தொடர்கள்
தொடர்கள்
பெண் மனதை பேணிக்காப்போம்... - 6 - சுபஸ்ரீ

2021031610360068.jpg

சகோதரிகளே,

உங்களுக்கு நெருக்கமானவர்கள், மன நோய் அல்லது மன அதிர்ச்சி அறிகுறிகளுடன் போராடுவதைப் பார்ப்பது என்பது மனதிற்கு மிகவும் கடினமானதாகவும், இதயத்தைத் பிழிவதாகவும் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு எவ்வாறு சிறந்த உதவியை வழங்குவது மற்றும் ஆதரிப்பது என்பதை அறிவது பெரும்பாலும் கடினமாக இருக்கும்.

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் வித்தியாசமாக இருக்கிறது, சூழ்நிலைகள் பெரிதும் வேறுபடுகின்றன. ஒரு நபருக்கு குறிப்பிட்ட நோயறிதல் இருக்கலாம். அல்லது ஒரு நபர் பேசும் மற்றும் நடந்து கொள்ளும் விதம் குறித்து உங்களுக்கு கவலைகள் இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களை நீங்கள் நன்றாக அறிவீர்கள், எந்த அணுகுமுறை அல்லது ஆதரவு அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இருப்பினும், நீங்கள் நேசிப்பவர்களுக்கு உதவ முயற்சிக்கும்போது, கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் மற்றும் விஷயங்கள் கீழே உள்ளன.

மனநல பிரச்சினைகளின் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்...

உதாரணமாக...

1 . சமூகத் தொடர்புகளிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளுதல்.

2 . பள்ளி, வேலை அல்லது சமூக நடவடிக்கைகளில் செயல்படும் அசாதாரண சிக்கல்கள்.

3 . தூக்கம் மற்றும் பசியின் வியத்தகு மாற்றங்கள் சாத்தியமான அறிகுறிகள்.

4 . அதிகமாக குடிப்பது அல்லது சாப்பிடுவது (எடை அதிகரிப்பு).

நமக்கு ப்ரியமானவர்கள் சாதாரணமாக இல்லை என்பதை நிரூபிக்க இந்த அறிகுறிகள் மட்டும் போதாது. அவர்கள் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்லக்கூடும். ஆனால், நாம் அதிக இரக்கமும் கருணையும் கொண்டவர்களாக இருப்பதற்கான அறிகுறியாகும்.

இதை தொடங்குவது எப்படி?

மிகவும் கடினமான மற்றும் மிக முக்கியமான படிகளில் ஒன்று உரையாடலைத் தொடங்குவதாக இருக்கலாம். உங்கள் அக்கறையையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தவும், அந்த நபருக்காக நீங்கள் இருக்கிறீர்கள்.. அதைப் பற்றி அவர்களிடம் பேச பயப்பட வேண்டாம். நீங்கள் அவர்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளீர்கள், அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உறுதியளியுங்கள்.

“நான்” என்னும் இருப்பை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

உதாரணமாக, “நான் உன்னைப் பற்றி கவலைப்படுகிறேன்… ஒரு ஆலோசகருடன் நீங்கள் பேசுவது அவசியம் என நினைக்கிறன்….” ஆனால், சொல்லக்கூடாத விஷயங்கள் “நீங்கள் எடை போடுகிறீர்கள்.... நீங்கள் எப்பொழுதும் போல் உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும்….” என்பதாகும். எந்தவொரு உறவிலும் இது ஒரு முக்கியமான விஷயாகும். இதை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.

அவர்களிடம் பொறுமையோடு இருங்கள், அக்கறையை காட்டுங்கள். அவர்களின் எண்ணங்களையும், செயல்களையும் கொண்டு அவைகளை பற்றி எந்த முடிவையும் எடுக்காதீர்கள், அவர்கள் சொல்வதை கேளுங்கள். அவர்களின் உணர்வுகளை புறக்கணிக்கவோ, சவால் விடவோ செய்யாதீர்கள்.

