தொடர்கள்
பொது
சைக்கிள்  பயணத்தில் “ஆட்டிசம்” விழிப்புணர்வு..! - ஸ்வேதா அப்புதாஸ்

20210316121528481.jpeg

ஆட்டிசம் (Autism) மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு மன மாற்றம்... மன இறுக்கம் என்று கூறப்படுகிறது.. இது ஒரு நோயல்ல என்கின்றனர்... இந்தியாவில் நிறைய பேருக்கு இந்த மன இறுக்கம்... மூளையில் ஒரு மாற்றமாக இருக்கிறது. இப்படிpபட்டவர்கள் சற்று வித்தியாசமாக செயல்களை செய்வார்கள். சில சமயங்களில் ஆபத்தாக கூட முடியலாம். அதற்காக தான் கண்காணிப்பு அவசியம்.

மலையாள திரைப்படமான ‘அதிரன்’ ஆட்டிசம் பற்றி விவரிக்கிறது.
கேரளா - திருச்சூரை சேர்ந்த அருண் ஜித் உன்னிகிருஷ்ணன், தன் 632 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தின் வாயிலாக ‘ஆட்டிசம்’ என்பது நோயல்ல... மனித மூளையில் ஏற்படும் ஒரு மாற்றம் தான் என்பதை விளக்கி, தன் ஊரான திருச்சூரில் இருந்து.. கோழிக்கோடு, ஊட்டி, கோவை என்று தன் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

20210316121558745.jpeg

கோவை நிலம்பூரில் உள்ள பிரபல சைக்கிள் ஷோ ரூமில், அவரைச் சந்தித்து பேசினோம்...

“எனக்கு சிறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம். மிக அதிக தூரம் சைக்கிள் ஓட்டுவது என்பது என்னுடைய பொழுது போக்காக இருந்தது... இதைத் தொடர்ந்து, ஏதாவது ஒரு நல்ல விஷயத்திற்காக சைக்கிள் ஓட்டினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் தான் இந்த நீண்ட விழிப்புணர்வு பயணத்தை தொடர்கிறேன்” என்று கூறும் அருண் ஜித்... கேரளாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் எச்.ஆர். பிரிவில் பணியில் இருக்கிறார்.

கடந்த 8 ஆம் தேதி திருச்சூரில் துவங்கிய சைக்கிள் பயணம், 12 ஆம் தேதி முடிவடைந்தது..

“கேரளா வர்மா கல்லூரியின் பேராசிரியை பானுமதி, ‘AMHA’ என்ற ஒரு ஆதரவு இல்லத்தை கடந்த இருபத்தி ஐந்து வருடமாக நடத்தி வருகிறார். இங்கு இருப்பவர்கள் அனைவரும் ஆட்டிசம், மன இறுக்கம் கொண்டவர்கள். என் தந்தை உன்னிகிருஷ்ணன் வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பின், இந்த சமூக இல்லத்துடன் இணைந்து சேவை செய்து வருகிறார்... இதை பார்த்த பின்... ஏன் நாம் ஒரு சைக்கிள் பயணம் மூலம் இவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது என்று தோன்றி... புறப்பட்டேன்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, திருச்சூரிலுள்ள நான் படித்த சி.எம்.சி. பள்ளி என்னை வழியனுப்பி வைத்தனர்.

20210316121655874.jpeg

திருச்சூரில் இருந்து கோழிக்கோடு சென்று, அங்கு சிட்டி முழுவதும் சுற்றி... பல இடங்களில் ‘ஆட்டிசத்தை’ பற்றி எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திய பின், நிலம்பூரில் ஒரு நீண்ட ரௌண்ட். பின்னர், நாடுகாணி விசிட். பிறகு, கூடலூர். அங்கு பலரை சந்தித்து, ஆட்டிசம் குறித்து பேசிவிட்டு... மலை சாலையில் ஊட்டியை நோக்கி சைக்கிள் பயணம். மலை சாலையில் சைக்கிள் ஓட்டுவது சற்று கடினமாக இருந்தது. திடீர் மழை வேறு... வழியில் எந்த மிருகத்தையும் பார்க்கவில்லை...

யானை லத்தி தான் தென்பட்டது.... சற்று பயம்... பெரிய யானை வந்தால், சைக்கிளை விட்டு விட்டு ஓடி ஒளிந்திருப்பேன். கிரேட் எஸ்கேப் என்று கூறும் அருண்.. பெரிய காட்டெருமையை பார்த்து, நடுங்காமல் சைக்கிளில் ஊட்டி வந்து சேர்ந்துள்ளார்...

