உலகளவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நைஜீரியாவில் பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசு இதுதொடர்பான சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்தது. இதற்கென கடந்த 17-ம் தேதி புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.
அதன்படி, ‘பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்களின் முக்கிய பகுதியான ‘ஆணுறுப்பு’ அகற்றப்படும். மேலும், 14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை குழாய் (பெலோபியன்) அகற்றப்படும்’ என அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நைஜீரியாவின் கடுனா மாநில கவர்னர் நசீர் அகமது கூறுகையில். ‘பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கவே இப்புதிய சட்டம்’ என்றார். ஏற்கெனவே பலாத்கார வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 21 ஆண்டு சிறை தண்டனையும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
புதிய சட்டப்படி, ‘பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிறப்புறுப்பு குழாய் அகற்றப்படும். குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை அகற்றப்படும்’ என நசீர் அகமது சீரியஸாக பதிலளித்தார்.
Leave a comment
Upload