தொடர்கள்
Daily Articles
கொரோனாவை கட்டுப்படுத்த... - பார்த்திபராஜ்

20200805165359612.jpg

‘அந்த’ நேரத்திலும் மாஸ்க் போடுங்க...

கனடா நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 1,30,493 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 9,141 பேர் பலியாகியிருக்கின்றனர். பாதிப்புக்கு உள்ளானவர்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.


இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, உடலுறவின்போது தம்பதியர் ‘மாஸ்க்’ அணியும்படி கனடா நாட்டின் தலைமை பொது சுகாதார பெண் அதிகாரி தெரசா டாம் ‘பளிச்’சென தகவல் வெளியிட்டுள்ளார்.


அவர் தனது அறிக்கையில், தம்பதியர் நேருக்கு நேர் தொடர்பு அல்லது நெருக்கத்தை தவிர்ப்பது நலம். தவிர்க்க முடியாத நிலையில், இருவரும் மூக்கு, வாயை மறைக்கும் முகக்கவசம், ஆணுறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மதுபானம் மற்றும் பிற போதை வஸ்துகளின் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும். பாலியல் உறவு விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரசா டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.