2021031612172748.jpeg

ஊட்டி அருமையான ஒரு ஹில் ஸ்டேஷன்... என் சைக்கிள்லுள்ள ‘ஆட்டிசம் போர்டை’ பார்த்து ஏகப்பட்ட பேர் விசாரித்தார்கள். நிறைய பேரை சந்தித்து விஷயத்தை கூற... பலர் சற்று ஆச்சிரியமாகவே பார்த்தனர். அந்த ‘மன இறுக்கம்’ தங்களுக்கும் உண்டா என்ற கேள்வி குறி, அவர்கள் மனதில் எழுந்துள்ளதை உணரமுடிந்தது என்கிறார்...
கோழிக்கோட்டிலிருந்து மலை ஏறி... ஊட்டியிலருந்து சைக்கிளில் மலை இறங்கியது ஒரு த்ரில்லிங் அனுபவம்... வளைந்த மலை சாலையில் அவ்வப்பொழுது பெரிய.. பெரிய லாரிகள் தான் பயமுறுத்துகின்றன.
ஊட்டியில் ஒரு சைக்கிள் expedition போட்டி இருந்தது.... அதில் கலந்து கொள்ள இருந்தேன். கொரோனா அதிகரிப்பால், அது இல்லை.

மீண்டும் ஊட்டி வர பிளான் இருக்கிறது... ஊட்டி சுத்தமில்லா சுற்றுலா தலமாக இருக்கிறது. பிளாஸ்டிக் அதிகம் காணப்படுகிறது. அதை முழுமையாக தடை செய்ய வேண்டும். மேலும், ஊட்டி இன்னும் அதிகமாக சுத்தமாக்கப்பட வேண்டும் என்று கூற.....

ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் இன்னொசன்ட் திவ்வியா, பிளாஸ்டிக் தடையை அமுல் படுத்தி ‘பிளாஸ்ட்டிக் பிரீ’ நீலகிரியை உருவாக்கியுள்ளார். அப்படி இருக்க.. நீங்கள் எப்படி பிளாஸ்டிக் ஊட்டியில் இருப்பதாகக் கூறுகிறீர்கள் என்று கேட்க....

“சில இடங்களில் பிளாஸ்டிக் இருப்பதை நான் பார்த்தேன். ஊட்டி இன்னும் அழகாக, சுத்தமாக மாறவேண்டும்” என்பது என் பார்வை.

உங்க கேரளாவில் பிளாஸ்டிக் கொடிகட்டி பறக்கிறதே அதை விட்டுவிட்டு... ஏன் ஊட்டி பக்கம் உங்கள் பார்வை என்று நாம் கேட்க..

20210316121810432.jpeg

“நான் இயற்கையை அதிகம் நேசிப்பவன். கேரளாவை மட்டும் பார்த்தால், அங்கே சுற்றி விட்டு ஒரு லூலூ மாலை மட்டும் சுற்றி பார்த்து விட்டு, சூப்பர் என்று போய்விடலாம்.... அதை விட்டு விட்டு... 42 ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒரு சைக்கிள் வாங்கி, ஊட்டி வரை ஏன் வந்து, ஆட்டிசம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயணிக்க வேண்டும்... இங்கு தான் அதிகமான சுற்றுலாக்கள் குவிகின்றனர். இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் சுத்தம் இல்லை என்றால், நன்றாக இருக்குமா...

கலெக்டர், நீலகிரியை சுத்தப்படுத்தும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். உள்ளுர் மக்களும் அதை கடை பிடிக்கிறார்கள். வெளியூர் சுற்றுலாக்கள் தான் அதை மீறுகிறார்கள். அவர்களுக்கு விழ்ப்புணர்வை ஏற்படுத்த என் சைக்கிள் பயணம் உதவும் என்ற எண்ணத்தில் மீண்டும் மலையேற இருக்கிறேன்.

இந்த முறை ரோட்டரி கிளப் நண்பர் மனோஜ், மாவட்ட கலெக்டரை பார்க்க உதவி செய்தார். தேர்தல் மற்றும் கொரோனா பிசியால் சந்திக்க முடியவில்லை.. அடுத்த விசிட் வரும்போது அவரை கட்டாயம் சந்திப்பேன் என்று கூறும் அருண்ஜித்... கோவையை ஒரு ரவுண்டு அடித்து விட்டு பாலக்காடு வழியாக திருச்சூர் செல்கிறார்.

ஒரு கல்லூரி மாணவர் போல இருக்கும் அருண்ஜித், திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தந்தை. மனைவி சௌமியா, இவருக்கு ஏகப்பட்ட உற்சாகம் தருவாராம். அவருக்கும் இவருடன் சைக்கிள் பயணம் மேற்கொள்ள ஆவலாம். குடும்பம், குழந்தை, இருப்பதால் முடிவதில்லை.
சைக்கிள் பயணிகளுடன் செல்வது நல்லது மற்றும் பாதுகாப்பானது என்று இருந்தாலும்... தனியாக பயணிப்பது த்ரில்லிங் மற்றும் ‘ஆட்டிசம்’ பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்த இலகுவாக இருக்கும்...” என்றார்.

அடுத்த முறை ஊட்டியில் சந்திப்போம் என்று சொல்லியபடியே... சர்...... என்று கேரளாவை நோக்கி, தன் 18 கியர் சைக்கிளை பெடல் செய்து கொண்டு நெடுஞ்சாலையில் மறைந்தார்.... அருண்ஜித்..... அடுத்த விழிப்புணர்வு சாதனையை நோக்கி....-