரதிநிதி என்ற வித்தியாசம் இல்லாமல், சாதாரன நபர் போல தான் பேசினார்... ஹி இஸ் சோ சிம்பிள்.
பிறகு 1994 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கர்நாடக பந்திப்பூர் சரணாயத்திற்கு வந்திருந்தார்... அப்பொழுது அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதே போல, காட்டினுள் வசிக்கும் ஆதிவாசிகளை அப்படியே விட வேண்டும், தொந்தரவு செய்ய கூடாது... இயற்கை அழகை ஒரு போதும் அழிக்க கூடாது என்று கூறினார். அன்று மாலை... மைசூர், லலிதா மஹாலில் அவருடன் இரவு உணவை உண்டு, இயற்கை பாதுகாப்பை பற்றி நிறைய பேசினோம்... அன்று அவரை சந்தித்த தருணங்கள் இன்று அவரின் மறைவுக்கு பின் நம் கண் முன் வந்து போகிறது. ஒரு விஷயம் எலிசபெத் மகாராணிக்கு ‘A Man behind a Successful women’ என்பது சரியானது... மகாராணி தன் அன்பு கணவரை பிரிந்து இருப்பது வருத்தமான ஒன்று..”
ஸ்ரீனிவாசன் கூறும் போது.. “பிரின்ஸ் பிலிப்பை, இரண்டுமுறை நேரில் சந்தித்துள்ளேன்... ஒரு பிரிட்டிஷ் இளவரசர் போல இல்லாமல், சிம்பிளான மனிதர். பண்டிப்பூரில் வனத்தை ரசித்து கொண்டிருக்கும் போது.. ஒரு கருப்பு கலர் சிறிய பறவை பறந்து செல்ல... அது ட்ரங்கோ பறவை... காக்காவை துரத்தும் திறன் கொண்டது. இப்படிப்பட்ட இயற்கை உயிர்கள், காக்கப்பட வேண்டும் என்று கூறி, நிறைய மிருகங்களை பற்றி பேசியது என் நினைவில் இன்றும் உள்ளது. அவர் சிம்பிள் அன்ட் கிரேட் ராயல் மேன்... அவரின் வயது மூப்பு, இறப்பு, வன இயற்கைக்கு ஒரு இழப்பு” என்று கூறினார்.
நீலகிரி புகை பட பத்திரிகையாளர் ஆர்.ஏ. தாஸ் கூறும் போது...
“பிரின்ஸ் பிலிப், 27 வருடத்திற்கு முன் பண்டிபூர் சரணாலயத்திற்கு வந்த போது நான் புகை படம் எடுக்க சென்றேன். ஒரு பிரிட்டிஷ் இளவரசரை படம் எடுக்க போகிறோம் என்று ரொம்பவே த்ரில்லிங்காக இருந்தது. வன அதிகாரிகள், அவரின் பாதுகாப்பு அதிகாரிகள், பிரிட்டிஷ் மற்றும் நம்ம ஊர் விஐபி-கள் என்று பலர் இருக்க.. அவர் பண்டிபூர் வளர்ப்பு யானைகளின் அருகே சென்று, பார்த்து, தொட்டு பேசினார்... அதைப் படம் எடுக்க, என்னை சிரித்த முகத்துடன் பார்த்து, ஜென்டில் மேன் கம்.. என்று கூப்பிட... சற்று வேர்த்து விட்டது. என்னை அருகில் அழைத்து, “என்னை படம் எடுக்க வேண்டாம், யானையை எடுங்கள்” என்று அவர் என் தோளை தட்டி கொடுத்து பேசியது, இன்னும் என் காதில் கேட்கிறது.”
பிரின்ஸ் பிலிப் டியூக் ஆஃப் எடின்பர்க் இன்று இல்லை... பண்டிபூர் சரணாலயம் மற்றும் மைசூர் லலிதா மஹால் அவர் நினைவில்....
Leave a comment
Upload