தொடர்கள்
Daily Articles
நேசித்த புத்தகங்கள் - 4 - வேங்கடகிருஷ்ணன்

20210114201329524.jpg.

20210207191122884.jpg

தனிமை தவம்

மகாபாரத பெருங்காவியத்தில் முக்கியமானது விராடபருவம், பாண்டவர்கள் மறைந்து வாழ்தல் பற்றியது. இக்கால மனிதர்களுக்கும் இது ஏற்ற ஒன்று. பகவான் கிருஷ்ணனின் துணை கொண்டு ஒவ்வொருவரும் எப்படி தங்கள் தனித்திறமையை உபயோகித்து, அந்த ஒரு வருட அஞ்ஞாதவாசத்தை வெற்றிகரமாய் நிறைவு கொள்கிறார்கள் என்பதே இந்த விராட பருவம். காட்டுவாழ்க்கையை முடித்துவிட்டு தங்களுக்கு பாதுகாப்பான தேசம் எது என்று யோசிக்கும்போது, விராட தேசத்தினை தருபுத்திரர் தேர்ந்தெடுக்கிறார். ஹஸ்தினாபுரத்தினை விட்டு தள்ளி இருக்கிறது, விராட ராஜன் பலவான். அவன் மைத்துனன் கீசகன் நாட்டை எதிரிகளிடமிருந்து தன் பலத்தால் பாதுகாத்து வந்தான். மேலும் விராடன் தர்மம் தெரிந்தவன், எனவே அவன் அமைச்சராக கங்கன் என்ற பெயரில் தர்மரும், மடப்பள்ளியில் விருகோதன் என்ற பெயரில் பீமனும், கோசாலையில் தாமக்ரந்தியாக சகாதேவனும், அஸ்வ சாஸ்திரம் அறிந்த தந்திரிபாலனாய் நகுலனும், அந்தப்புரத்தில் ப்ருஹன்னளையாக அர்ஜுனனும், சைரந்தரியாக திரௌபதியும் மறைந்து வாழ்வதென முடிவு செய்கிறார்கள்.

பாலா இந்த கதையை சகாதேவன் மூலமாய் எடுத்துரைக்கிறார். எப்படி தனிமையை கையாள்வது, மனதை ஒருமுகப்படுத்துவது, தவம் செய்வது என்றால் என்ன... போன்ற நுணுக்கமான விஷயங்களை, தனது சொந்த அனுபவங்களோடு சேர்த்து எளிமையாய் நமக்கு புரிய வைப்பார்.
மேலும், அதனோடு சேர்ந்து விராட பருவக் கதையும் நகரும், கீச்சக வதம் மிக அழகாக சொல்லப்படும். பெண்ணாசை எப்படி நமக்கு அழிவை தேடித் தரும் என்பது விரிவாக விளக்கப்படும்.

பாலாவின் கதை சொல்லும் திறமை முழு வீச்சில் வெளிப்படும் நாவல் இது. திரும்பத் திரும்பப் படிக்க சொல்லும் நடை, நுட்பமாய் பல ஆன்மீக உண்மைகளை எழுத்தினுள்ளே பதியவைத்து செல்லுவார். ஒருமுறைக்கிருமுறை படித்து விளங்கிக்கொள்ள வேண்டிய அற்புதம் இது. எனக்கு மனது ஒரு நிலையில் இல்லாத சமயங்களில் நான் இந்த புத்தகத்தை கையில் எடுத்தவுடனே விராடம் சென்று விடுவேன். விஜய் டிவியில் மஹாபாரதம் பார்த்த பின்பு, அந்த கதாபாத்திரங்களுக்கு ஒரு முகத்தை கொடுக்க முடிவதால் என்னால் இன்னும் அதில் ஆழ்ந்துவிட முடியும். நாவலின் பெயர் மட்டுமல்ல, அதனைப் படிப்பதும் ஒரு “தனிமை(மனித) தவமே”.