அவர்களுக்கு சௌகரியமாக இருப்பதாக உணர்ந்தால், ஒரு மனநல சுகாதார ஆலோசகர் அல்லது அவர்களின் மருத்துவரிடமோ அல்லது சமூக சேவையாளருடனோ பேச அவர்களை ஊக்குவியுங்கள். சிலருக்கு தன் நிலைமையை உடல் ஆரோக்கிய, அக்கறையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது உதவியாக இருக்கும். மேலும் அவர்களிடம், அதை எவ்வாறு கூறவேண்டும் என்றால்... உதாரணமாக, நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் குறித்து அக்கறை இருந்தால், அவர்கள் மருத்துவ உதவியை நாடக்கூடும் அல்லவா? உதவியை நாடுவது பலத்தின் அடையாளம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.

மனநல நிலைமைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி அறிந்துகொள்ள...

இதைப் பற்றிய நிறைய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். நிலைமைகள், அறிகுறிகள், சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் எதிர்பார்ப்பது பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாக புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக உங்கள் அன்புக்குரியவர்களை ஆதரிக்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்களை ஆன்லைனில் பயன்படுத்தவும்.

சாத்தியமான தடைகளை நிவர்த்தி செய்ய உதவுங்கள்...

உதவி தேடும் நபருக்கு, அவர் எதிர்கொள்ளப்போகும் தடைகளை எதிர்பார்த்து, அதை தடுக்க மற்றும் உடைக்க முயற்சிக்கவும். எடுத்துக்காட்டாக.. இதற்கு உதவ உள்ளூர் ஆதாரங்களைப் பற்றி அறியவும். சிகிச்சைக்கான தெரபிஸ்ட், அதற்கான நேரம், இடம் மற்றும் அவர்களின் காப்பீட்டு தொடர்பான சிக்கல்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வதன் மூலம் தனிநபருக்கு அதனால் ஏற்படும் சிக்கலைகளை எளிதாக்கலாம். மேலும், போக்குவரத்து, குழந்தை பராமரிப்பு, குடும்பப் பிரச்சினைகள், வேலை பிரச்சினைகள் போன்றவற்றில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும் உதவலாம்.

உங்களுக்கான ஆதரவைத் தேடுங்கள்...

உங்கள் அன்புக்குரியவருக்கு உதவுவதில், நீங்கள் கவனம் செலுத்துகையில், உங்களை கவனித்துக் கொள்வதும் முக்கியம் - உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும். உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்களே உதவியை அணுகவும். நீங்கள் கொடுக்கக்கூடியவற்றின் வரம்புகளை, அங்கீகரித்து ஒப்புக் கொள்ளுங்கள்.

வலை பதிவாளர் விக்டோரியா மேக்ஸ்வெல் எழுதுகிறார்: “கடுமையான மனச்சோர்வு, பித்து மற்றும் பதட்டம் ஆகியவற்றால் என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, ​​நான் கவலைப்பட்டேன், நிலைமை குறித்து கோபமடைந்தேன். எனது ஏமாற்றங்களையும், காயங்களையும் பற்றி சுதந்திரமாக விவாதிக்கவும், பயமின்றி பேசவும் குடும்பத்திற்கு வெளியே யாராவது தேவைப்பட்டார்கள். ஒரு தகுதி வாய்ந்த தெரபிஸ்டின் தெளிவு, மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தல், முன்கூட்டியே முடிவெடுக்காதிருத்தல், மற்றும் இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் நமக்குள் எழும் உணர்ச்சிகளை பாதுகாப்பாக கையாள்வதற்கான இடத்தை வழங்குகிறது.”

எதிர்பார்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள்:

யதார்த்தமான எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது மிகவும் முக்கியம். மீட்பு என்பது பொதுவாக நேராக முன்னோக்கிச் செல்லும் செயல் முறை அல்ல. அதன் வழியில் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் இருக்கும். சிகிச்சை எடுத்துக்கொள்பவரின் அனுமதியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவுடன் இணைந்து ஆதரவை வழங்க உதவலாம்.

உங்கள் ஆதரவும் செயல்களும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை என்று நீங்கள் உணர்ந்தாலும், அவை உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். நீங்கள் நேசிப்பவர் உங்களை வேதனைப்படுத்தக்கூடும், நீங்கள் அவர்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்பதை தெளிவாக அடையாளம் காண முடியாததால், அவர்களால் பாராட்டுக்களை வெளிப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால், நீங்கள் அவர்களுக்காக இருப்பதை அறிவது அவர்களின் மீட்புக்கு உதவுவதில் முக்கியமானதாக இருக்கும்.

அவர்களுக்காக மட்டுமே அங்கேயே இருங்கள்..!!